Category Archives: கணியம்

எளிய தமிழில் Pandas-5

Text Processing ஒரு டேட்டாஃப்பிரேம் / சீரீஸில் சேமிக்கப்பட்டுள்ள சொற்களைப் பகுத்துப் பார்த்து ஆய்வு செய்வதற்கு பயன்படும் functions-ஐ இப்பகுதியில் காணலாம். பொதுவாக இதுபோன்ற பங்க்ஷன் சீரீஸின் மீதுதான் செயல்படும். டேட்டாஃப்பிரேமாகவே இருந்தாலும், அதிலிருந்து ஒரு சீரீசை எடுத்து, அதன் மீதுதான் இதுபோன்ற functions-ஐ அப்ளை செய்ய முடியும். இவைகளின் தொகுப்பு பின்வருமாறு. முதலில் மொழிகள் மற்றும் பாடங்களின் பெயர்களைக் கொண்ட இரண்டு சீரீஸ், ஒரு டேட்டாஃப்பிரேமில் சேமிக்கப்படுகிறது. df = pd.DataFrame({‘Languages’: pd.Series([‘Tamil’,’English’]), ‘Subjects’: pd.Series([‘Maths’,’Science’,’Social’])})… Read More: எளிய தமிழில் Pandas-5 »

எளிய தமிழில் Pandas-4

Attributes for Series, Dataframe, Panel பாண்டாஸ் ஆதரிக்கும் இம்மூன்று தரவு வகைகளுக்குமான பண்புகள் என்னென்ன செய்திகளை வெளிப்படுத்துகின்றன என்பது பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.   முதலில் மூன்று வகையிலும் ஒருசில தரவுகளை சேமித்துக் கொள்வோம். s = pd.Series([90,83,67,83,45]) df = pd.DataFrame([[90,83,67,83,45],[68,89,75,56,73],[58,88,60,90,100]]) p = pd.Panel({‘Midterm’: pd.DataFrame([[90,83,67,83,45],[68,89,75,56,73],[58,88,60,90,100]]), ‘Quarterly’: pd.DataFrame([[35,44,65,56,79],[85,55,84,50,99],[65,90,87,69,78]])}) Axes எனும் பண்பு பின்வருமாறு வெளிப்படுத்தும். print (s.axes) [RangeIndex(start=0, stop=5, step=1)] print (df.axes) [RangeIndex(start=0, stop=3, step=1), RangeIndex(start=0, stop=5, step=1)]… Read More: எளிய தமிழில் Pandas-4 »

எளிய தமிழில் VR/AR/MR 24. கல்வி மற்றும் பயிற்சிக்கு MR

AR தொழில்நுட்பம் மெய்நிகர் உருவங்களை நம்முடைய வகுப்பறைக்கே கொண்டுவருகிறது, இதன் விளைவாக, வகுப்புகள் மிகவும் ஊடாடும் அனுபவமாக ஆகின்றன என்று முன்னர் பார்த்தோம். இத்துடன் கலந்த மெய்ம்மையில் (MR) மெய்நிகர் உருவங்களை நகர்த்தவும், கையாளவும் முடியும் என்பதையும் சேர்த்துப் பாருங்கள். இது ஊடாடுதலில் அடுத்த மட்டத்துக்கே நம்மை எடுத்துச் செல்லும். தற்போது அனுபவமிக்க பணியாளர்களே பயிற்சியளிக்கின்றனர் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பணியாளர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பது? ஏற்கனவே அதே வேலையைப் பல ஆண்டுகள் செய்து அனுபவமிக்க பணியாளர்கள்… Read More: எளிய தமிழில் VR/AR/MR 24. கல்வி மற்றும் பயிற்சிக்கு MR »

எளிய தமிழில் Pandas-3

DataFrame creation – Multiple ways   ஒரு டேட்டாஃப்பிரேமை பல்வேறு வழிகளில் உருவாக்கலாம். அறிமுகத்தின் போது ஒரு லிஸ்ட் உள்ளே பல லிஸ்டை கொடுத்து உருவாக்கினோம் அல்லவா! அதேபோல இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் உருவாக்கலாம் என்பதை இப்பகுதியில் காணலாம். அவை பின்வருமாறு. நிரலுக்கான விளக்கம்: From list of dicts முதலில் ஒரு டிக்சனரி மூலம் சீரீஸை உருவாக்குவது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வோம். அப்போதுதான் இதே போல பல சீரீஸை கொடுத்து ஒரு… Read More: எளிய தமிழில் Pandas-3 »

எளிய தமிழில் Pandas-2

Row & Column References   மூன்று மாணவர்கள் மற்றும் ஐந்து பாடங்களை வெறும் எண்களால் குறிப்பிடாமல் அவற்றுக்கான பெயர்களை வைத்துக் குறிப்பிட்டால் அணுகுவதற்கும், புரிந்துகொள்வதற்கும் இன்னும் சுலபமாக இருக்கும் அல்லவா? அதற்காகத்தான் இன்டெக்ஸ் மற்றும் columns ஆகிய பண்புகள் பயன்படுகின்றன. இவைகளைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ள நிரல் பின்வருமாறு. நிரலுக்கான விளக்கம்: முதலில் பின்வருமாறு ஒரு டேட்டாஃப்பிரேமை உருவாக்கிக் கொள்ளவும். l2 = [[90,83,67,83,45],[68,89,75,56,73],[58,88,60,90,100]] df = pd.DataFrame(l2) print (df)    0  1  2 … Read More: எளிய தமிழில் Pandas-2 »

எளிய தமிழில் Pandas-1

Pandas என்பது தரவுகளை வைத்து பல்வேறு ஆய்வினை நிகழ்த்துவதற்கு உதவும் வகையில் தரவினைப் பல்வேறு வடிவங்களில் சேமிக்கப் பயன்படுகிறது. Series, Dataframe, Panel ஆகியவை பாண்டாஸ் பயன்படுத்துகின்ற தரவு வடிவங்களாகும். இவை முறையே ஒருபரிமாண இருபரிமாண மற்றும் முப்பரிமாண வடிவில் அமையும் தரவுகளை சேமிக்கப் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக நமது அரசாங்கத்தில் என்னென்ன துறைகள் உள்ளன என்பதை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக எழுதி சேமிக்க series-ஐப் பயன்படுத்தலாம் (1D data). அதாவது துறைகள் எனும் இந்த ஒரு பரிமாணத்தில்… Read More: எளிய தமிழில் Pandas-1 »

எளிய தமிழில் VR/AR/MR 23. MR உருவாக்கும் கட்டற்ற திறந்தமூலக் கருவிகள்

இந்தத் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் திறன்மிக்க MR தலையணிகளை வெளியிட்டுள்ளன. ஆனால் இவை பெரும்பாலும் மிகவும் விலையுயர்ந்தவையாக உள்ளன. பயிற்சிக்கும், நிரல் எழுதி சோதனை செய்து பார்க்கவும் குறைந்த விலையில் தலையணிகள் இருந்தால் வசதியாக இருக்குமல்லவா? இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக ஹோலோகிட் அட்டைப்பெட்டித் தலையணி (HoloKit Cardboard Headset) மற்றும் அரைசான் AR/MR தலையணி (Aryzon AR/MR Headset) சந்தைக்கு வந்துள்ளன.  ஹோலோகிட் அட்டைப்பெட்டித் தலையணி ஹோலோகிட் திறன்பேசித் திரை அடிப்படையிலான மிகை மற்றும் கலந்த… Read More: எளிய தமிழில் VR/AR/MR 23. MR உருவாக்கும் கட்டற்ற திறந்தமூலக் கருவிகள் »

எளிய தமிழில் VR/AR/MR 22. MR தலையணி (headset) வகைகள்

கலந்த மெய்ம்மை (MR) தலையணிகள் அடிப்படையில் AR போலவே மெய்யுலகத்தில் மெய்நிகர் உருவங்களைச் சேர்க்கவேண்டும். ஆகவே நாம் முந்தைய AR கட்டுரையில் பார்த்த இரண்டு வழிமுறைகளைத் திரும்பப் பார்ப்போம். படத்தில் இடதுபுறம் இருப்பது தோற்ற மெய்ம்மை (VR). மெய்யுலகம் தெரியாது. நாம் முற்றிலும் மெய்நிகர் உலகிலேயே இருப்போம். ஒப்பீடு செய்ய மட்டுமே இதைக் காட்டுகிறோம். ஒளியியல் வழி ஊடுருவும் காட்சி (Optical see through) படத்தில் நடுவில் கண்ணாடி வழியாக வெளியுலகம் தெரியும். கண்ணாடியின்மேல் நாம் மெய்நிகர்… Read More: எளிய தமிழில் VR/AR/MR 22. MR தலையணி (headset) வகைகள் »

எளிய தமிழில் VR/AR/MR 21. கலந்த மெய்ம்மை (Mixed Reality – MR)

ஊடாடும் மிகை மெய்ம்மை (AR) கலந்த மெய்ம்மை (MR) தொழில்நுட்பத்தின் முக்கிய சிறப்பியல்பு என்னவென்றால் நாம் கணினி உதவியுடன் உருவாக்கிய வடிவங்கள் மெய்யுலக சூழலில் உள்ள பொருட்களுடன் நிகழ்நேரத்தில் ஊடாட (interact) இயலும் என்று முன்னரே பார்த்தோம். இதற்கு மாறாக மிகை மெய்ம்மை (AR) தொழில்நுட்பத்தில் இம்மாதிரி ஊடாடல் இயலாது. ஆகவே கலந்த மெய்ம்மையை ஊடாடும் மிகை மெய்ம்மை என்றும் கூறலாம். மெய்யுலகமும் மெய்நிகர் வடிவங்களும் பின்னிப்பிணைந்தவை (intertwined) மெய்யுலகில் மெய்நிகர் பொருட்களை மேலடுக்காக (overlays) மிகை… Read More: எளிய தமிழில் VR/AR/MR 21. கலந்த மெய்ம்மை (Mixed Reality – MR) »

எளிய தமிழில் VR/AR/MR 20. இடஞ்சார்ந்த ஒலி அமைவு (Spatial Audio)

VR/AR/MR க்கு இடஞ்சார்ந்த ஒலி அமைவு ஏன் முக்கியம்? மூழ்கவைக்கும் அனுபவத்துக்கு இடஞ்சார்ந்த ஒலி அமைவும் ஒரு முக்கிய அம்சம். முப்பரிமாணப் படம் அல்லது காணொளியை முன்னும் பின்னும், இடமும் வலமும், மேலும் கீழும் திரும்பி மற்றும் நகர்ந்து பார்க்கும்போது அதற்குத் தோதாகப் படமும் காணொளியும் திரும்புவது மற்றும் நகர்வது மூழ்கவைக்கும் அனுபவத்துக்கு மிக அவசியம் என்று முன்னர் பார்த்தோம். அதேபோல இடஞ்சார்ந்த ஒலி அமைவும் மிக அவசியம். இது நம்முடைய VR/AR காட்சிகளில் மூழ்கவைக்கும் அனுபவத்தை… Read More: எளிய தமிழில் VR/AR/MR 20. இடஞ்சார்ந்த ஒலி அமைவு (Spatial Audio) »