Category Archives: Python

எளிய தமிழில் Robotics 10. எந்திரன் கை (Robotic Arm)

விடு நிலைகள் (Degrees of freedom) விடு நிலைகள் என்றால் என்ன? எந்திரன் கையில் ஒவ்வொரு மூட்டும் ஒரு விடு நிலை என்று சொல்லலாம். அதாவது எந்திரன் கை வளைய, சுழள அல்லது முன்பின் நகரக்கூடிய இடம். எந்திரன் கைகளில் மூட்டுகள் வழக்கமாகத் தொடர் முறையில்தான் (serial) இருக்கும். தற்போது இணை முறையிலும் (parallel) மூட்டுகள் வைத்து சில எந்திரன்கள் வருகின்றன. தொடர் முறை மூட்டு எந்திரன் கைகளில் எத்தனை இயக்கிகள் உள்ளன என்று எண்ணினால் அதுதான்… Read More »

பைதான் நிரலாக்கப் பயிற்சி – நிகழ்வுக் குறிப்புகள்

24.03.2019 அன்று பைதான் பயிற்சி இனிதே நடைபெற்றது. 9 பேர் கலந்து கொண்டனர். நித்யா எளிய முறையில் பைதான் அடிப்படைகளை விளக்கினார். பின்வரும் பைதான் கூறுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பைதான் நிறுவுதல் Loops Conditional Operations Strings List Tuple File I/O கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி   நன்கொடை விவரங்கள் – வரவு – 1650 ரூ செலவு – 680 ரூ (மதிய உணவு, தேநீர்) சில படங்கள் இங்கே –

தமிழில் பைதான் நிரல் மொழி – செய்முறைப் பயிற்சி – மார்ச்சு 24 2019 – தாம்பரம், சென்னை

பைதான் நிரல் மொழி, கற்க எளிதானது. எல்லாத் துறைகளுக்குமான நிரல்கள் எழுதும் திறன்கள் கொண்டது. கணியம் அறக்கட்டளையின் மூலமாக பல்வேறு தொடர் பயிற்சி வகுப்புகளை நிகழ்த்த உள்ளோம். முதல் பயிற்சியாக பைதான் மொழி. இப்பயிற்சிக்கு பைதான் மொழி கற்கும் ஆர்வமுள்ள அனைவரையும் அழைக்கிறோம். நாள் – மார்ச்சு 24, 2019 ஞாயிறு நேரம் – காலை 9.00 முதல் 4.00 வரை இடம் – தரைதளம் 4, சுபிக்‌ஷா அடுக்ககம், 42, வியாசர் தெரு, கிழக்கு தாம்பரம்,… Read More »

open-tamil மூலம் தமிழுக்கான வேர்ச்சொல் காணும் நிரல் வெளியீடு

தமிழில் வேர்ச்சொல் வடிகட்டியை open-tamil பைதான் நிரல் தொகுதி மூலம் வழங்குகிறோம். ஆசிரியர்: முத்தையா அண்ணாமலை <ezhillang@gmail.com> சுருக்கம்: இந்த கட்டுரையில் நான் சமீபத்தில் 2013-இல் வெளியிடப்பட்ட தமிழ் வேர்ச்சொல் பகுப்பாய்வு வடிகட்டியை பொது பயனுக்கு மாற்றியது பற்றி விரிவாக எழுதுகிறேன். இந்த வேலைப்பாடுகள் முழுதுமே திறமூல மென்பொருள் சூழலினால் உருவானது என்பதை மனதில் கொள்வது முக்கியமானதும் கூட. தமிழின் கணிமை ஆய்வின் பொது வளர்ச்சிக்கு இத்தகைய பொதுவெளியில் உள்ள மென்பொருள்கள் தொடர்ந்து உதவும் என்றும், உருமாறி… Read More »

இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றி – வெளியீடு

  வணக்கம். இன்று tts.kaniyam.com என்ற இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூலநிரல் – github.com/KaniyamFoundation/tts-web Ubuntu/Linux, Python, Django, Celery, MySQL, ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டது. அறிமுகம் இந்த மென்பொருள் உங்கள் தமிழ் உரைக்கோப்புகளை (text file) ஒலிக்கோப்புகளாக (MP3) மாற்ற உதவுகிறது. (TTS Text-To-Speech) எப்படி மாற்றுவது? இதில், நீங்கள் ஒரு கணக்கு உருவாக்கவும். tts.kaniyam.com/signup/ உங்கள் மின்னஞ்சலுக்கு, புது கணக்கை… Read More »

தரவு அறிவியலிற்கான பைத்தான் நூலகம்

pandas, scikit-learn, matplotlib ஆகியவற்றிற்கு அப்பால் ஒருசில புதிய தந்திரமான வழிமுறைகளின் மூலம் பைத்தான் வாயிலாகவே தரவு அறிவியலை செயல்படுத்த முடியும் துவக்கநிலையாளர்கள் முதல் திறன்மிகுந்தவர்கள் வரையிலும் பயன்படுத்துபவர்கள் எந்தவொரு இக்கட்டிலும் சமாளித்திட மிகமுக்கியமாக தரவுஅறிவியலை இயக்கநேரத்திலும் விரைவாகவும் செயல்படுத்திட இதனுடைய நூலகங்கள் பேருதவியாக இருக்கின்றன 1.Wget எனும் நூலகம் தரவு அறிவியலாருக்கு முதன்மையான குறிக்கோளே இணையத்திலிருந்து தரவுகளை கொண்டுவருவதுதான் அதற்காக உதவவருவதுதான் Wget எனும் பைத்தானின் நூலகமாகும் இது HTTP, HTTPS, FTP ஆகிய மரபொழுங்குகளை… Read More »