Tamil

எளிய தமிழில் Computer Vision 2. தொழில்துறையில் முக்கியப் பயன்பாடுகள்

தொழில்துறையில், அதிலும் குறிப்பாக உற்பத்தியில், கணினிப் பார்வைக்கு என்ன முக்கியமான பயன்பாடுகள் உள்ளன என்று பார்ப்போம். கைமுறைத் தொகுப்பு வேலைக்கு உதவுதல் (Aiding Manual Assembly) முன்னேறியுள்ள இன்றைய தொழில்நுட்பத்தின் உதவியால் சில உற்பத்திப் பொருட்கள் தானியங்கியாகத் தொகுக்கப்படுகின்றன. எனினும் பெரும்பாலான பொருட்கள் இன்னும் கைமுறையாகவே தொகுக்கப்படுகின்றன. துல்லியமாகத் தொகுக்க வேண்டிய பொருட்களில் கணினிப் பார்வை…
Read more

ஓப்பன்-தமிழ் வெளியீடு – வரிசை எண் 0.97

ஒப்பன்-தமிழ் வரிசை எண் v0.97 வணக்கம் தமிழ் கணிமை ஆர்வலர்களே, இன்று ஓப்பன்-தமிழ் நிரல் தொகுப்பு வரிசை எண் 0.97 வெளியீடு அறிவிக்கிறோம். இதில் புதியன, சென்ற 2019-நவம்பர் மாதம் கழித்து வந்த மேம்பாடுகளாகியன, கீழ்வருமாறு.இதனை பெற $ pip install –upgrade open-tamil==0.97 என்று கட்டளை கொடுக்கலாம். 1 புதிய மேம்பாடுகள்: மாத்திரை கணித்தல்…
Read more

எளிய தமிழில் Computer Vision 1. ஐம்புலன்களில் கண்களே முதன்மை!

ஐம்புலன்களில் கண்களை நாம் உயர்வாகக் கருதக்காரணம் நம் வேலைகளைச் செய்யவும், பல இடங்களுக்குச் சென்று வரவும், எழுதப் படிக்கவும் பார்வை இன்றியமையாததாக உள்ளது. மற்ற எல்லாப் புலன்களையும் விட கண்ணால் பார்க்கும் தகவல்களை செயலாக்கவும் சேமிக்கவும் நம் மூளை அதிக இடத்தை ஒதுக்குகிறது. ஆனால் அது ஒழுங்காக வேலை செய்துகொண்டிருக்கும்வரை நாம் நம் கண்களின் அருமையைப்…
Read more

எளிய தமிழில் IoT 23. திறன்மிகு மானிகள் (Smart Meters)

தொழிற்சாலைகளில் தயாரிப்பைப் பொருத்து மின்சாரம், தண்ணீர், நீராவி, எரிவாயு, அழுத்தக் காற்று, டீசல், உலை எரியெண்ணெய் (furnace oil) போன்ற பொதுப்பயன்களை (Utilities) பெரும்பாலும் குழாய்த்தொடர்  மூலம் பயன்படுத்துவார்கள். தேவையான வேலைகளுக்கு மட்டுமே தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துகிறோமா என்று எப்படித் தெரியும்? கவனமில்லாமல் தேவையற்றுத் திறந்து விடவில்லை என்று எப்படித் தெரியும்? இவற்றுக்கெல்லாம் பயனளவைக்…
Read more

தமிழ் சான்றோர் சந்திப்பு: 30 May 2020 (சனிக்கிழமை)

தமிழ் சான்றோர் சந்திப்பு: 30 May 2020 (சனிக்கிழமை) ========================================= ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் இந்த வாரம், “மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தை (Project Madurai) 1990-களில் உருவாக்கி, உலகம் முழுவதும் நூலகங்களில் தேங்கிக் கிடந்த சங்ககாலத் தமிழ் நூல்களை மின்நூல்களாகத் தொகுத்து, நாமெல்லாம் கணினியில் படிக்க வழிவகை…
Read more

எளிய தமிழில் IoT 22. இடர்மிகுந்த வேலைகளில் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு

சுரங்கப் பணியாளர்களின் உயிர் காக்கும் கேனரி (canary) பறவை சுரங்கங்களில் வேலை செய்பவர்கள் கேனரி போன்ற சிறு பறவைகளைக் கூண்டில் வைத்துக் கையோடு எடுத்துச் செல்வார்களாம்.  திடீரென்று  கார்பன் மோனாக்சைடு (carbon monoxide) அல்லது மீத்தேன் (methane) போன்ற நச்சுவாயு மிகுந்தால் அந்தப் பறவை முதலில் கீச்சிடுதலை நிறுத்தி விட்டுத் துவண்டு விழும். அதைப் பார்த்தவுடன்…
Read more

எளிய தமிழில் IoT 21. சீரொளி (Laser) உணரிகள்

தொழிற்சாலைகளில் உற்பத்தியின்போது கீழ்க்கண்ட அம்சங்களை அளவிட சீரொளி உணரிகளைப் பயன்படுத்தலாம்: உளது அல்லது இருப்பது (presence) இடப்பெயர்ச்சி (displacement) தூரம் (distance) இருப்பிடம் (position) தடிப்பளவு (thickness)  ஒரு பொருள் இருப்பதையும் (presence) இல்லாததையும் (absence) கண்டறிதல் குறைந்த தூரத்தில் உள்ள ஒரு பொருளைக் கண்டறியக்கூடிய அருகாமை உணரிகளைப் (inductive proximity sensors) பயன்படுத்தலாம். ஒளிமின்னழுத்த…
Read more

எளிய தமிழில் IoT 20. பழுதடைவதை முன்னறிந்து பராமரித்தல் (Predictive maintenance)

பழுதடைந்தவுடன் பராமரித்தல் (Breakdown Maintenance) தொழிற்சாலைகளில் சிலநேரங்களில் எந்திரங்களின் மின்பொறி (electric motor) அளவுக்கு மேல் சூடாகி எரிந்து போய் விடுவது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதிக செலவு செய்து செப்புக்கம்பியை மீள்சுற்று (rewinding) செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல. உறுதி கூறிய நேரத்தில் வேலையை முடித்துக் கொடுக்க இயலாமல் வாடிக்கையாளர்களையும் இழக்க நேரலாம். இதைத்…
Read more

எளிய தமிழில் IoT 19. நிறுவனத்தின் சொத்துக்கள் மேலாண்மை

சொத்துக்களின் பயன்படுத்துதல் (utilization) விழுக்காடு பல நேரங்களில் நிறுவனத்தின் பணியாளர்கள் மரமேடைத்தூக்கி வண்டி (pallet truck) மற்ற உற்பத்தி இயந்திரங்கள் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறுவன உரிமையாளரின் முன்வைப்பார்கள். கைவசம் இருக்கும் ஒப்பந்தங்களைச் செய்து முடிக்க இந்த இயந்திரம் அவசியம் தேவைப்படுகின்றது என்று சொல்வார்கள். ஆனால் ஏற்கனவே இருக்கும் இயந்திரங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா…
Read more

எளிய தமிழில் IoT 18. சரக்கு மேலாண்மை (Inventory Management)

சரக்கு மேலாண்மையில் IoT யை கொள்முதல் தொடர் (supply chain) மற்றும் இடைவழியில் கண்காணிக்கவும் (transit tracking) பயன்படுத்தலாம். இங்கு நாம் தொழிற்சாலைக்குள் சரக்கு மேலாண்மை எப்படி செய்வதென்று மட்டும் பார்ப்போம். நாம் முந்தைய இரண்டு கட்டுரைகளில் பார்த்ததுபோல பட்டை மற்றும் கட்டக் குறியீடு (Barcode and QR code) மற்றும் வானலை அடையாளம் (RFID)…
Read more