இந்திய அரசாங்கம் திறந்த மூலத்தில் பெரிய அளவில் இறங்கியுள்ளது!
பல்வேறு துறைகளில் ‘திறந்த மூலம், பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு’ தத்துவத்தை ஊக்குவிக்க இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய அரசாங்கம் ஓபன்ஃபோர்ஜ் என்ற அதிகார பூர்வ தளத்தை அறிமுகப்படுத்தியது. உள்நாட்டிலேயே பராமரிக்கப்படும் இந்த கிட்ஹப் (GitHub) போன்ற புதிய தளத்துக்கு, நாட்டில் உள்ள மின்னாளுகை செயலிகளின் மென்பொருள் சொத்துக்களைப் பாதுகாப்பதும், மீண்டும் பயன்படுத்துவதும் குறிக்கோளாகும். இதற்கான களஞ்சியம் உருவாக்க இதன் குழு திறந்த மூல ஒத்துழைப்பு தளம் டுலீப் (Tuleap) பயன்படுத்தியுள்ளது. மேலிருக்கும் மூடியை எடுத்துப் பார்த்தால் லினக்ஸ், அப்பாச்சி, மைஎஸ்கியூஎல்… Read More »