Category Archives: கணியம்

விக்கியினங்கள் தொகுப்பு ஒரு அறிமுகம் – இன்று மாலை 4 மணி

இன்று 28.02.2021, இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் கட்டற்ற கணித்தமிழ்: விக்கியினங்கள் தொகுப்புப்பணிகள் species.wikimedia.org/wiki/Main_Page என்னும் இணையவழி பயிற்சியின் முதலாம் அமர்வினை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன். அன்புடன்,முனைவர் தமிழ்ப்பரிதி மாரி+91-7299397766 பயிற்சியில்_பங்கேற்க:Join Zoom Meetingmoe-singapore.zoom.us/j/87863712875Meeting ID: 878 6371 2875Passcode: 999459 பதிவிற்கு: forms.gle/gCDfWMt9Zsd69GqU6

எளிய தமிழில் VR/AR/MR 9. நிகழ்பட ஆட்டம் மற்றும் வரைகலைப் பொறிகள்

நிகழ்பட ஆட்டம் மற்றும் வரைகலைப் பொறிகள் (Game and graphics engines) ஏன் தேவை? நீங்கள் ஒரு பின்னணியையும் ஒரு உருவத்தையும் தயார் செய்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த உருவம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது போல் அசைவூட்டம் செய்ய வேண்டும். இந்தப் பொறிகள் நீங்கள் கொடுத்த தரவுகளிலிருந்து கால்கள் மற்றும் கைகளின் அசைவு மற்றும் தலை திரும்புதல் போன்ற படங்களைக் கணக்கிட்டு அவற்றை வரைய உதவுகின்றன.  நாம் முன்னர் பார்த்த ஓபன்ஸ்பேஸ்… Read More »

எளிய தமிழில் DevOps-10

Airflow   Airflow என்பது அப்பாச்சி நிறுவனம் வழங்குகின்ற திறந்த மூல மென்பொருள் கருவி ஆகும். கணினியில் நடைபெறும் ஒரு சில செயல்கள் தொடர்ச்சியாக எப்போதெல்லாம் நடைபெற வேண்டும் எனத் திட்டமிடுவது workflow scheduling எனப்படும். இவ்வாறு அதிக அளவில் திட்டமிடப்பட்ட பணிகளின் எண்ணிக்கை உயர உயர அவற்றைக் கண்காணிப்பது கடினமாகி விடுகிறது. இப்பிரச்சினைக்காக Airbnb என்ற நிறுவனம் முதன்முதலில் Airflow என்ற கருவியை உருவாக்கியது. இக்கருவி திட்டமிடப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பல்வேறு பணிகளை UI எனும் இடைமுகப்புத்… Read More »

எளிய தமிழில் DevOps-9

MongoDB MongoDB என்பது திறந்த மூல மென்பொருள் கருவி ஆகும். இது NoSQL-ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்ற டேட்டாபேஸ் சேவையகம் ஆகும். அதாவது அட்டவணைகளில் சேமிக்க இயலாத தரவு அமைப்புகளையும் சேமிக்க வழிவகை செய்யும் டேட்டாபேசுக்கு NoSQL என்று பெயர். இதில் கீழ்க்கண்டவாறு பல்வேறு வகைகள் உள்ளன. Document oriented – MongoDB,CouchDB column oriented – Cassandra,Hbase key value – Redis, Riak graph – Neo4j,GraphDB இவற்றுள் Mongo DB- ஐப் பற்றி… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 8. VR தலையணி (headset) வகைகள்

கணினி அல்லது விளையாட்டு முனையம் (gaming console) VR தலையணி கணினி அல்லது விளையாட்டு முனையத்தில் (game console) ஓடும் விளையாட்டு அல்லது செயலிக்கு காட்சி சாதனமாக செயல்படும் கம்பியால் இணைக்கப்பட்ட தோற்ற மெய்ம்மை (VR) தலையணிகள். எல்லா வேலைகளையும் கணினி அல்லது விளையாட்டு முனையம் செய்து விடும். ஆகையால் தலையணி எடை குறைவாக இருக்கும். ஆனால் கம்பியால் இணைத்திருப்பது தொந்தரவாக இருக்கலாம். திறன்பேசி (smartphone) VR தலையணி திறன்பேசியைப்  பொருத்தக்கூடிய வில்லை (lens) வைத்த அட்டைப்பெட்டி… Read More »

எளிய தமிழில் DevOps-8

Kafka   நிகழ் நேரத்தில் அதிக அளவு உற்பத்தியாகும் (throughput) தரவு ஊட்டங்களை (data feed) குறைந்த காலதாமதத்தில் (low latency) பெற்று ப்ராசஸ் செய்வதற்கான ஒரு கட்டமைப்பே kafka ஆகும். இது scala மொழியில் எழுதப்பட்ட திறந்த மூல மென்பொருள் கருவி ஆகும். ப்ரொடியூசர் கன்ஸ்யூமர் என்னும் இருவேறு அப்ளிகேஷன்களுக்கு இடையே செய்திகளைத் தாங்கிச் செல்லும் இடைத்தரகர் போன்று இக்கருவி செயல்படும். IOT சென்சார் தரவுகள், சேவை மையங்களில் தினசரி மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புகள், ஒரு… Read More »

எளிய தமிழில் DevOps-7

Jenkins   ஒரு மென்பொருள் உருவாக்கத்தின் பல்வேறு நிலைகளான அப்ளிகேஷனின் உருவாக்கம், சோதனை, பல்வேறு சர்வர்களில் நிறுவுதல் போன்ற வெவ்வேறு தனித்தனி செயல்களை தானியக்க முறையில் தொடர்ச்சியாக நிகழ்த்த உதவும் கருவியே ஜென்கின்ஸ் என்று அழைக்கப்படுகிறது. எனவேதான் இது தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு(CI) மற்றும் தொடர்ச்சியான வழங்குதலுக்கான(CD) கருவி என்று அழைக்கப்படுகிறது. டெவலப்பர் ஒவ்வொருமுறை மூல நிரலில் மாற்றம் செய்து கமிட் செய்யும்போதும், அதற்கான அப்ளிகேஷனை சுலபமாக சர்வரில் நிறுவி சோதித்துப் பார்க்க உதவும் ஒரு கருவியாக ஜென்கின்ஸ்… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 7. VR அசைவூட்ட வளங்கள் பதிவிறக்கம்

VR அசைவூட்டங்கள் தயாரிக்க உங்களுக்கு முப்பரிமாண மாதிரிகள் (models), இழையமைப்புகள் (textures) மற்றும் நிழலமைப்புகள் (shaders) போன்ற வளங்கள் தேவை. உங்கள் திட்டத்தையொத்த அசைவூட்டங்களே glTF கோப்பாகக் கிடைத்தாலும் பயனுள்ளதே. இவற்றைத் தங்கள் வேலைகளுக்காகத் தயாரித்த பலர் உரிமக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். தோற்ற மெய்ம்மை (VR) அசைவூட்ட glTF கோப்புகள் நம்முடைய திட்டத்துக்கு அருகாமை அசைவூட்டக் கோப்புகளே திறந்த உரிமங்களில் கிடைத்தால் நம் வேலை எளிதாகக்கூடும்.  glTF கோப்பு வகையை அசைவூட்டத் தொகுப்பிகளில்… Read More »

எளிய தமிழில் DevOps-6

Docker Volume   கீழ்க்கண்ட உதாரணத்தில் என்னென்ன தரவுகள் மங்கோவிற்குள் செலுத்தப்பட்டன என்பதை ஒரு log ஃபைல் போன்று சேமிப்பதற்கான நிரல் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கோப்பு கன்டெய்னருக்குள்ளேயே சேமிக்கப்படும். கண்டெய்னர் தனது இயக்கத்தை நிறுத்தும் போது இதுவும் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. ஆகவே கன்டெய்னருக்குள்ளேயே சேமிக்கப்படும் இதுபோன்ற தரவுகளை வெளியே எடுத்து லோக்கலில் அணுகுவதற்கு volume என்ற ஒன்று பயன்படுகிறது. இதனைக் கையாள்வது பற்றி கம்போஸ் ஃபைலில் பார்க்கலாம். This file contains hidden or bidirectional… Read More »

Anybody Out There – யாரங்கே! – Open Source Creative Community – யூடியூப் வலையொளி – ஓர் அறிமுகம்

பொதுமக்கள் : லினக்சுலாம் யாராவது நிரல் எழுதுறவங்க, கணினி நுட்பத்துறைல உள்ளவங்க, அழகுணர்ச்சியே இல்லாதவங்க பயன்படுத்துறது… நமக்கு எதுக்குப்பா அதெல்லாம்…. திறமூல அன்பர்கள் : KDE, Pantheon (Elementary OS), GNOME, Cinnamon… பொதுமக்கள்: பயன்பாட்டுக்கு எளிமையான வரைகலை பயனர் இடைமுகம் (GUI) இருந்தாலும் லினக்சுல தேவையான பயன்பாட்டு மென்பொருட்கள் இல்லையே…என்ன செய்ய…!? திறமூல அன்பர்கள் : LibreOffice, OnlyOffice, Firefox, VLC… பொதுமக்கள்: அன்றாட பொது பயன்பாட்டுக்கு கச்சிதமா இருக்கு… ஆனா, வரைகலை, ஒலி பகுப்பு,… Read More »