ஆஹா என்னே பொருத்தம் – Cosine Similarity
Cosine Similarity
Cosine Similarity
ஐம்புலன்களில் கண்களை நாம் உயர்வாகக் கருதக்காரணம் நம் வேலைகளைச் செய்யவும், பல இடங்களுக்குச் சென்று வரவும், எழுதப் படிக்கவும் பார்வை இன்றியமையாததாக உள்ளது. மற்ற எல்லாப் புலன்களையும் விட கண்ணால் பார்க்கும் தகவல்களை செயலாக்கவும் சேமிக்கவும் நம் மூளை அதிக இடத்தை ஒதுக்குகிறது. ஆனால் அது ஒழுங்காக வேலை செய்துகொண்டிருக்கும்வரை நாம் நம் கண்களின் அருமையைப் பற்றிப் பெரும்பாலும் யோசிப்பதில்லை. ஒரு படக்கருவி மூலம் எடுத்த படத்தைக் கணினி மூலம் ஆராய்ந்து அதிலுள்ள அம்சங்களைப் பிரித்தெடுத்து அதன்படி… Read More »
வணக்கம், சமிபத்தில் பேரா. தெய்வசுந்தரம் ஐயா, “தமிழ் ஒரு தென்மையும், தொடர்ச்சியும், வளர்ச்சியும் கொண்ட மொழி; இதன் சமகால எழுத்திலக்கணம் ஆராய்ச்சி செய்யப்படவேண்டும்!” என சிறப்பாக அடுத்த தலைமுறையினருக்கு ஒரு இலக்கு வைத்தார். சமிபத்தில் திற்மூல தமிழ் சொல்திருத்தியை உருவாக்க சீனிவாசன் மற்றும் பலர் முயற்சிகள் முன்னெடுத்துவருகிறார்கள். இதனையொட்டி தமிழில் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய மென்பொருட்கள், தரவுகள், திரட்டுகள் மற்றும் தரவுகளை பற்றிய ஒரு மென்பொருள் பட்டியலை தயரித்தும்/திரட்டியுள்ளேன்; github.com/Ezhil-Language-Foundation/awesome-tamil/blob/master/README.md முன்னப்பின்ன இருந்தால் புது தகவல்களை கிட் வழியாகவோ… Read More »
தொழிற்சாலைகளில் தயாரிப்பைப் பொருத்து மின்சாரம், தண்ணீர், நீராவி, எரிவாயு, அழுத்தக் காற்று, டீசல், உலை எரியெண்ணெய் (furnace oil) போன்ற பொதுப்பயன்களை (Utilities) பெரும்பாலும் குழாய்த்தொடர் மூலம் பயன்படுத்துவார்கள். தேவையான வேலைகளுக்கு மட்டுமே தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துகிறோமா என்று எப்படித் தெரியும்? கவனமில்லாமல் தேவையற்றுத் திறந்து விடவில்லை என்று எப்படித் தெரியும்? இவற்றுக்கெல்லாம் பயனளவைக் கண்காணித்தல் (Consumption Monitoring) மிக முக்கியம். முதலீடு அதிகம் செய்யாமல் பல இடங்களில் பயனளவைக் கண்காணிக்க IoT இப்பொழுது வழி… Read More »
சுரங்கப் பணியாளர்களின் உயிர் காக்கும் கேனரி (canary) பறவை சுரங்கங்களில் வேலை செய்பவர்கள் கேனரி போன்ற சிறு பறவைகளைக் கூண்டில் வைத்துக் கையோடு எடுத்துச் செல்வார்களாம். திடீரென்று கார்பன் மோனாக்சைடு (carbon monoxide) அல்லது மீத்தேன் (methane) போன்ற நச்சுவாயு மிகுந்தால் அந்தப் பறவை முதலில் கீச்சிடுதலை நிறுத்தி விட்டுத் துவண்டு விழும். அதைப் பார்த்தவுடன் வெளியே ஓடி வந்துவிடுவார்களாம். இவ்வாறு கேனரி அக்காலத்தில் ஆபத்தை முன்னறிவித்து உயிர் காக்கும் உணரியாக செயல்பட்டது. தொழில்நுட்ப ரீதியான கேனரி… Read More »
தொழிற்சாலைகளில் உற்பத்தியின்போது கீழ்க்கண்ட அம்சங்களை அளவிட சீரொளி உணரிகளைப் பயன்படுத்தலாம்: உளது அல்லது இருப்பது (presence) இடப்பெயர்ச்சி (displacement) தூரம் (distance) இருப்பிடம் (position) தடிப்பளவு (thickness) ஒரு பொருள் இருப்பதையும் (presence) இல்லாததையும் (absence) கண்டறிதல் குறைந்த தூரத்தில் உள்ள ஒரு பொருளைக் கண்டறியக்கூடிய அருகாமை உணரிகளைப் (inductive proximity sensors) பயன்படுத்தலாம். ஒளிமின்னழுத்த (Photoelectric) உணரிகள் ஒரு பொருள் இருப்பது அல்லது இல்லாததைக் கண்டறிய ஒளியைப் பயன்படுத்துகின்றன. ஆனால் கண்ணாடி அல்லது நெகிழி (plastic)… Read More »
பழுதடைந்தவுடன் பராமரித்தல் (Breakdown Maintenance) தொழிற்சாலைகளில் சிலநேரங்களில் எந்திரங்களின் மின்பொறி (electric motor) அளவுக்கு மேல் சூடாகி எரிந்து போய் விடுவது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதிக செலவு செய்து செப்புக்கம்பியை மீள்சுற்று (rewinding) செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல. உறுதி கூறிய நேரத்தில் வேலையை முடித்துக் கொடுக்க இயலாமல் வாடிக்கையாளர்களையும் இழக்க நேரலாம். இதைத் தவிர்க்க என்னென்ன வழிகள் உள்ளன என்று பார்க்கலாம். பழுதடைவதைத் தவிர்க்கப் பராமரித்தல் (Preventive Maintenance) கவனமாக மேலாண்மை செய்யும் நிறுவனங்கள்… Read More »
சொத்துக்களின் பயன்படுத்துதல் (utilization) விழுக்காடு பல நேரங்களில் நிறுவனத்தின் பணியாளர்கள் மரமேடைத்தூக்கி வண்டி (pallet truck) மற்ற உற்பத்தி இயந்திரங்கள் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறுவன உரிமையாளரின் முன்வைப்பார்கள். கைவசம் இருக்கும் ஒப்பந்தங்களைச் செய்து முடிக்க இந்த இயந்திரம் அவசியம் தேவைப்படுகின்றது என்று சொல்வார்கள். ஆனால் ஏற்கனவே இருக்கும் இயந்திரங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்று தெரிந்து கொள்ளாமல் எப்படி மேலும் வாங்குவது? கைக்கருவிகளை யாருக்குக் கொடுத்தோம், எங்கே இருக்கிறது? நாம் சரக்கு மேலாண்மையில் பார்த்ததுபோல… Read More »
சரக்கு மேலாண்மையில் IoT யை கொள்முதல் தொடர் (supply chain) மற்றும் இடைவழியில் கண்காணிக்கவும் (transit tracking) பயன்படுத்தலாம். இங்கு நாம் தொழிற்சாலைக்குள் சரக்கு மேலாண்மை எப்படி செய்வதென்று மட்டும் பார்ப்போம். நாம் முந்தைய இரண்டு கட்டுரைகளில் பார்த்ததுபோல பட்டை மற்றும் கட்டக் குறியீடு (Barcode and QR code) மற்றும் வானலை அடையாளம் (RFID) பயன்படுத்தி சரக்கு மேலாண்மை மென்பொருட்களில் உள்ளீடு செய்வதை எளிதாக்கலாம். தொழிற்சாலையில் சரக்கு வகைகள் தொழிற்சாலைக்குள் இருக்கும் சரக்குகள் கீழ்க்கண்ட விதங்களில்… Read More »
நீங்கள் பெரிய வணிக வளாகங்களிலோ அல்லது மற்ற பெரிய கடைகளிலோ ஒரு ஆடையை வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது பீப் ஒலி கேட்கலாம். திரும்பவும் கடைக்குள் சென்று ஆடையை சோதனை செய்தால் அதில் மாட்டியுள்ள ஒரு சாதனத்தை நீங்கள் வாங்கும் போது எடுக்கத் தவறிவிட்டார்கள் என்று தெரியவரும். அதுதான் வானலை அடையாளம். அருகில் வந்தால் கதவுக்கு இரண்டு பக்கமும் வைத்துள்ள அலைவாங்கிகள் உணர்ந்து ஒலியெழுப்பும். வானலை அடையாளத்தில் இரு வகைகள் இந்த வானலை அடையாளத்தில் இரு வகைகள் உண்டு.… Read More »