எளிய தமிழில் CAD/CAM/CAE 20. 2D உருவரைவிலிருந்து CNC நிரல் இயற்றல்
வெட்டுளி ஆரத்தை ஈடு செய்தல் (cutter radius compensation) தகடு, பலகை போன்ற தட்டையான கச்சாப்பொருட்களில் வெளி வடிவத்தை வெட்டுவதை பக்கத்தோற்ற வெட்டு (profile cutting) என்கிறார்கள். உள்பக்கத்தை வெட்டுவதை உட்பள்ள வெட்டு (pocket cutting) என்கிறார்கள். இம்மாதிரி வெட்டை சிஎன்சி உளிக் குடைதல் (CNC Router) பயன்படுத்திச் செய்ய வேண்டுமென்றால் G நிரலில் நாம் படத்தில் கண்டவாறு வெட்டுளி ஆரத்தை ஈடு செய்ய வேண்டும். வழக்கமான துருவல் என்றால் G42 நிரல் பயன்படுத்த வேண்டும். ஏறு… Read More »