Category Archives: software

டக்ஸ்மேதுடன்(TuxMath) கணிதம் படியுங்கள்

கணித சூத்திரங்களை கற்பது சில காலங்களாக்வே கடினமானதாக இருந்து வருகிறது. அவை எளிதில் கொள்ளும் படியாக இல்லா விட்டால் சிறிது சிரமம் தான். TuxMath பயன்படுத்துபவர்கள் விரைவாக கணித சிக்கல்களை அவிழ்பதாக கூறப்படுகிறது. நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை TuxMath விளையாடினால் நியாபகத் திறன் அதிகரிக்கும். இந்த விளையாட்டு மிகுந்த கேளிக்கைகள் நிறந்தது. Terry Hancock தன் மகனுக்கு கணிதம், வேப்பங்காயாய் கசப்பதாக கூறுகிறார்.அவன் எளிதில் கவனத்தை சிதற விடுவதாகவும், இதன் காரணமாக Terry Hancock… Read More »

எங்கிருந்தும் உங்கள் கணினியை இயக்கலாம்

எங்கிருந்தும் உங்கள் கணினியை இயக்கலாம்அலுவலகங்களில் உள்ள உங்களது கணினியை உங்கள் வீட்டிலிருந்து இயக்க வழியும், வசதியும் கிடைத்தால் எவ்வளவு வசதியாய் போய்விடும் என்று எண்ணி, இயங்கு தளம் மாறுபடுகிறது என்ற காரணத்தால் விட்டுவிட்டீர்களா? வீட்டில் குனு/லினக்ஸ்-ம் அலுவலகத்தில் விண்டோஸ் இயங்குதங்களும் பயன்படுத்துகிறீரா? குழப்பம் தேவையில்லை. உங்களுக்கான வழி இதோ! விண்டோஸ் இயங்கு தளங்களில் உள்ள மிக முக்கியமான மற்றும் மிகவும் பயனுள்ள வசதிகளில் ஒன்றான இந்த ரிமோட் டெஸ்க்டாப் லாகின் எனப்படும் தொலைதூரத்திலிருந்து இணைய வசதியுடன் உங்கள்… Read More »

லினக்ஸ் இயங்குதளங்களில் தமிழில் எழுதுவது எப்படி?

கட்டற்ற லினக்ஸ் இயங்குதளங்களைப் பயன்படுத்த விரும்பும் தமிழ் ஆர்வலர்கள் பலருக்கும் இருக்கும் ஐயமே அவற்றில் தமிழில் எழுதும் வழி தான். விண்டோஸ் இயங்கு தளத்தில் தமிழில் எழுத அழகி, முரசு, அஞ்சல் போன்ற மென்பொருட்கள் உள்ளன.லினக்ஸில் தமிழில் எழுத பல வழிகள் இருந்தாலும், ibus முறையே மிக எளிதானது. அமைப்புகளில் (Settings) சில சிறு மாற்றங்கள் செய்தால், எளிதாய் மொழி மாற்றி எழுதலாம்.   முதல் படி – நிறுவுதல் (Installation):   பெரும்பாலான அன்பர்களுக்கு ibus… Read More »

லினக்ஸில் ‘Deja Dup’ உதவியுடன் தரவுகளைக் காப்பெடுத்தல்

லினக்ஸில் ‘Deja Dup’ உதவியுடன் தரவுகளைக் காப்பெடுத்தல் ~ஆனந்தராஜ் இயக்குதல்: நீங்கள் உபுண்டு 11 .10 அல்லது அதற்கு மேல் உள்ள இயங்குதளங்களை இயக்குபவரானால், நீங்கள் இந்த ‘Deja Dup’-ஐ தனியாக நிறுவ தேவையில்லை. நீங்கள் ‘Deja Dup’-ஐ முதன் முதலாக பயன்படுத்தத் தொடங்கும் போது, படத்தில் காட்டியுள்ள படி, இரு பொத்தான்களைக் கொண்ட திரை தோன்றும். இதன் பொதுவான அமைப்புகளின் படி, இந்த மென்பொருளானது Trash மற்றும் Download அடைவுகளைக் காப்பெடுக்க எடுத்துக் கொள்ளாது. அது… Read More »

மொசில்லா – பாப்கார்ன்

மொசில்லா ஆம்!! மொசில்லா என்றாலே , அது இணையத்தை திறந்த தன்மையுடையதாக மாற்றுவதைப் பற்றியும் , இணையத்தின் உண்மையான சக்தியை உலகிற்கு உணர்த்துவதைப் பற்றியதுமே ஆகும். இதுவே மொசில்லாவை ஒரு புரட்சிகரமான பையர்பாக்ஸ் உலவியின் முலம் வலை தொழில்நுட்பங்களை நம் கணினிக்கு கொண்டு வர தூண்டிய விஷயமாகும். மொசில்லா இன்னும் பல புதுமைகளை செய்ய உள்ளது , அதில் நீங்கள் இழக்க கூடாத ஒன்று “மொசில்லா பாப்கார்ன்” பாப்கார்ன் எதற்காக? அது எதனைக் கொண்டு வர நினைக்கிறது?… Read More »

படங்களை ஒப்பிடுதல் – Geeqie

இரண்டு படங்களை சாதரணமான Image viewers-ஐக் கொண்டு ஒப்பிடுவது சுலபம் அல்ல. முதலில் ஒரு Image viewer(Eye of Gnome, Ristretto) கருவியை இரு சாளரமாகத் திறந்து அதில் இரண்டு படங்களை ஏற்றி, அவ்விரு சாளரங்களையும் தேவையான அளவிற்கு வைத்த பின்னரே ஒப்பிட இயலும். இவ்வாறு ஒப்பிட்டால் படத்தில் உரு அளவு பெரிதாக்கு(zoom in), உரு அளவு சிறிதாக்கு(zoom out) போன்ற செயல்களை இரு சாளரங்களிலும் தனித்தனியாக செய்ய வேண்டும். மேலும் இந்த அமைப்பை சேமிக்காவிட்டால் மீண்டும்… Read More »

GIMP-ல் இடம்பெறும் 284 எஃபெக்ட்ஸ் மற்றும் இமேஜ் ஃபில்டர் [ Effects & Filters ]

  G’MIC ஆனது GIMP உடன் வரும் நீட்சி(Plugin) ஆகும். தற்போதுள்ள G’MIC 1.5.0.8 ஆனது இமேஜ் ஃபில்டர், 284-ம் மேற்பட்ட உருமாற்றங்களைக் கொண்டது. மேலும் 1/2/3 பரிமாண படங்களை வேறு வகையாய் மாற்ற, திறமையாக கையாள, வடிகட்ட, பல்நிறமாலையாய் காண (Multi Spectral Visualizing) 15 வகைகளை கொண்டது. எப்படி நிறுவுவது: sourceforge.net/projects/gmic/files/ என்ற இணைப்பில் G’MIC 1.5.0.8.deb தொகுப்பை பதிவிறக்கலாம்.   wget -O gmic-1.5.0.8.deb sourceforge.net/projects/gmic/files/gmic_1.5.0.8_i386.deb/download sudo dpkg -i gmic-1.5.0.8.deb  … Read More »

அப்டானா ஸ்டூடியோஸ்

  அடோபி டீரீம்வீவர் என்ற பெயரைக் கேட்டாலே அலர்ஜியா உங்களுக்கு, அதன் விலையைக் கேட்டவுடன் மயக்கம் போட்டு விடுபவரா நீங்கள்? மைக்ரோசாப்ட் நிறுவனம் என்றாலே காத தூரம் ஓடுவீர்களா? உங்களுக்காகவே காத்திருக்கிறது அப்டானா ஸ்டூடியோஸ் 3. இணைய தளங்கள், தயாரிக்க உதவும் ஒரு இலவச மென்பொருள் இது. இதை க் கொண்டு எச்.டி.எம்.எல்,(HTML) சி.எஸ்,எச்,(CSS), ஜாவாஸ்கிரிப்ட்(JavaScript), ரூபிரெய்ல்ஸ்(Ruby on Rails) , பி,எச்.பி,(PHP) , பைதான்(Python) இவற்றைப் பயன் படுத்தி நமக்குத் தேவையானதை உருவாக்கலாம்.இணைய தள செயலிகளை… Read More »

Ubuntu Builder- உங்கள் வினியோகத்தை(Distribution) பில்ட் செய்யும் எளிய கருவி

உங்கள் வினியோகத்தை பில்ட் செய்யும் ஒரு எளிய கருவி தான் உபுண்டு பில்டர். இது பதிவிறக்கவும், கோப்புகளை பிரித்தெடுக்கவும், பல வழிகளில் விருப்பமைவு செய்யவும்(customize) உபுண்டு இமேஜ்களை ரீபில்ட் செய்யவும் அனுமதிக்கிறது. i386 மற்றும் amd64 இமேஜ்களை நம்மால் விருப்பமைவு செய்ய முடியும்.உபுண்டு பில்ரை நிறுவ. .deb தொகுப்புகளை இந்த இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்(code.google.com/p/ubuntu-builder/downloads/list) பிறகு இதனை டபிள் கிளிக் செய்யவும். திரைப்பிடிப்பு(screenshot)   சதிஷ் குமார்

zimbra-desktop மின்னஞ்சல்களை படிக்க மென்பொருள்

  இணைய வசதி இல்லாத சந்தப்பங்களிலோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ இணையத்திலிருந்து சேமித்த மின்னஞ்சல்களை படிக்க பொதுவாக offline mail client தேவை. லினக்ஸ் உடன் பல மென்பொருள் இருந்தாலும், சில மென்பொருள் சிறப்பு. இங்கு Zimbra Desktop பற்றி பார்போம். மென்பொருளை Download செய்து நிறுவிக்கொள்வதன் மூலம் உங்கள் கணினியில் இணையம் இல்லாதபோதும் கூட நீங்கள் முதலில் இணையத்திலிருந்து சேமித்த மின்னஞ்சல்களை படிக்கலாம். இப்பொது எப்படி என்பதை பார்போம், பதிவிறக்கம் மற்றும் நிறுவ wget -N… Read More »