Category Archives: பங்களிப்பாளர்கள்

எளிய தமிழில் Car Electronics 5. பொறிக் கட்டுப்பாட்டகம்

பழைய கார்களில் எரிகலப்பியும் (carburetor) நெரிப்பானும் (choke) ECU வருவதற்கு முன் பழைய கார்களில் எரிகலப்பி என்ற சாதனத்தைப் பயன்படுத்தினோம். இது பெட்ரோல் கார்களில் பொறிக்குள் நுழையும் காற்றையும் எரிபொருளையும் கலக்கவும் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது. காற்று-எரிபொருள் கலவை, பற்றவைப்பு நேரம் (ignition timing) மற்றும் செயலற்ற வேகம் (idle speed) போன்றவை இயந்திர (mechanical) வழிமுறையில் கட்டுப்படுத்தப்பட்டன.  பெட்ரோல் திரவமாக உட்செலுத்தப்படுவதால் அது எரியும் முன் ஆவியாக வேண்டும். சூடான பொறியில் இது பிரச்சினையில்லை. ஆனால் குளிர்ந்த… Read More »

நாம்அணுகிடுகின்ற எல்லைக்குள் AI ஐக் கொண்டுவருவதற்காக OpenCV ஐ பயன்படுத்தி கொள்க

தற்போதைய கணினிகளின் காட்சிமுறையினாலும் IoTஎன சுருக்கமாக அழைக்கப் பெறும் பொருட்களுக்கான இணைய பயன்பாட்டினாலும், AI தொழில் நுட்பம் முன்பை விடமிகஎளிதாக அனைவராலும் அணுகக்கூடியதாக மாறிவருகிறது. இந்த OpenCVஎன்பது, கணினியின்காட்சியும் இயந்திரகற்றலிற்குமான ஒரு கட்டற்ற மென்பொருள்நூலகம் ஆகும், இதுசிறியவணிகநிறுவனங்கள்முதல், பெரிய வணிகநிறுவனங்கள்வரை அனைத்து நிறுவனங்களும் AIஐ எளிதில் ஏற்று பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. கணினி காட்சி (Computer vision)என்பது செயற்கை நுண்ணறிவின் (AI) தனியானதொரு துறையாகும், இது நடப்பு உலகசெயல்களில் இருந்து உருவப்படங்களுக்கு அல்லது கானொளிகாட்சிகளுக்கு விளக்கமளிப்பதற்கும் அவற்றை புரிந்து… Read More »

எளிய தமிழில் Car Electronics 4. ஊர்தி இயக்கிகள் தொழில்நுட்பம்

ஊர்தி இயக்கிகள் (actuators) எரிபொருளைக் கட்டுப்படுத்துவது முதல் காற்றுக் குளிர்விப்பு அமைப்பில் காற்றோட்டத்தை இயக்குவது மற்றும் திறன் இருக்கைகளை இயக்குவது வரை பல்வேறு செயல்திறன்களையும் பயணிகளின் வசதிக்கான வேலைகளையும் செய்கின்றன. சில நேரங்களில் நீங்கள் இயக்கிகளைக் கைமுறையாக இயக்கலாம். ஆனால் பெரும்பாலும் கணினிகள் தேவைக்கேற்ப முடிவெடுத்து இவற்றை இயக்குகின்றன. எடுத்துக்காட்டாக, பழைய எரி கலப்பி (carburetor) கார்களில் நீங்கள் முடுக்கியை (accelerator) மிதிக்கும் போது, அது நேரடியாக ஊசிவாய் வாயிலைத் (throttle valve) திறக்கும். இதனால் அதிகக்… Read More »

புதிய பயன்பாட்டு குறிமுறைவரிகளை எழுதுவதற்கான சில சிறந்த நடைமுறைகள்

உயர் செயல்திறன் கொண்ட பயன்பாட்டுக் குறிமுறைவரிகளை எழுதுவதற்கான சிறந்த நடைமுறைகளைச் செயல்படுத்துவதன் மூலம், வணிகநிறுவனங்கள் ஒரு மென்மையான பயன்பாட்டு அனுபவத்தையும், பயனாளர்களின் மகிழ்ச்சியையும் பெறமுடியம் அதனோடு எண்ணிம தளத்தில் தற்போதைய போட்டித்தன்மையுடன் கூடிய நிலையில் தாங்கள் செல்கின்ற வாழ்க்கைக்கான வழிகாட்டுதலையும் தெளிவாக அறிந்துகொள்ளலாம். இன்றைய எண்ணிம யுகத்தில், எந்தவொரு வணிகநிறுவனத்தின் வெற்றிக்கும் சிறப்பாக செயல்படும் செயலி மிக முக்கியமானகருவியாகும். அவ்வாறான செயலியுடனான எந்தவொரு நவீன பயன்பாட்டையும் உருவாக்குவதற்கு குறிமுறைவரிகள் எழுதுவது என்பது இன்றியமையாத செயலாகும், மேலும் நாம்… Read More »

எளிய தமிழில் Car Electronics 3. ஊர்தி உணரிகள் தொழில்நுட்பம்

நாம் ஊர்தியை ஓட்டிச் செல்லும் போது எதிர்பாராத விதமாக ஒரு மாடு குறுக்கே ஓடி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். நம் கண் அதைப் பார்த்து, மூளைக்குச் செய்தியை அனுப்பி, மூளை அதை ஆபத்து என்று அறிந்து நம் கால்களுக்கு “பிரேக்கை அழுத்து” என்று கட்டளை அனுப்பி நிறுத்துவதற்குள் சிறிது நேரம் தாமதமாகிவிடும். நம் கண்கள் அதைப் பார்த்தவுடன், மூளையின் தலையீடு இல்லாமலேயே, நம் கால்கள் பிரேக்கை அழுத்திவிடும். இதைத்தான் அனிச்சைச் செயல் (reflex action) என்று… Read More »

எளிய தமிழில் Car Electronics 2. மின்னணுக் கட்டுப்பாட்டகம்

ஊர்திகளில் மின்னணுக் கட்டுப்பாட்டகம் (Electronic Control Unit – ECU) முதன் முதலில் ஏன், எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்று விவரமாகப் பார்ப்போம். இதை மின்னணுக் கட்டுப்பாட்டுக் கூறு (Electronic Control Module – ECM) என்றும் சொல்கிறார்கள். இதன் மூலம் நாம் இவற்றின் தேவையையும், திறனையும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். பொறிக்குள் பெட்ரோல் காற்றுக் கலவையைத் தேவையான விகிதத்தில் அனுப்பவேண்டும் பொறிக்குள் (engine) எரிதலுக்கு பெட்ரோலும் காற்றிலுள்ள ஆக்ஸிஜனும் தேவை. ஆனால் இந்தக் கலவையைச் சரியான… Read More »

தரவுத்தள மேலாண்மையும், மேம்படுத்துதலும்

தரவுத்தள மேலாண்மை நாம் வாழும் தற்போதைய தரவுகளால் இயக்கப்படும் உலகில், பயனுள்ள தரவுத்தள மேலாண்மை, உகப்பாக்கத்தின்(optimisation) மூலம் அதன் உண்மையான திறனைப் பயன்படுத்துதல் என்பது, நிறுவனங்கள் வளர்ச்சியடைவதற்கும், புதுமைப்படுத்துவதற்கும் , போட்டித்தன்மையை பெறுவதற்கும் செயல்முறைத்திறன்(strategic) கட்டாயமாகிறது. தற்போதைய விரைவான எண்ணிம சகாப்தத்தில், தரவு ஆனதுவணிகங்களின் உயிர்நாடியாக வெளிப்பட்டுள்ளது(emerged), முக்கியமான முடிவெடுக்கும் செயல்முறைகளைத் தூண்டுகிறது, மேலும் வளர்ச்சியைத் தூண்டுகிறது. அதனுடன் பயனுள்ள தரவுத்தள மேலாண்மை , உகப்பாக்கம் ஆகியவை தரவுகளின் உண்மையான திறனைப் பயன்படுத்து வதற்கான முதன்மையான இடத்தில்… Read More »

.தகவல் தொழில்நுட்ப உலகில் உருவாக்க செயற்கைநினைவகம்(Generative AI)எனும் அடுத்த பேரலை -7

உருவாக்க செயற்கைநினைவகம்(Generative AI) உருவாக்க செயற்கைநினைவகம்(Generative AI) ஆனது கணினி தொழில் நுட்பத்தின் தோற்றத்தையே மாற்றவிருக்கின்றது. அதனால்AI இன் வரலாற்றினையும் பல ஆண்டுகளாக அது எவ்வாறு உருவாகிவளர்ந்து வருகின்றது என்பதையும், இது எவ்வாறு உருவாக்கAI தோன்றுவதற்காக வழிவகுத்தது என்பதையும் இந்த கட்டுரையில் சுருக்கமாகப் காண்போம். தற்போது கணினிதொழில்நுட்ப வல்லுநராக இருப்பதற்கு மிகவும் உகந்த காலகட்டமாகும். கணினியின் தகவல் தொழில்நுட்ப வாழ்க்கையானது முதன்மைபொறியமைவுகள், வாடிக்கையாாளர்–சேவையாளர்கள், நிறுவன பயன்பாடுகள் , இணையம், மேககணினி, AI வரை மிகப்பெரிய மாற்றங்களை அனுபவித்துவந்துள்ளது.… Read More »

எளிய தமிழில் Car Electronics 1. உயர் நிலைக் கண்ணோட்டம்

தானுந்து மின்னணுவியல் (Automotive Electronics) இரு சக்கர ஊர்திகள், ஆட்டோ போன்ற மூன்று சக்கர ஊர்திகள் மற்றும் உழவு இயந்திரங்களின் (tractors) உற்பத்தி எண்ணிக்கையில் உலகச் சந்தையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பயணிகள் ஊர்திகளிலும், பேருந்து (bus), சரக்குந்து (truck/lorry) போன்ற வணிக ஊர்திகளிலும் நான்காம் இடத்தில் இருந்தபோதிலும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியால் இவையும் வேகமாக வளர்ந்து வருகின்றன. மேலும் ஊர்திகள் தயாரிப்பின் மொத்தச் செலவில் சுமார் 1 % இருந்த மின்னணு சாதனங்கள் சில ஊர்திகளில்… Read More »

தரவு ஏரிகள் எனும் கருத்தமைவின் கட்டமைப்பும் நன்மைகளும்

தரவு ஏரிகள்(Data Lakes) ஒரு பெரிய அளவிலான தரவு ஆனது சமூக ஊடகங்கள், IoT , தொழில் நுட்பம் ஆகியன போன்றவற்றின் வருகையுடன் இணைந்து உருவாக்கப்பட்டு வளர்ச்சியடைகின்றது. இந்தத் தரவிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பிரித்தெடுப்பதற்காக தரவு ஏரிகளின் கருத்தமைவானது வெளியிடப் பட்டுள்ளது – மேம்படுத்தப்பட்ட தகவமைப்பு , வலுவான தரவு பகுப்பாய்விற்காக. தரவு ஏரி என்பது ஒழுங்கமைக்கப்பட்ட , கட்டமைக்கப்படாத பன்முகத் தரவைச் சேமிப்பதற்கான சேமிப்பகமாகும். இது ஒரு நிறுவனத்திற்குள் மூலத் தரவினை கைபற்றுதல், தூய்மைபடுத்துதல் ,… Read More »