Category Archives: முத்து

பைத்தான் படிக்கலாம் வாங்க! 6 – முதல் முதலாய் நிரல்!

பைத்தானை நிறுவி விட்டோம். சரி! இப்போது நிரல் எழுதத் தொடங்குவோமா! நிரல் எழுதுவது என்றால் 1) முன்னேற்பாடுகள் என்னென்ன செய்ய வேண்டும்? 2) என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்? 3) உண்மையிலேயே பைத்தான் எளிதான மொழி தானா? இப்படிப் பல கேள்விகள் உங்கள் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கலாம். இந்தக் கேள்விகள், குழப்பங்கள் எல்லாமே துளியும் தேவையில்லாதவை. ஆமாம்! பைத்தானைப் படிப்பது என்பது தமிழ் படிப்பது போன்றது. செந்தமிழும் நாப்பழக்கம்! பைத்தானும் அதே பழக்கம் தான்! விண்டோசில் பைத்தான்: விண்டோசில்… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 5 – விண்டோசில் பைத்தான் நிறுவல்

) முதலில் www.python.org/downloads/ தளத்திற்குப் போய் அண்மைய பதிப்பைச் சொடுக்கித் தரவிறக்கிக் கொள்ளுங்கள். (இப்போதைக்கு 3.10.1) 2) தரவிறக்கிய கோப்பைச் சொடுக்கி, “Install Now” என்பதைக் கொடுப்பதற்கு முன், கடைசியில் இருக்கும் “Add Python 3.10 to Path” என்பதைத் தேர்ந்து கொள்ளுங்கள். (குறிப்பு: மேல் உள்ள படத்தில் Add Python 3.10 to Path” தேர்ந்திருக்க வேண்டும்.  விடுபட்டிருக்கிறது) 3) பிறகு, “Install Now” என்பதைச் சொடுக்கினால் போதும். 4) இப்படியாகப் பைத்தான் நிறுவல் தொடங்கி… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 4 – லினக்சில் பைத்தான் நிறுவல்

பைத்தானின் எளிமையையும் இனிமையையும் எவ்வளவு நாள் தான் எட்ட நின்றே சுவைத்துக் கொண்டிருப்பது? நம்முடைய கணினியில் பைத்தானை நிறுவினால் தானே, “கண்ணே கலைமானே” என்று பைத்தானைப் பார்த்துப் பாட முடியும்! பைத்தான் நிறுவலை லினக்சில் இருந்து தொடங்குவோம். “எடுத்த எடுப்பிலேயே லினக்ஸ் இயங்குதளத்திற்குப் போய் விட்டீர்கள். நாங்கள் எல்லோரும் விண்டோஸ் அல்லவா வைத்திருக்கிறோம்” என்கிறீர்களா? நிரலர் (டெவலப்பர்)க்குரிய ஒரு பால பாடம் சொல்லி விடுகிறேன் – நல்ல கணினியாளராக மாற விரும்பும் ஒவ்வொருவரும் கட்டற்ற மென்பொருளாகிய லினக்ஸ்… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 3 – எளிமையே இனிமை!

“பைத்தானைப் பற்றிய உங்களுடைய முந்தைய இரண்டு பதிவுகளைப் பார்த்தேன். உண்மையில் பைத்தான் அவ்வளவு எளிதான மொழியா? புதியவர்களைப் பைத்தான் பக்கம் இழுக்க நீங்கள் செய்யும் விளம்பர உத்தி தானே அது?” என்று ஒரு நண்பர் கேட்டார். “விளம்பரங்களைக் கண்டு அப்படியே நம்பும் காலம் எல்லாம் மலையேறிப் போச்சு நண்பரே! நம்முடைய காலத்தில் ஒரு நடிகர் நடித்தாலே படத்திற்குப் போவோம். இப்போதுள்ள இளைஞர்கள் அப்படியா? நடிகர் யார்? இயக்குநர் யார்? ஒளிப்பதிவு யார்? என்று அக்கு வேறு ஆணிவேறாக… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 1

பைத்தான் படிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாட்களாகவே என்னுள் இருந்த சிந்தனை. கல்லூரி படித்த காலங்களில் சி++, ஜாவா ஆகிய இரண்டையும் பாடமாகவே படித்திருந்தேன். ஆனாலும் அவை இரண்டும் பெரிய அளவில் மனத்தில் நிற்கவில்லை. செயலிலும் அப்படித்தான் வெளிப்பட்டது. வேலை பார்த்த நாட்களில் ஜாவா மிகப் பெரிய அளவில் எனக்குத் தேவையாக இருந்தது. வேலையைத் தக்க வைப்பதற்கே ஜாவா வேண்டும் என்னும் நாட்களில் எப்படியாவது ஜாவாவைக் கரைத்துக் குடித்து விட வேண்டும் என்று ஜாவா கம்ப்ளீட்… Read More »

மொசில்லா பொதுக்குரல் திட்டம் – அரைமணிநேர அறிமுகக் கூட்டம் – 26 செப்டம்பர் 2021

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதின் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி நடக்கவிருக்கிறது. நாள்: 26.09.2021 ஞாயிறு – காலை 10… Read More »

மொசில்லா பொதுக்குரல் திட்டம் – இன்று காலை அரைமணிநேர அறிமுகக் கூட்டம்

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதின் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இன்று இணையவழி நடக்கவிருக்கிறது. நாள்: 29.08.2021 ஞாயிறு – காலை… Read More »

லேங்ஸ்கேப் நிறுவனம் – பயிலகம், கணியம் இணைந்து நடத்தும் ஜேங்கோ(DJango) இலவச இணையவழிப் பயிற்சிகள்

மொழிபெயர்ப்புத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான லேங்ஸ்கேப்(Langscape) நிறுவனம், பயிலகம், கணியம் ஆகியவற்றுடன் இணைந்து பைத்தான் ஜேங்கோ(DJango) பயிற்சிகளை இலவசமாக நடத்த முன்வந்துள்ளது. பயிற்சி இணையவழி இரண்டு (கூடினால் மூன்று) வாரங்கள் நடத்தப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள, பைத்தான் அடிப்படைகள் தெரிந்திருத்தல் கட்டாயம். ஒவ்வொரு நாளும் பயிற்சி நேரம் தவிர, ஓரிரு மணிநேரங்கள் பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும். பயிற்சி தொடங்கும் நாள்: பிப்ரவரி 11, 2021 நேரம்: பிற்பகல் 2 – 3.30 இந்திய நேரம் பயிற்சியில்… Read More »

லேங்க்ஸ்கேப் – பயிலகம் வழி நடத்தும் ஒரு மாத இலவச இணையவழி பைத்தான் பயிற்சி

லேங்க்ஸ்கேப் நிறுவனம் முன்னெடுக்கும் இலவசப் பைத்தான் பயிற்சிகள் பயிலகம் பயிற்றுநர்கள் மூலம் தமிழ் வழியில் நடத்தப்படுகிறது. ஒரு மாதம் (திங்கள் – சனி வரை) இப்பயிற்சி நடத்தப்படும். பைத்தான், ஜேங்கோ(Django) ஆகியன பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் இவ்வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமும் நேரமும் உள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். பயிற்சியை முறையாக முடிப்பவர்களுக்கு, லேங்க்ஸ்கேப் நிறுவனத்தின் பணி வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளில் வாய்ப்பு தரப்படும். * பயிற்சி முற்றிலும் இலவசமா? ஆம். முற்றிலும் இலவசம். *… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – நேரலை வகுப்புகள்

இன்று முதல், பயிலகம் யூடியூப் பக்கத்தில் இந்திய நேரம் ஏழு மணி முதல் எட்டு மணி வரை, சாப்ட்வேர் டெஸ்டிங் (Manual Testing) வகுப்புகள் நேரலையாக ஒளிபரப்பப்படவிருக்கின்றன.  விருப்பமுடைய நண்பர்கள் கலந்து கொள்ளலாம். இணைந்து கொள்ள: www.youtube.com/channel/UCdw_PocG9G8-y4f6wYkz8og பயிற்றுநர்: கி. முத்துராமலிங்கம், பயிலகம்.