Category Archives: பைத்தான் படிக்கலாம் வாங்க

பைத்தான் படிக்கலாம் வாங்க – 7 – லினக்சில் நிரல் எழுதுவோம்!

முந்தைய பதிவில் விண்டோசில் எப்படி லினக்ஸ் நிரல் எழுதுவது என்று பார்த்தோம். இப்போது லினக்சில் எப்படி எழுதுவது என்று பார்ப்போம். லினக்ஸ் இயங்குதளத்தில் பைத்தான் நிரல் எழுதுவதற்கு முன், நோட்பேட்++(Notepad++),  நோட்பேட்கியூகியூ(Notepadqq) போன்ற மென்பொருட்களை நிறுவிக் கொள்வது சிறந்தது. இம்மென்பொருட்கள் கட்டாயமாகத் தேவையா எனக் கேட்டால் இல்லை தான்! இருந்தாலும் இவற்றைப் பயன்படுத்துவதில் சில நன்மைகள் இருக்கின்றன என்பதால் இவற்றைப் பயன்படுத்தச் சொல்கிறேன், அவ்வளவே! நோட்பேட்கியூகியூ தரவிறக்கம்: லினக்ஸ் மின்டின் சாப்ட்வேர் மேனேஜரைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 6 – முதல் முதலாய் நிரல்!

பைத்தானை நிறுவி விட்டோம். சரி! இப்போது நிரல் எழுதத் தொடங்குவோமா! நிரல் எழுதுவது என்றால் 1) முன்னேற்பாடுகள் என்னென்ன செய்ய வேண்டும்? 2) என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்? 3) உண்மையிலேயே பைத்தான் எளிதான மொழி தானா? இப்படிப் பல கேள்விகள் உங்கள் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கலாம். இந்தக் கேள்விகள், குழப்பங்கள் எல்லாமே துளியும் தேவையில்லாதவை. ஆமாம்! பைத்தானைப் படிப்பது என்பது தமிழ் படிப்பது போன்றது. செந்தமிழும் நாப்பழக்கம்! பைத்தானும் அதே பழக்கம் தான்! விண்டோசில் பைத்தான்: விண்டோசில்… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 5 – விண்டோசில் பைத்தான் நிறுவல்

) முதலில் www.python.org/downloads/ தளத்திற்குப் போய் அண்மைய பதிப்பைச் சொடுக்கித் தரவிறக்கிக் கொள்ளுங்கள். (இப்போதைக்கு 3.10.1) 2) தரவிறக்கிய கோப்பைச் சொடுக்கி, “Install Now” என்பதைக் கொடுப்பதற்கு முன், கடைசியில் இருக்கும் “Add Python 3.10 to Path” என்பதைத் தேர்ந்து கொள்ளுங்கள். (குறிப்பு: மேல் உள்ள படத்தில் Add Python 3.10 to Path” தேர்ந்திருக்க வேண்டும்.  விடுபட்டிருக்கிறது) 3) பிறகு, “Install Now” என்பதைச் சொடுக்கினால் போதும். 4) இப்படியாகப் பைத்தான் நிறுவல் தொடங்கி… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 4 – லினக்சில் பைத்தான் நிறுவல்

பைத்தானின் எளிமையையும் இனிமையையும் எவ்வளவு நாள் தான் எட்ட நின்றே சுவைத்துக் கொண்டிருப்பது? நம்முடைய கணினியில் பைத்தானை நிறுவினால் தானே, “கண்ணே கலைமானே” என்று பைத்தானைப் பார்த்துப் பாட முடியும்! பைத்தான் நிறுவலை லினக்சில் இருந்து தொடங்குவோம். “எடுத்த எடுப்பிலேயே லினக்ஸ் இயங்குதளத்திற்குப் போய் விட்டீர்கள். நாங்கள் எல்லோரும் விண்டோஸ் அல்லவா வைத்திருக்கிறோம்” என்கிறீர்களா? நிரலர் (டெவலப்பர்)க்குரிய ஒரு பால பாடம் சொல்லி விடுகிறேன் – நல்ல கணினியாளராக மாற விரும்பும் ஒவ்வொருவரும் கட்டற்ற மென்பொருளாகிய லினக்ஸ்… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 3 – எளிமையே இனிமை!

“பைத்தானைப் பற்றிய உங்களுடைய முந்தைய இரண்டு பதிவுகளைப் பார்த்தேன். உண்மையில் பைத்தான் அவ்வளவு எளிதான மொழியா? புதியவர்களைப் பைத்தான் பக்கம் இழுக்க நீங்கள் செய்யும் விளம்பர உத்தி தானே அது?” என்று ஒரு நண்பர் கேட்டார். “விளம்பரங்களைக் கண்டு அப்படியே நம்பும் காலம் எல்லாம் மலையேறிப் போச்சு நண்பரே! நம்முடைய காலத்தில் ஒரு நடிகர் நடித்தாலே படத்திற்குப் போவோம். இப்போதுள்ள இளைஞர்கள் அப்படியா? நடிகர் யார்? இயக்குநர் யார்? ஒளிப்பதிவு யார்? என்று அக்கு வேறு ஆணிவேறாக… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 2 – தந்திரமே மந்திரமாய்!

போன பதிவில் பாட்டோடு முடித்திருந்தீர்களே! அப்படிப் பைத்தானிடம் என்ன இருக்கிறது என்று மயங்கினீர்கள் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். அண்மையில் மாநாடு என்றொரு படம் பார்த்தேன். நீங்களும் பார்த்திருக்கலாம். அந்தப் படத்தில் ஒரு காட்சி. படத்தின் நாயகன் அப்துல் காலிக்கைப் (சிம்புவைப்) பார்த்து, ‘என்ன இப்படி மெலிந்து போய்விட்டாய்? என்னப்பா செய்தாய்?’ என்று அவருடைய நண்பர் கேட்பார். அதற்குச் சிம்பு, ‘எதுவுமே செய்யவில்லை, அதனால் தான் மெலிந்து போய்விட்டேன்‘ என்று பதில் சொல்வார். இதே தான் பைத்தானிலும் என்னை… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 1

பைத்தான் படிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாட்களாகவே என்னுள் இருந்த சிந்தனை. கல்லூரி படித்த காலங்களில் சி++, ஜாவா ஆகிய இரண்டையும் பாடமாகவே படித்திருந்தேன். ஆனாலும் அவை இரண்டும் பெரிய அளவில் மனத்தில் நிற்கவில்லை. செயலிலும் அப்படித்தான் வெளிப்பட்டது. வேலை பார்த்த நாட்களில் ஜாவா மிகப் பெரிய அளவில் எனக்குத் தேவையாக இருந்தது. வேலையைத் தக்க வைப்பதற்கே ஜாவா வேண்டும் என்னும் நாட்களில் எப்படியாவது ஜாவாவைக் கரைத்துக் குடித்து விட வேண்டும் என்று ஜாவா கம்ப்ளீட்… Read More »