Category Archives: பங்களிப்பாளர்கள்

எளிய தமிழில் Computer Vision 13. பொருட்களைக் கண்டுபிடித்துக் (Object detection) குறித்தல்

பொருளைக் கண்டறிதல் (Object detection) நம்முடைய படத்தில் உள்ள பொருட்கள் யாவை, அவை என்ன வகை மற்றும் ஒவ்வொரு வகையிலும் எத்தனை இருக்கின்றன என்று  நமக்குத் தெரியாது. முதல் வேலையாக அவை அனைத்தையும் வகைப்படுத்தி அவை ஒவ்வொன்றையும் சுற்றி ஒரு எல்லைப் பெட்டியை வரைய விரும்புகிறோம். இதைப் பொருளைக் கண்டறிதல் என்று பொதுவாகச் சொல்கிறோம். இந்த வேலையைக் கீழ்க்கண்ட படி நிலைகளாகப் பிரிக்கலாம். பொருட்களின் இடம் குறித்தல் (localization) ஒரு படத்தில் முக்கியமான அல்லது மிகவும் புலப்படக்கூடிய… Read More »

எளிய தமிழில் Computer Vision 12. அம்சப் பொருத்தம் (Feature matching)

அம்சப் பொருத்தத்துக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு சாலைக் குறியீடுகளை (road signs) அடையாளம் காண்பது. நம் படக்கருவியின் முன்னால் உள்ள குறியீடு நாம் முன்னர் பதிவு செய்துள்ள எந்தக் குறியீட்டுடன் அம்சப் பொருத்தம் கொண்டுள்ளது என்று பார்க்கவேண்டும். முதலில் படத்திலுள்ள குறியீட்டின் முக்கியப் புள்ளிகளைக் கண்டுபிடிக்க ((keypoint detection) வேண்டும். அடுத்து அம்ச விவரிப்பியைத் (feature descriptor) தயார் செய்ய வேண்டும். கடைசியாக நம்மிடம் உள்ள எந்த அம்ச விவரிப்பியுடன் இது பொருந்துகிறது என்று பார்க்க வேண்டும்.… Read More »

எளிய தமிழில் Computer Vision 11. படங்களை வகைப்படுத்தல் (image classification)

“ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு இணையானது (A picture is worth a thousand words)” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. அதாவது பக்கம் பக்கமாக எழுதிப் புரிய வைக்கக் கடினமான ஒரு சிக்கலான கருத்தை ஒற்றைப் படத்தில் தெரிவிக்க முடியும் என்பதே இதன் பொருள். ஆனால் கணினிகளைப் பொறுத்தவரை, அவை ஒரு படத்தில் உள்ளது என்ன என்று புரிந்து கொள்வது மிகக் கடினம். ஏனெனில் அவை பார்ப்பது படத்தையல்ல, ஒரு பெரும் எண்களின் அணியை.… Read More »

இயற்கை மொழி செயலாக்கம் (NLP), காட்சிப்படுத்தல் ஆகியவற்றிற்கு spaCy யைப் பயன்படுத்துதல்

spaCy என்பது ஒரு திறமூல பைதான் நூலகமாகும், இது உரைகளிலான தரவை இயந்திர நட்பு வில்லைகளாக பிரித்திட உதவுகிறது. உரையை சுத்தம் செய்வதற்கும் செயலாக்குவதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் பயன்படுத்தக்கூடிய பலவிதமான கருவிகள் இதில் உள்ளன, மேலும்இது இயற்கையான மொழி செயலாக்கத்திற்கு உதவுகிறது. இயற்கையான மொழி செயலாக்கம் (Natural language processing (NLP)) என்பது உரைவடிவிலான தரவுகளை பயன்படுத்திகொள்ளும்போதான இயந்திர கற்றலுக்கு (machine learning (ML)) ஒரு முக்கியமான முன்னோடியாகும். உரைகளிலான தரவானது பெரும்பாலும் கட்டமைக்கப்படாதது மேலும் இயந்திர கற்றல்… Read More »

எளிய தமிழில் Computer Vision 10. வடிவியல் வடிவங்களை அடையாளம் காணுதல்

ஹ்யூ உருமாற்றம் (Hough transform) முதன்முதலில் ஹ்யூ உருமாற்றம் படத்தில் உள்ள கோடுகளை அடையாளம் காண்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. ஆனால் பின்னர் இது வட்டங்கள், நீள்வட்டங்கள் போன்ற வடிவங்களையும் அடையாளம் காண விரிவாக்கப்பட்டது. மேலும் சமதளங்களையும் மற்றும் உருளைகள் (Planes and cylinders) போன்ற முப்பரிமாணப் (3D) பொருட்களையும் கூடக் கண்டறிய முடியும். ஆக கோடுகள், வட்டங்கள், நீள்வட்டங்கள் போன்ற, அளவுரு சமன்பாடு (Parametric equation) மூலம் குறித்துக் காட்ட இயலும் எல்லாவித வடிவங்களையும், ஹ்யூ உருமாற்றம்… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – நேரலை வகுப்புகள்

இன்று முதல், பயிலகம் யூடியூப் பக்கத்தில் இந்திய நேரம் ஏழு மணி முதல் எட்டு மணி வரை, சாப்ட்வேர் டெஸ்டிங் (Manual Testing) வகுப்புகள் நேரலையாக ஒளிபரப்பப்படவிருக்கின்றன.  விருப்பமுடைய நண்பர்கள் கலந்து கொள்ளலாம். இணைந்து கொள்ள: www.youtube.com/channel/UCdw_PocG9G8-y4f6wYkz8og பயிற்றுநர்: கி. முத்துராமலிங்கம், பயிலகம்.

எளிய தமிழில் Computer Vision 9. பட அம்சங்களைப் பிரித்தெடுத்தல் (Feature extraction)

படங்களிலிருந்து நமக்குப் பயனுள்ள அம்சங்களைப் பிரித்தெடுக்க பட அலசல் செயலாக்கம் (image processing) செய்கிறோம். அடுத்து வரும் ஒவ்வொரு வேலைக்கும் ஒன்றுக்கு மேல்பட்ட செயல்முறைகள் நாம் பார்த்த மென்பொருட்களில் உள்ளன. நம் வேலைக்கு ஏற்றவாறு நாம் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விளிம்பு கண்டறிதல் (Edge detection) ஒரு படத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அல்லது இடைநிறுத்தங்கள் (discontinuities) வரும் இடங்களை விளிம்புகள் என்று நாம் கூறலாம். வண்ண மாறல் விகிதம் (color gradient) என்ற நுட்பம் வெவ்வேறு பொருட்களின்… Read More »

இணையவழி இலவச ஆங்கில இலக்கண வகுப்பு – பயிலகம்

1. ஆங்கிலம் தெரியவில்லை, அதனால் என்னுடைய முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது. 2. சிறு வயதில் எனக்கு இங்கிலீஷ் ஒழுங்காகச் சொல்லிக் கொடுக்கவில்லை, அதன் பாதிப்பை இன்று வரை நான் உணர்கிறேன். 3. ஆங்கிலத்தின் அடிப்படை இலக்கணமே தெரியாமல் இருப்பதால், இங்கிலீஷ் என்றாலே பயமாக இருக்கிறது. 4. ஆங்கிலம் தெரியாமல் இருப்பதால் நேர்காணல்(இன்டர்வியூ)களில் வெற்றி பெற முடியவில்லை. இப்படி, ஆங்கிலம் தெரியாமல் அவதிப்படுபவரா நீங்கள்? உங்களுக்கான ஆங்கில அடிப்படை இலக்கண வகுப்புகளைப் பயிலகம் திட்டமிடுகிறது. இவ்வகுப்புகள் இணையம் வழியே இரண்டு… Read More »

எளிய தமிழில் Computer Vision 8. கட்டற்ற திறந்தமூல ஓபன்சிவி (OpenCV) மென்பொருள்

ஓபன்சிவி (OpenCV)  C மற்றும் C++ நிரல் மொழிகளில் எழுதப்பட்டது.  சுமார் 2500 கணினிப் பார்வை வினைச்சரங்கள் (algorithms) மற்றும் அவற்றுக்குத் துணைபுரியும் வழிமுறைகளைக் (convenience methods) கொண்டுள்ளது. இது லினக்ஸ், யூனிக்ஸ், மேக், விண்டோஸ் ஆக எல்லாக் கணினி இயங்குதளங்களிலும் மற்றும் ஆன்டிராய்டு, ஆப்பிள் போன்ற திறன்பேசிகளிலும் ஓடும்.  இது பயிற்சிகளுக்கும் ஆய்வுகளுக்கும் மட்டுமே என்றில்லாமல் தொழில்துறையில் உற்பத்திக்கும் (production) பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.  ஓபன்சிவி பைதான் (OpenCV Python) இது  ஓபன்சிவியை பைதான் நிரலிலிருந்து பயன்படுத்தத்… Read More »

பைத்தான் – sys module – வினா 8 விடை 8

போன பதிவில் os நிரல்கூற்றைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா! இந்தப் பதிவு sys module பற்றியது. கணினியின் சில அடிப்படைத் தகவல்கள், பைத்தான் வரிபெயர்ப்பி பற்றிய தகவல்கள் ஆகியவற்றை sys நிரல்கூற்றில் இருந்து பெறலாம். முதலில் import sys கொடுத்துக் கொள்ளுங்கள். வினா 1: பைத்தான் காப்புரிமை பற்றிய தகவல்களை எங்கே பார்ப்பது? sys.copyright வினா 2: float தரவுவகை பற்றி என்று எப்படிப் பார்ப்பது? sys.float_info வினா 3: யூனிக்கோடு என்கோடிங் என்ன என்று எப்படிப்… Read More »