Category Archives: Open Source Software

உங்கள் கல்வியை விரிவாக்கம் செய்யும் ஒரு கட்டற்ற இணையதளம்

கல்வி கற்க கூடிய, ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடிய மற்றும் தொழில்நுட்ப தகவல்களின் மீது ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு சரியான இணையதளத்தை தேடுவது சிக்கலாகவே அமைகிறது. பெரும்பாலான இணையதளங்கள், குறைவான தகவல்களை வழங்கி விட்டு மேற்கொண்டு படிப்பதற்கு அதிகப்படியான தொகையினை கேட்கின்றனர். அதையும் கடந்து இலவச இணையதளங்களாக இருந்தால், அவை பெரும்பாலும் விளம்பர கூடாரங்களாகவே இருக்கின்றன. மேலும் அங்கீகரிக்கப்படாத தளங்களில் இருந்து பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யும்போது, உங்கள் மொபைல் கருவிகளில் வைரஸ் தாக்குதல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மோசடி… Read More »

கட்டற்ற இன்டர்ன்ஷிப் நிகழ்வுகள் : 3

ஏற்கனவே இந்த தலைப்பில் இரண்டு கட்டுரைகளில் விவாதித்திருந்தோம். Itsfoss தளத்தில் வெளியாகி இருந்த கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கனவே எட்டு கட்டற்ற இன்டர்ன்ஷிப் நிகழ்வுகள் குறித்து தெரிவித்திருந்தேன். இந்தக் கட்டுரையிலும் மூலக்கட்டுரையில் உள்ள பிற ஐந்து இன்டர்ன்ஷிப் நிகழ்வுகள் குறித்து பார்க்கலாம். 9. ICFOSS கேரள அரசாங்கத்தால் நடத்தப்படக் கூடிய இந்த நிகழ்வில் பங்கேற்று, கட்டற்ற தொழில்நுட்பங்களை நீங்கள் வளர்க்க முடியும். ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெறக்கூடிய இந்த நிகழ்வு ஒன்றரை மாத காலம்… Read More »

கட்டற்ற internship(பயிற்சி) நிகழ்வுகள் | பகுதி 1

கட்டற்று இன்டர்ன்ஷிப் ( பயிற்சி) நிகழ்வுகள் குறித்து, itsfoss இணையதளத்தில் திரு.அபிஷேக் பிரகாஷ் அவர்கள் எழுதிய கட்டுரையை படிக்க நேர்ந்தது. அடிப்படையில் நானும் ஒரு கல்லூரி மாணவன் தான்.சரி, என்னை போன்ற மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த கட்டுரை இருக்கும் என்பதால்! அந்த தகவல்களை கணியத்தில் எழுதலாமா? என பொறுப்பாசிரியரிடம் கேட்டிருந்தேன். அதற்கு பொறுப்பாசிரியர் இன் முகத்தோடு ஒப்புதல் அளிக்கவே, அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள 13 வெவ்வேறு விதமான இன்டர்ன்ஷிப் நிகழ்வுகள் குறித்து மூன்று கட்டுரைகளாக எழுதலாமே… Read More »

திறந்த நிலை, கட்டற்ற தொழில்நுட்பங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல்!

தற்காலத்தில் பெரும்பாலும் கட்டற்றத் தரவுகள் குறித்து, பெரும்பாலான பொதுஜன மக்களுக்கு தெரிந்திருப்பதில்லை. அவ்வாறே தெரிந்திருந்தாலும், அது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. துறைசார் அறிவு கொண்ட வல்லுநர்கள் மட்டுமே கட்டற்ற தொழில்நுட்பங்களை சரியாக பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, பல கனவுகளோடு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உருவாக்கப்படும் இத்தகைய கட்டற்ற படைப்புகள் சில மாதங்களிலேயே பராமரிப்பு இன்றி போகின்றன. மேற்கொண்டு அவற்றை பராமரித்து முறையான புதிய வெளியீடுகளை வழங்க, போதியமான நிதி இருப்பதில்லை. இந்த வாரம் நான் its… Read More »

திறந்த நிலை மின் மடல் வசதிகளை வழங்கும் புரோட்டான் மின்மடல்

நம்மில் பலரும் கூகுள் நிறுவனத்தின் மின் மடலை(Gmail)பயன்படுத்தி வருகிறோம். சிலர் யாகூ(yahoo )போன்ற, பிற நிறுவனங்களின் மின்மடல் வசதிகளை பயன்படுத்தி வருவீர்கள். Google மின் மடல் தொழில்நுட்பத்தில், அதிகப்படியான விளம்பரங்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் நம்மை அடிக்கடி கவலைக்கு உள்ளாக்குகின்றன. மேலும், சமீப காலத்தில் மின் மடல் மூலமாக உங்களுடைய கணிப்பொறி அல்லது மொபைல் ஃபோன்களுக்கு வைரஸ்கள்(malware) அனுப்பி வைக்கப்படுவதாக தகவல்களும் பரவி வருகின்றன. மேலும், உங்களுடைய முக்கியமான தகவல்கள்(confendial information)இங்கு திருடப்படும் அபாயமும் அதிகமாக உள்ளது.… Read More »

பலருக்கும் தெரியாத only office suite!

நம்மில் பலரும் அலுவலகப் பணிகளுக்கு, மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறோம் உங்களுடைய அலுவலகப் பணிகளை செய்வதற்கு, மிகவும் சிறப்பான தேர்வாக பலரும் குறிப்பிடுவது மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் செயலியை தான். ஆனால், மேற்படி மைக்ரோசாப்ட் ஆபீஸ் செயலியானது திறந்த நிலை பயன்பாடு கிடையாது. மேலும், சில சிறப்பம்சங்களை நீங்கள் விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயமும், மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற செய்திகளில் காணப்படுகிறது. அதற்கு மாற்றாக, பல திறந்த நிலை பயன்பாடுகள் வழங்கப்பட்டு வந்தாலும் கூட… Read More »

Chrome உலாவியில் இருக்கும் அருமையான 5 துணை கருவிகள்

நம்மில் பலரும் குரோம் உலாவியை பயன்படுத்தி வருகிறோம். குரோம் உலாவியில் பலவிதமான துணைக் கருவிகளையும்(extensions) பயன்படுத்தியிருப்பீர்கள். அதில்சில திறந்த நிலை பயன்பாடுகளாக இருக்காது.ஆனால், இந்த கட்டுரையில் நான் குறிப்பிடவிருக்கும் ஐந்து துணைக் கருவிகளும், திறந்த நிலை பயன்பாடுகள் தான். அதே நேரம், உங்களுக்கான வேலையை மேலும் எளிதாக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன . அந்த ஐந்து சிறப்பான துணை கருவிகள், எவை?எவை? என்பதை ஒன்றொன்றாக பார்க்கலாம். அதற்கு முன்பாக, மேற்படி இந்த கட்டுரையானது  itsfoss இணையதளத்தில் சாய்… Read More »

ஒரு எளிமையான லினக்ஸ் கட்டளையின் மூலம், உங்கள் புகைப்படத்தின் பின்னணியை நீக்கலாம் !

சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக, நாம் எடுக்கும் புகைப்படங்களில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை! அதன் பின்னணியாக(background) தான் இருக்கும். புகைப்படங்களின் நேர்த்தியை, மோசமான பின்னணிகள் குறைத்து விடும். புகைப்படங்களின் பின்னணியை நீக்க, ஆண்ட்ராய்டு செயலிகள் குப்பை போல கொட்டி கிடக்கின்றன. ஆனால், அவற்றின் பெரும்பாலானவை விளம்பரங்களாய் நிரம்பி வழிகின்றன. சிலவற்றிற்கு, அதிகப்படியான தொகையை செலவிட வேண்டி உள்ளது. மேலும், அவை யாவும் திறந்த நிலை(open source) பயன்பாடுகள் அல்ல. ஆனால், இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமைந்திருப்பது தான்!… Read More »

Dayon எனும்கட்டற்ற மேஜைக்கணினியின் தொலைைதூரஉதவி-யாளர்

தற்போது பயன்பாட்டில் உள்ள Dayon என்பது கட்டற்ற மேஜைக்கணினியின் தொலைைதூர உதவித்தீர்வாகும் .இது பயன்படுத்த எளிதானது, பாதுகாப்பானது, இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென பதிவுஎதுவும் செய்யத்தேவையில்லை , தனிப்பட்ட பயன்பாட்டிற்கும், வணிக பயன்பாட்டிற்கும் கட்டணம்எதுவுமில்லாமல் கிடைக்கின்றது தொலைநிலை உதவி சேவை இது தொலைதூரத்திலிருந்து கணினியின் செயலை காணவும் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கின்ற ஒருதிறமூல, குறுக்கு-தள JAVA தீர்வாகும். இந்த அர்த்தத்தில், இது ஏற்கனவே இருக்கின்ற பல்வேறுதொலைநிலை மேசைக்கணினி தீர்வுகளைப் போன்றே உள்ளது.ஆனால் இது அவைகளைவிட மதிப்புமிக்ககூடுதலான சில வசதிகளையும், கொண்டுள்ளது.… Read More »

மூலக் குறிமுறைவரிகளிலிருந்து ஆவணங்களை உருவாக்கிட Doxygenஎனும் பயன்பாட்டினை பயன்படுத்திகொள்க

Doxygen என்பது இயல்புநிலையில் குறிப்புரை செய்யப்பட்ட C++ எனும் மூலகுறிமுறைவரிகளிலிருந்து ஆவணங்களை உருவாக்குவதற்கான நடைமுறையில் செந்தரமான கருவி ஆகும், ஆனால் இது C, Objective-C, C#, PHP, Java, Python, IDL (Corba, Microsoft, , UNO/OpenOffice flavors போன்ற பிற பிரபலமான நிரலாக்க மொழிகளையும் ஆதரிக்கிறது. ), Fortran, Dஇன் விரிவாக்க வன்பொருள் விளக்க மொழியான VHDLஆகியவற்றினை ஆதரிக்கிறது. இது நமக்கு மூன்று வழிகளில் உதவுகின்றது: 1. இது ஒரு இணையத்தின் ஆவண உலாவியையும் (HTML… Read More »