Category Archives: கணியம்

jQuery- வலைத்தளப் பக்கங்களில் உள்ளவற்றை மாற்றுதல்

jQuery மூலம் வலைத்தளப் பக்கங்களில் உள்ளவற்றை மாற்றி அமைக்க முடியும். படங்கள், படிவங்கள், செய்திகள் போன்ற அனைத்து விதமான விஷயங்களையும் jQuery-மூலம் அணுகவோ மாற்றி அமைக்கவோ முடியும். இவை ஒவ்வொன்றும் விவரமாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. attr( ) மூலம் பண்புகளை மாற்றியமைத்தல் jQuery மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு object-ஐ attr() எனும் பண்பின் மூலம் நாம் விரும்பிய வகையில் மாற்றி அமைக்க முடியும். கீழ்க்கண்ட எடுத்துக்காட்டில் “Modify Image” பொத்தானை சொடுக்கும்போது வேறொரு படம் திரையில் வெளிப்படுமாறும்,… Read More »

jQuery – CSS – Animations

Jquery CSS-ஐ கையாளும் விதம் CSS என்பது HTML மூலம் உருவாக்கப்படும் பக்கங்களை இன்னும் அழகு படுத்த உதவும். அதாவது எழுத்துக்களின் வகைகள், நிறங்கள், பின்புற வண்ணங்கள் போன்ற பல்வேறு வகையான அழகு சார்ந்த விஷயங்களை ஒருசேர தொகுத்துக் கொடுக்க இந்த css உதவும். “அழகிய பக்கங்களின் ஊற்று” என்பதே “Cascading style sheets” என்பதன் தமிழாக்கம் ஆகும். இதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள www.kaniyam.com/learn-css-in-tamil-ebook/ எனும் முகவரியை பார்க்கவும். இதுபோன்ற css பண்புகளின் மீது… Read More »

jQuery-ன் அணுகுமுறைகள்

வலைத்தளப் பக்கங்களை உருவாக்குவதற்கு உதவிய பலதரப்பட்ட html tags-ஐ எவ்வாறு jQuery மூலம் பல்வேறு முறைகளில் அணுகுவது என்று இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம். பின்வரும் எடுத்துக்காட்டில் அனைத்து வகையான tags-ஐயும் பயன்படுத்தி ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் Desired Changes எனும் பொத்தானை சொடுக்கும்போது அவைகள் jQuery மூலம் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு tag-ம் ஒவ்வொரு விதத்தில் jQuery-மூலம் அழைக்கப்பட்டு ஒவ்வொரு வகையான மாற்றங்களை நிகழ்த்துகின்றன. இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு எடுத்துக்காட்டு… Read More »

jQuery-ஓர் அறிமுகம்

jQuery என்பது Javascript-ஐ மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு framework ஆகும். வரிவரியாக நிரல்களை எழுதி Javascript செய்யும் ஒருசில வேலைகளை jQuery- ஆனது சுலபமாகச் செய்துவிடும். அதாவது ஒரு வேலையை செய்வதற்கு பக்கம் பக்கமாக javascript-ல் நிரல்கள் தேவைப்படின், அவை அனைத்தும் jQuery-ன் ஒரு method-க்குள் அடங்கிவிடும். எனவே அந்த method-ஐ மட்டும் அழைத்து இயக்கினால் போதுமானது. சுருங்க நிரல் அடித்து விரிவான வேலைகளை செய்து முடிக்கும் சிறப்பினை jQuery பெறுகிறது. இது வலைத்தளப் பக்கங்களின்… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 21. திறந்த மூல மென்பொருளை வைத்து வணிகம் செய்வது எப்படி

எவரும் தங்கள் முதல் அனுபவத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று சொல்கிறார்கள். என்னைப் பொருத்தவரை என்னுடைய நிறுவனம் லூசிட்ஒர்க்ஸ் (Lucidworks) 2008 ல் முதல் சுற்று துணிகர முதலீடு பெற்றிருந்தது, எங்கள் முதல் விற்பனையாளர் பணியமர்த்தப்பட்டிருந்தார். அபாச்சி சோலார் (Apache Solr) ல் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு உதவி தேடும் ஒரு வருங்கால வாடிக்கையாளருடன் தொலைபேசி அழைப்பில் பேசக் கூறினர். அழைப்பின் போது, பல சிக்கலான கேள்விகளை வருங்கால வாடிக்கையாளர்கள் என்னிடம் கேட்டார்கள். பேசி முடித்தபின் எல்லாக்… Read More »

கிட்ஹப் இல் ஒரு திறந்த மூல திட்டத்துக்கு எவ்வாறு பங்களிப்பது என்பதை படிப்படியாக விளக்கும் பயிற்சி

கிட்ஹப் (GitHub) இல் திறந்த மூல திட்டத்துக்கு பங்களிப்பது இழு கோரிக்கை (pull request) மூலம் நடைபெறுகிறது. இழு கோரிக்கை என்பது அடிப்படையில் ஒரு குறுநிரல்தான். இது மேலும் தகவலை உள்ளடக்குகிறது மற்றும் உறுப்பினர்கள் அதை வலைத்தளத்தில் விவாதிக்க வழி செய்கிறது. டேவிட் கப்போலா (Davide Coppola) எவ்வாறு பங்களிப்பது என்பதை படிப்படியாக இந்தப் பயிற்சியில் விளக்குகிறார்.  நீங்கள் பங்களிக்க விரும்பும் திட்டத்தை தேர்வு செய்யவும் புதிய பங்களிப்பாளர்களை திட்டத்தில் சேர ஊக்குவிக்க சில நேரங்களில் திட்ட பராமரிப்பாளர்கள்… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 20. திட்டங்களைத் தேடுவதை நிறுத்தி விட்டு வழுக்களைத் தேடுங்கள்

திறந்த மூலத்தில் புதிதாகத் தொடங்கும்போது இம்மாதிரி கேள்விகள் உங்களுக்குத் தோன்றும்: எனக்கு இன்ன நிரலாக்க மொழி தெரியும். உதவி செய்வதன்மூலம் அதன் நடைமுறைகளில் பயிற்சி பெற விரும்புகிறேன். நான் பங்களிக்கக் கூடிய திறந்த மூலத் திட்டத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? ம்ம் … எங்கு தொடங்குவது என்று தெரியவில்லையே. இது சிக்கலானதாகத் தோன்றுகிறதே. நான் இதே கேள்வியை பல நிரலாளர்களிடம் திரும்பத்திரும்பக் கேட்டுள்ளேன். அவர்களின் பதில்களை மூன்று வகைப்படுத்தலாம்: அணுகுமுறை # 1: நீங்கள் விரும்பும் ஒரு மென்பொருளுக்கு… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 19. வணிக மென்பொருளை திறந்த மூலமாக வெளியிட்டோம்!

நான் ஒரு தனியார் மென்பொருள் விற்பனை மற்றும் ஆலோசனை நிறுவனத்தில் வேலை செய்கிறேன். நிதி நிறுவனங்களுக்கான மென்பொருள் தயாரிப்புகள் செய்வது எங்கள் நிறுவனத்தின் குறிக்கோள். இவற்றில் நிதி நடவடிக்கைகளை செயல்படுத்தும் ஃபின்டிபி (FinTP) செயலியும் ஒன்று. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்களுடைய சாதனைகளையும் அறிவையும் பகிர்ந்து கொள்ள இச்செயலியை ஒரு திறந்த மூல உரிமத்தின் கீழ் வெளியிட எங்கள் நிறுவனம் முடிவு செய்தது. பாரம்பரிய வணிக முறையிலிருந்து மாற்றம் செய்து திறந்த மூலத்தை ஆதரிக்கும் ஒரு வணிக… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 18. கரடுமுரடான பாதையில் ஒரு கற்றுக்குட்டியின் பயணம்

திறந்த மூலத்துக்கு எவ்வாறு பங்களிப்பது என்று அறிவுரை தேடி இந்தக் கட்டுரைக்கு வந்தீர்களா? இணையத்தில் இந்தக் கதைகள் பல உள்ளன, அல்லவா? சில காலமாக நீங்கள் பங்களிப்புத் தொடங்குவதற்கு முயற்சித்து வருகிறீர்கள். ஆகவே இதைப்பற்றி நீங்கள் நிறையப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படியும் தெளிவு பிறக்கவில்லை என நீங்கள் நினைக்கலாம். எனக்கு அந்த உணர்வு புரிகிறது. நான் ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை அதே நிலையில்தான் இருந்தேன். அது பற்றிய என் கதையைச் சொல்கிறேன். கற்றுக்குட்டி நாட்டில் முட்டி… Read More »

Form Validations, Javascript Objects & Animations

11 தகவல்களை சோதித்தல் ஒரு விண்ணப்பப் படிவத்தை நாம் பூர்த்தி செய்துவிட்டு Submit பொத்தானை சொடுக்கினால், உலாவியானது நாம் கொடுத்த விவரங்களை server-க்கு அனுப்புவதற்கு முன்னர், எல்லாம் சரியாக உள்ளதா எனச் சோதிக்கும். ஏதாவது விவரங்களை நாம் கொடுக்கத் தவறியிருந்தாலோ அல்லது தவறுதலாகக் கொடுத்திருந்தாலோ, உலாவியானது ஒரு popup மூலம் அதனை நமக்குத் தெரியப்படுத்தும். சரியான விவரங்களைக் கொடுத்து முழுவதுமாக படிவத்தைப் பூர்த்தி செய்யும்வரை, எந்த ஒரு விவரத்தையும் server-க்கு அனுப்பாது. இதுவே  Client side validations… Read More »