Category Archives: பங்களிப்பாளர்கள்

பைத்தான் – os module – வினா 8 விடை 8

பைத்தானின் முதன்மையான நிரல்கூறு(module)களுள் ஒன்று os என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தப் பதிவில், அதில் அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சில செயல்கூறுகளை(functions)ப் பார்க்கலாமா! os நிரல்கூற்றை முதலில் உங்கள் கணினியில் இறக்கிக் கொள்ளுங்கள். அதாவது, import os அவ்வளவு தான்! வினா 1: நான் இருக்கும் அடைவைப் பைத்தானில் பார்ப்பது எப்படி? os.getcwd() cwd என்பது Current Working Directory என்பதன் சுருக்கம். அதாவது இப்போது நீங்கள் எந்த அடைவில்(directory) இருக்கிறீர்கள் என்பதைக் காட்டும். வினா… Read More »

லினக்ஸ் மின்ட் அடிப்படை -நச்னு நாலு கட்டளைகள்

லினக்ஸ் மின்ட் பயன்படுத்தத் தொடங்கிய தொடக்க நாட்களில் கணினி பற்றிய தகவல்கள்(OS, Processor, RAM ஆகியன பற்றி) எப்படி, எங்கே பார்ப்பது எனத் தேடிக் கொண்டிருந்தேன். அவற்றின் சுருக்கம் தான் இங்கே! சின்னச் சின்ன சில கட்டளைகளைத் தெரிந்து கொண்டாலே போதுமானது! பல செய்திகளைத் தெரிந்து கொள்ள முடியும். டெர்மினலைத் திறந்து கொள்ளுங்கள். கட்டளை #1: வன்பொருள் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள, sudo lshw இப்போது பல தகவல்கள் தரப்பட்டிருக்கும். அவற்றை ஒழுங்குபடுத்தி, அட்டவணை வடிவத்தில்… Read More »

இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி வகுப்பு – வேலை இழந்து திரும்பி வரும் அயலகத் தமிழர்களுக்கு முன்னுரிமை

கொரோனா தொற்றுக் காலத்தில் தொடர்ந்த ஊரடங்கு காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.  இந்த நேரத்தில் சவுதி, மலேசியா முதலிய நாடுகளில் குறைந்த கூலிக்கு வேலைக்குப் போன பட்டப்படிப்பு முடிக்காத பல தமிழர்கள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள் என்னும் செய்தி தொடர்ந்து செய்தித்தாள்களில் வந்த வண்ணம் இருக்கின்றன.  தாயகம் திரும்பும் அவர்களுக்கு, இங்கும் உடனடியாக எந்த வேலைக்கான சூழலும் இல்லை என்பதும் கசப்பான உண்மையாக இருக்கிறது.  இந்தச் சூழலில் தாயகம்… Read More »

எளிய தமிழில் Computer Vision 7. கட்டற்ற திறந்தமூல பைதான் மென்பொருட்கள்

படங்களை வைத்து எந்த வேலை செய்ய வேண்டுமென்றாலும் நாம் எண் சார்ந்த செயல்பாடுகள், அதிலும் குறிப்பாக அணி (array), தளவணி (matrix) சார்ந்த செயல்பாடுகள் வெகுவாகச் செய்யவேண்டியிருக்கும் என்று முந்தைய கட்டுரையில் பார்த்தோம். இதற்கு நமக்கு அணி மற்றும் தளவணிகளைக் கையாளும் நிரலகங்கள் தேவை. பைதான் நிரல் மொழியில் வேலை செய்யும்போது நாம் பகுப்பாய்வு செய்யவேண்டிய படத்தை ஸ்கிமேஜ் (Skimage) பயன்படுத்தி ஏற்றலாம், நம்-பை (Numpy) பயன்படுத்தி செயல்படுத்தலாம் மற்றும் மேட்பிளாட்லிப் (Matplotlib) பயன்படுத்திக் காட்டலாம். இவற்றைப்… Read More »

Dark Pattern – ஓர் அறிமுகம்

முதலில் Dark Pattern என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். நாம் எல்லோருமே இணையத்தில் பல தளங்களைப் பயன்படுத்துகிறோம். அலைபேசியில் பல செயலிகளைப் பயன்படுத்துகிறோம். இந்தத் தளங்கள், செயலிகள் – நமக்குத் தெரியாமலே நம்மை ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுத்துவது தான் Dark Pattern என்பது! அதென்ன நமக்குத் தெரியாமலே நம்மை ஏதாவது ஈடுபடுத்துவது என்பது? அமேசான் முதலிய இணைய வணிகத்தளங்களில் பொருட்கள் வாங்க முயன்றால், பல நேரங்களில் இந்தப் பொருளோடு இன்னொரு பொருளையும் சேர்த்து விலையைக்… Read More »

லினக்ஸ் மின்டில் செலினியம் வெப் டிரைவர்,பயர்பாக்ஸ் டிரைவர் – பைத்தானுக்கு நிறுவுவது எப்படி?

செலினியம் திட்டப்பணி செய்வதில் தொடக்க நிலையில் இருப்பவர்கள், செலினியம் வெப் டிரைவர், பயர்பாக்ஸ் டிரைவர் ஆகியவற்றை லினக்ஸ் மின்டில் நிறுவுவது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். லினக்சில் மென்பொருள் நிறுவல் என்பது மிக மிக எளிமையான ஒன்று. டெர்மினலைத் திறந்து கொள்ளுங்கள். 1. நீங்கள் ஏற்கெனவே pip3 நிறுவியிருந்தால் நேரடியாக இரண்டாம் படிக்குப் போய் விடுங்கள். இல்லாவிட்டால் sudo apt-get install pip3 என்று கொடுங்கள். pip3 நிறுவப்பட்டு விடும். 2. இப்போது செலினியம்… Read More »

எளிய தமிழில் Computer Vision 6. எண்களின் அணிகளும் (arrays) செய்முறைகளும்

படங்களைக் கணினியில் எண்களாக சேமித்து வைக்கிறோம் என்று பார்த்தோம். எண்களாக எந்த முறையில் சேமித்து வைக்கிறோம் என்பதை இங்கு மேலும் கொஞ்சம் விவரமாகப் பார்ப்போம். வரிசைகளும் (rows) பத்திகளும் (columns) தடங்களும் (channels) எடுத்துக்காட்டாக இந்த எளிய படத்தைப் பார்ப்போம். இந்தப் படத்தில் நான்கு வரிசைகளும் (rows) ஒவ்வொரு வரிசையிலும் ஐந்து பத்திகளில் (columns) படவலகுகளும் (pixels) உள்ளன. ஒவ்வொரு படவலகிலும் உள்ள வண்ணத்தை மூன்று சிபநீ (RGB) அடிப்படை வண்ணங்களாகப் பிரித்து மூன்று தடங்களில் சேமிக்கப்… Read More »

கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?

கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் போது ரொம்ப முக்கியமானது – அந்த மென்பொருளைப் பற்றி என்னென்ன தெரியும் என்று எழுதி வைப்பது. ஏன் இப்படி எழுதி வைக்க வேண்டும்? நாம் வேலை செய்யப்போவது கட்டற்ற மென்பொருள் அல்லவா! அதனால் பலரும் பங்களிக்க வருவார்கள். அப்படிப் பங்களிக்க வருபவர்களுக்கு உதவியாக, 1. மென்பொருள் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது? 2. மென்பொருளை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? 3. யார் யாரெல்லாம் பங்களிப்பாளர்கள் ஆகியவற்றை எழுதிப் பதிந்து வைக்க வேண்டும். எழுதிப் பதிந்து… Read More »

பைத்தான் ரிஜெக்ஸ் – 7 – ஒரு கோப்பில், மின்னஞ்சலில் உள்ள மின்னஞ்சல் முகவரியைக் கண்டுபிடிப்பது எப்படி?

நம்மிடம் ஒரு கோப்பு(File) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கோப்பில் நிறைய தகவல்கள் இருக்கின்றன. அந்தத் தகவல்களில் ஒரு சில மின்னஞ்சல் முகவரிகளும் இருக்கின்றன. அந்த மின்னஞ்சல் முகவரிகள் மட்டும் நமக்கு வேண்டும். இதைப் பைத்தான் ரிஜெக்ஸ் பயன்படுத்திச் செய்யப் போகிறோம். இந்த வேலையில் இரண்டு படிகள் இருக்கின்றன. 1. கோப்பைத் திறந்து பைத்தான் கையில் கொடுப்பது. இது மிக எளிது. file_content = open(‘test.txt’) மேல் உள்ள வரியில் test.txt என்னும் கோப்பைத் திறந்து… Read More »

பைத்தான் ரிஜெக்ஸ் – 6 – வார்த்தை, வாக்கிய எண்ணிக்கை

இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது, ஒரு வரியில் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றன என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது, ஒரு பத்தியில் எத்தனை வாக்கியங்கள் இருக்கின்றன ஆகியனவற்றைத் தான்! ரிஜெக்சுக்குப் போவதற்கு முன்பு, சில அடிப்படை கருத்துகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்” – இந்த வாக்கியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றன? நான்கு! எப்படிச் சொன்னோம்? ஒரு வார்த்தையையும் இன்னொரு வார்த்தையையும் எப்படிப் பிரித்தோம்? இடைவெளி இருப்பதைப் பார்த்தோம்!… Read More »