Category Archives: கணியம்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – Receptionist to Machine Learning Engineer – Nithya’s Story

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – Receptionist to Machine Learning Engineer – Nithya’s Story குறிப்பு: இந்தப்பதிவில் எதையும் நான் டெக்னிக்கலாக எழுதவில்லை. இந்தத் தலைப்பில் என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களைத் தொகுத்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று வெகு நாட்களாக எண்ணியிருந்தேன். ஆனால் அதை எழுதுவதற்கு முன்னால் ஏதாவது பெரிதாக சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். சமீப காலமாக ஒரு விஷயத்தின் மீது தீராத ஆசை கொண்டு அதற்காக கடுமையாக உழைத்தேன். அதில் வெற்றி… Read More »

மொசில்லா பொதுக்குரல் – அரைமணி நேர அறிமுகக் கூட்டம்

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதின் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி நடக்கவிருக்கிறது. நாள்: 27.02.2022 ஞாயிறு – காலை 9… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 14 – while

இது வரை if elif else பார்த்திருக்கிறோம். இந்தப் பதிவில் while பார்க்கப் போகிறோம். while என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருள் என்ன? எப்போது என்பது! இதை எதற்கு நிரல் மொழிகளில் பயன்படுத்துகிறார்கள்? ஓர் எடுத்துக்காட்டு சொல்கிறேன் பாருங்களேன். 1 என்று ஐந்து முறை அச்சிட வேண்டும் எப்படி நிரல் எழுதுவது? இந்த நிரல் சரியா என்று கேட்டால் மிகச் சரி என்று சொல்ல வேண்டும். இந்த நிரல் தவறா என்று கேட்டால் அப்போதும் ஆமாம் என்று… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 11 – வாங்க பழகலாம்!

இது வரை பார்த்த பதிவுகளில் பைத்தான் நிரலை எப்படி எழுதுவது? உள்ளீடு எப்படிக் கொடுப்பது? அச்சிடுவது எப்படி? என்று பார்த்திருக்கிறோம். ஆனாலும் பைத்தானின் எளிமையை, இனிமையை இன்னும் முழுமையாக நாம் சுவைக்கவில்லை. அதைத் தான் இந்தப் பதிவில் சுவைக்கப் போகிறோம். இரண்டு எண்களில் பெரிய எண் எது? இரண்டு எண்களில் பெரிய எண்ணை எப்படிக் கண்டுபிடிப்பது? 1. முதல் எண்ணை வாங்குங்கள். 2. இரண்டாவது எண்ணை வாங்குங்கள். 3. முதல் எண், இரண்டாவது எண்ணை விடப் பெரியது… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 6 – முதல் முதலாய் நிரல்!

பைத்தானை நிறுவி விட்டோம். சரி! இப்போது நிரல் எழுதத் தொடங்குவோமா! நிரல் எழுதுவது என்றால் 1) முன்னேற்பாடுகள் என்னென்ன செய்ய வேண்டும்? 2) என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்? 3) உண்மையிலேயே பைத்தான் எளிதான மொழி தானா? இப்படிப் பல கேள்விகள் உங்கள் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கலாம். இந்தக் கேள்விகள், குழப்பங்கள் எல்லாமே துளியும் தேவையில்லாதவை. ஆமாம்! பைத்தானைப் படிப்பது என்பது தமிழ் படிப்பது போன்றது. செந்தமிழும் நாப்பழக்கம்! பைத்தானும் அதே பழக்கம் தான்! விண்டோசில் பைத்தான்: விண்டோசில்… Read More »

எளிய தமிழில் 3D Printing 11. அச்சிடுகையில் தாங்கும் பொருட்கள்

உள்கூடான (hollow) பாகங்கள் உற்பத்திக்குத் தாங்கும் பொருட்கள் (Support Substances) இன்றியமையாதவை சிலநேரங்களில் நாம் உள்கூடான பாகங்களை உற்பத்தி செய்ய வேண்டி வரலாம். உருவாக்கும் பாகம் நன்கு இறுகியபின் வலிமையாக இருக்கும். ஆனால் உருக்கிப் புனையும்போது கீழே தாங்கும் பொருட்கள் இல்லையென்றால் வளைந்து உருக்குலைந்து விடும் அல்லவா? இம்மாதிரி பாகங்களை அச்சிடுகையில் தாங்கும் பொருட்கள் அவசியம் தேவை. 3D அச்சிடும் விளிம்புகள் (brims) 3D அச்சிடும் விளிம்பு என்பது பாகத்தின் அடி விளிம்புகளிலிருந்து அச்சுப் படுக்கையில் விரிவடையும்… Read More »

எளிய தமிழில் 3D Printing 10. பொருள்சேர் உற்பத்தியா, பொருள்நீக்கு உற்பத்தியா?

சிக்கலான உள் வடிவியல் கொண்ட பாகங்களுக்கு முப்பரிமாண அச்சிடல் இன்றியமையாதது பொருளை அகற்றுவதற்குப் பதிலாக அடுக்குகளை உருவாக்குவதன் மூலம் பொருள்சேர் உற்பத்தி வேலை செய்கிறது. ஆகவே இத்தொழில்நுட்பம் சுழல் காற்றுக்குழல்கள் (spiral vents) மற்றும் உள்ளுக்குள் உள்ளான கூடுகள் (nested hollow cores) போன்ற சிக்கலான உள் வடிவியல் கொண்ட தயாரிப்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  மேலும் பொருள் நீக்கு உற்பத்தி செயல்முறையில் சில சிக்கலான வடிவமைப்புகளுக்கு இரண்டு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய பாகங்களை… Read More »

எளிய தமிழில் 3D Printing 9. படிவுத் துகளை உருக்கி இணைத்தல்

சிட்டங்கட்டல் (Sintering) முறையில் துகள்களை முழுவதும் திரவமாக உருக்காமல் நமக்குத் தேவையான வடிவத்தை உருவாக்கலாம் என்று பார்த்தோம். உலோகம் போன்ற துகள்களை படிவம் படிவமாக உருக்கி இணைப்பதன் (Powder bed fusion) மூலமும் உருக்கிப் பீச்சுதல் (Material Jetting) மூலமும் நமக்குத் தேவையான வடிவங்களை உருவாக்கலாம். உலோகங்களை இளக்குவதும், கையாளுவதும் மிகக் கடினமான வேலை வெப்பத்தால் இளகும் நெகிழிகள் (thermoplastics) பெரும்பாலும் 110 முதல் 200 பாகை செல்சியசில் இளகத் தொடங்கும். சுமார் 150 முதல் 300… Read More »

எளிய தமிழில் 3D Printing 8. சீரொளி சிட்டங்கட்டல் (laser sintering)

சிட்டங்கட்டல் என்பது துகள்களை முழுவதும் திரவமாக உருக்காமல் வெப்பம் மற்றும் அழுத்தம் கொடுத்து இறுக்குதல் அல்லது கெட்டித்தல் மூலம் ஒரு திடமான பொருளை உருவாக்கும் செயல்முறை. இது துகள்களை ஒன்றாக இணைத்து ஒரு திடமான பாகத்தை உருவாக்குகிறது. சீரொளி தேர்வு சிட்டங்கட்டல் (selective laser sintering – SLS) மற்றும் நேரடி உலோக சீரொளி சிட்டங்கட்டல் (Direct metal laser sintering – DMLS) இதில் அடங்கும். அடிப்படையில் இவை ஒரே மாதிரியானவை. நெகிழி, கண்ணாடி, பீங்கான்… Read More »

எளிய தமிழில் 3D Printing 7. ஒளித் திண்மமாக்கல் (photo-solidification)

பொருள்சேர் உற்பத்திக்கு பலவிதமான செயல்முறைகள் உள்ளன. பாகங்களை உருவாக்க அடுக்குகள் கட்டும் விதத்திலும், பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களிலும்தான் இவை முக்கியமாக வேறுபடுகின்றன. ஒரு இயந்திரத்தை நாம் தேர்ந்தெடுப்பதில் முக்கிய காரணங்கள் அதன் வேகம், அதன் விலை, பாகத்தை  அச்சிட ஆகும் செலவு, எம்மாதிரிப் பொருட்களில் அச்சிட இயலும் ஆகியவையே. இழையை உருக்கிப் புனைதல் தவிர மற்ற சில செயல்முறைகளைப் பற்றிப் பார்ப்போம். ஒளி பட்டால் திண்மமாகும் நெகிழி (photopolymers) திரவங்கள் ஒளி பட்டால் திண்மமாகும் நெகிழி (photopolymers) திரவங்கள்… Read More »