பேராலயமும் சந்தையும் 13. மேலாண்மையும் மேகினாட் கோடும்
1997 ஆம் ஆண்டின் முதலாவதான பேராலயமும் சந்தையும் ஆய்வுக்கட்டுரை முன்னர் உள்ள பார்வையுடன் முடிவடைந்தது. அதாவது இணையம் மூலம் தொடர்புகொள்ளும் நிரலாளர்/புரட்சியாளர்களின் மகிழ்ச்சியான குழுக்கள் வழக்கமான மூடிய மென்பொருளின் கட்டளைமுறை உலகத்தைப் போட்டியில் வெல்லும் மற்றும் மூழ்கடிக்கும். பல அவநம்பிக்கை இயல்பு உள்ளவர்கள் இதை ஏற்கவில்லை. மேலும் அவர்கள் எழுப்பும் கேள்விகள் நியாயமான முறையில் ஈடுபடத் தகுதியானவை. சந்தை வாதத்திற்கான பெரும்பாலான ஆட்சேபனைகள், அதன் ஆதரவாளர்கள் வழக்கமான நிர்வாகத்தின் உற்பத்தித்திறன்-பெருக்க விளைவைக் (productivity-multiplying effect) குறைத்து மதிப்பிட்டுள்ளனர்… Read More »