Category Archives: Open Source Software

எளிய தமிழில் CAD/CAM/CAE 3. லிபர்கேட் (LibreCAD) 2D

உபுன்டுவில்  லிபர்கேட் நிறுவி, முதல் பயிற்சியாக ஒரு விளிம்புத் தட்டு (flange) வரைபடம் வரைவது எப்படி என்ற என்னுடைய முந்தைய கட்டுரையை இங்கே படிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சமீபத்தில் வெளியிடப்பட்ட, நூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட லிபர்கேட் 2.2 பயனர் கையேடு இங்கே காணலாம்.  வரித்தோற்றம் (orthogonal view) மற்றும் சம அளவுத்தோற்றம் (isometric view) இந்த மென்பொருளில் படத்தில் இடது பக்கம் உள்ள செங்குத்து வீழல் என்ற வரித்தோற்றம் தவிர படத்தில் வலது பக்கம் உள்ள சம… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 2. கணினி வழி வடிவமைப்பு (CAD)

எந்திரவியல் பொறியியலே நம் குவியம்   தொழில்முறை கட்டடக்கலை (architecture), பொறியியல் (engineering), அசைவூட்டம் (animation) மற்றும் வரைபட வடிவமைப்பு (graphic design) ஆகியவற்றிற்கு கணினி வழி வடிவமைப்பு மென்பொருள் ஒரு முக்கியமான கருவியாகும். எனினும் இக்கட்டுரைத் தொடரில் நம் குவியம் எந்திரவியல் பொறியியலில் தானிருக்கும் என்பதை நீங்கள் ஒருவாறாக யூகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மேலும் நம்முடைய எடுத்துக்காட்டுகள் பெரும்பாலும் கயெக கடைசல் எந்திரம் (CNC Lathe) அல்லது செங்குத்து துருவல் மையம் (VMC – Vertical Machining… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 1. கணினி ஒருங்கிணைந்த உற்பத்தி

நீங்கள் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு ஒரு புது மாதிரியான மின்சார ஆட்டுக்கல் என்ற தோசை மாவு அரைக்கும் இயந்திரம் தயாரிக்கும் யோசனை வருகிறது. அதை நன்கு பகுப்பாய்வு செய்து உங்கள் நிறுவனத்தின் தலைவர்களுக்கு காட்சிப் படுத்துகிறீர்கள். அவர்களுக்கும் உங்கள் யோசனை பிடித்து விட்டது. இந்தத் தயாரிப்பை சந்தையில் நன்றாக விற்பனை செய்ய முடியும் என்று நம்புகிறார்கள். உங்கள் திட்டத்தில் முதலீடு செய்ய முன்வருகிறார்கள். இந்தத் திட்டத்தின்படி உற்பத்திப் பொருள்… Read More »

பொறியியல் வரைபடம் – திறந்த மூல லிபர்கேட் (LibreCAD)

திறந்த மூல லிபர்கேட் மென்பொருளை உபுண்டு 16.04 இல் எப்படி நிறுவுவது என்று இங்கே பார்க்கலாம். இவர்கள் சொன்ன மூன்று கட்டளைகளையும் கொடுத்தவுடன் லிபர்கேட் 2.2.0 வை நிறுவியது. முதன்முதலாக ஓட்டும்போது மெட்ரிக் அளவை முறையில் மிமீ என்று தேர்ந்தெடுக்கவும். மொழித் தேர்வில் ஆங்கிலத்தை அப்படியே விட்டுவிடலாம். பின்னால் மாற்றவேண்டுமென்றால் தேர்வுப் பட்டியலில் Options (தேர்வுகள்) -> Current Drawing Preferences (இப்போதைய வரைபட விருப்பங்கள்) இல் சென்று, Units (அளவைகள்) என்ற தத்தலில் முக்கிய வரைபட… Read More »

ஆன்டிராய்டு திறன்பேசியில் பாதுகாப்பும் அகவுரிமையும்

கூகிள் விளையாட்டு அங்காடி (Google Play Store) தீங்குநிரல்கள் நிறைந்து, பாதுகாப்பு மற்றும் அகவுரிமைக்கு மிகவும் பாதகமாகிவிட்டது ஆன்டிராய்டு இயங்கு தளத்துடன் சேர்ந்தே கூகிள் அங்காடி வருகிறது, ஆகவே தனியாகப் பதிவிறக்கம் செய்து நிறுவத் தேவை இல்லை. இதில் மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட செயலிகள் உள்ளன. உங்களால் கற்பனை செய்யக்கூடிய எல்லா வேலைகளுக்கும் இதில் செயலிகள் கிடைக்கும். பல இலவசமாகவே கிடைக்கும், சிலவற்றைதான் பணம் கட்டி வாங்க வேண்டும். இப்படி அற்புதமான வசதியிருக்க வேறு எதுவும் யாருக்குத்… Read More »

கணக்கு பதிவியலிற்கான குனுகதா கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடு

குனுகதா (GNUKhata) என்பது கட்டற்ற கட்டணமற்ற நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய டேலி (Tally) பயன்பாட்டிற்கு மாற்றான ஒரு கணக்கு பதிவியல் பயன்பாடாகும். இது கணக்கு பதிவியலுடன் கையிருப்பு பொருட்களையும் பராமரித்திடும் ஒரு சிறந்த பயன்பாடாகவும் விளங்குகின்றது. இதனுடைய குனுகதா v5.10 எனும் பதிப்பை மும்பையிலுள்ள Digital Freedom Foundation எனும் நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது. இதில் பேரேடு, இறுதிக் கையிருப்பு, இருப்புநிலைக் குறிப்பு, இலாபநட்டக் கணக்கு ஆகிய அறிக்கைகளை மாதவாரியாக, காலாண்டு வாரியாக, ஆண்டு வாரியாகப்… Read More »

எழில் மொழி – பங்களிப்பாளர் சந்திப்பு 2018 – சில குறிப்புகள்

எழில் மொழி என்பது, தமிழிலேயே கணினியில் நிரலாக்கம் செய்ய உதவும் ஒரு நிரல் மொழி. இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூல நிரலுடன், யாவருக்கும் பகிரும், மாற்றங்கள் செய்து வளர்த்தெடுக்கவும் உரிமையோடு தரப்படுகிறது. அமெரிக்காவில் கணினி விஞ்ஞானியாகப் பணிபுரியும், திரு. முத்து அண்ணாமலை அவர்கள் 2012 ஆண்டுகளில், தமிழில் ஒரு நிரல் மொழியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டார். அதை ஒரு கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டார். அதைக்கண்ட பல கட்டற்ற மென்பொருள் நிரலாளர்கள், இணைந்து பங்களிக்கத்… Read More »

தமிழ் உரை-ஒலி மாற்றி – கட்டற்ற மென்பொருள் – IITM – SSN கல்லூரி – நிறுவுதல்

IITM மற்றும் SSN பொறியியல் கல்லூரி இணைந்து தமிழுக்கு ஒரு சிறந்த உரை ஒலி மாற்றியை கட்டற்ற மென்பொருளாக, மூல நிரலுடன், வெளியிட்டுள்ளன. www.iitm.ac.in/donlab/tts/voices.php அந்நிரலை இன்று வெற்றிகரமாக உபுண்டு கணினியில் நிறுவினேன். அதன் சோதனை ஓட்டத்தை இங்கே கேட்கலாம் – soundcloud.com/shrinivasan/tamil-tts-demo நிறுவுதலுக்கான விரிவான விளக்கம் இங்கே – goinggnu.wordpress.com/2017/09/20/how-to-compile-tamil-tts-engine-from-source/ ஒரே கட்டளையில் எளிதாக நிறுவ, ஒரு நிரல் எழுதினேன். அது இங்கே github.com/tshrinivasan/tamil-tts-install தற்போதைக்கு ஒரு பத்திக்கு மட்டுமே உரையை ஒலியாக மாற்றுகிறது. விரைவில்… Read More »

மும்பை பள்ளி மைக்ரோசாஃப்ட்-ஐ விட்டு கட்டற்ற திறந்த மூல மென்பொருளுக்கு மாற்றியது

மைக்ரோசாஃப்ட், அடோபி போன்ற தனியுரிம மென்பொருள்களுக்குப் பதிலாகக் கட்டற்ற திறந்த மூல மென்பொருள்களுக்கு (Free and Open Source Software – FOSS) மாற்றம் செய்து மும்பை மஸ்காவுனில் உள்ள செயின்ட் மேரி என்ற அரசு உதவிபெறும் பள்ளி நகரிலேயே முதல் பள்ளியாக இடம் பெற்றது. மைக்ரோசாஃப்ட் இயங்கு தளம் மட்டும்தான் என்று இருக்கக் கூடாது என்றும் செலவைக் குறைக்கும் இலவச திறந்த மூல மென்பொருட்களைப் பயன்படுத்த மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்றும் சமீபத்தில் மராட்டிய மாநில இடைநிலை… Read More »

இலவசம்: கார்ல் ஃபோகல் எழுதிய “திறந்த மூல மென்பொருள் உருவாக்குதல்” புத்தகம்

அரசாங்கங்கள், ஆதாய நோக்கற்ற நிறுவனங்கள், ஆதாயம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நிரலாளர்கள் போன்ற பல வகையான வாடிக்கையாளர்களுடன் திறந்த மூல திட்டங்களை எவ்வாறு தொடங்குவது மற்றும் நடத்துவது ஆகியவை பற்றி கார்ல் ஃபோகல் (Karl Fogel) நிறைய திறந்த மூல ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இவர் எழுதிய “திறந்த மூல மென்பொருள் உருவாக்குதல் – ஒரு கட்டற்ற மென்பொருள் திட்டத்தை வெற்றிகரமாக இயக்குவது எப்படி” என்ற புத்தகத்தை இலவசமாகப் படிக்கலாம். இது திறந்த மூல மென்பொருள்… Read More »