Tamil

எளிய தமிழில் Computer Vision 11. படங்களை வகைப்படுத்தல் (image classification)

“ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு இணையானது (A picture is worth a thousand words)” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. அதாவது பக்கம் பக்கமாக எழுதிப் புரிய வைக்கக் கடினமான ஒரு சிக்கலான கருத்தை ஒற்றைப் படத்தில் தெரிவிக்க முடியும் என்பதே இதன் பொருள். ஆனால் கணினிகளைப் பொறுத்தவரை, அவை ஒரு படத்தில்…
Read more

எளிய தமிழில் Computer Vision 10. வடிவியல் வடிவங்களை அடையாளம் காணுதல்

ஹ்யூ உருமாற்றம் (Hough transform) முதன்முதலில் ஹ்யூ உருமாற்றம் படத்தில் உள்ள கோடுகளை அடையாளம் காண்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. ஆனால் பின்னர் இது வட்டங்கள், நீள்வட்டங்கள் போன்ற வடிவங்களையும் அடையாளம் காண விரிவாக்கப்பட்டது. மேலும் சமதளங்களையும் மற்றும் உருளைகள் (Planes and cylinders) போன்ற முப்பரிமாணப் (3D) பொருட்களையும் கூடக் கண்டறிய முடியும். ஆக கோடுகள்,…
Read more

எளிய தமிழில் Computer Vision 9. பட அம்சங்களைப் பிரித்தெடுத்தல் (Feature extraction)

படங்களிலிருந்து நமக்குப் பயனுள்ள அம்சங்களைப் பிரித்தெடுக்க பட அலசல் செயலாக்கம் (image processing) செய்கிறோம். அடுத்து வரும் ஒவ்வொரு வேலைக்கும் ஒன்றுக்கு மேல்பட்ட செயல்முறைகள் நாம் பார்த்த மென்பொருட்களில் உள்ளன. நம் வேலைக்கு ஏற்றவாறு நாம் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விளிம்பு கண்டறிதல் (Edge detection) ஒரு படத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அல்லது இடைநிறுத்தங்கள் (discontinuities)…
Read more

எளிய தமிழில் Computer Vision 8. கட்டற்ற திறந்தமூல ஓபன்சிவி (OpenCV) மென்பொருள்

ஓபன்சிவி (OpenCV)  C மற்றும் C++ நிரல் மொழிகளில் எழுதப்பட்டது.  சுமார் 2500 கணினிப் பார்வை வினைச்சரங்கள் (algorithms) மற்றும் அவற்றுக்குத் துணைபுரியும் வழிமுறைகளைக் (convenience methods) கொண்டுள்ளது. இது லினக்ஸ், யூனிக்ஸ், மேக், விண்டோஸ் ஆக எல்லாக் கணினி இயங்குதளங்களிலும் மற்றும் ஆன்டிராய்டு, ஆப்பிள் போன்ற திறன்பேசிகளிலும் ஓடும்.  இது பயிற்சிகளுக்கும் ஆய்வுகளுக்கும் மட்டுமே…
Read more

எளிய தமிழில் Computer Vision 7. கட்டற்ற திறந்தமூல பைதான் மென்பொருட்கள்

படங்களை வைத்து எந்த வேலை செய்ய வேண்டுமென்றாலும் நாம் எண் சார்ந்த செயல்பாடுகள், அதிலும் குறிப்பாக அணி (array), தளவணி (matrix) சார்ந்த செயல்பாடுகள் வெகுவாகச் செய்யவேண்டியிருக்கும் என்று முந்தைய கட்டுரையில் பார்த்தோம். இதற்கு நமக்கு அணி மற்றும் தளவணிகளைக் கையாளும் நிரலகங்கள் தேவை. பைதான் நிரல் மொழியில் வேலை செய்யும்போது நாம் பகுப்பாய்வு செய்யவேண்டிய…
Read more

எளிய தமிழில் Computer Vision 6. எண்களின் அணிகளும் (arrays) செய்முறைகளும்

படங்களைக் கணினியில் எண்களாக சேமித்து வைக்கிறோம் என்று பார்த்தோம். எண்களாக எந்த முறையில் சேமித்து வைக்கிறோம் என்பதை இங்கு மேலும் கொஞ்சம் விவரமாகப் பார்ப்போம். வரிசைகளும் (rows) பத்திகளும் (columns) தடங்களும் (channels) எடுத்துக்காட்டாக இந்த எளிய படத்தைப் பார்ப்போம். இந்தப் படத்தில் நான்கு வரிசைகளும் (rows) ஒவ்வொரு வரிசையிலும் ஐந்து பத்திகளில் (columns) படவலகுகளும்…
Read more

எளிய தமிழில் Computer Vision 5. வண்ண மாதிரிகள் (Color models)

வண்ண மாதிரி என்பது முதன்மை வண்ணங்களைப் பயன்படுத்தி எல்லாவிதமான வண்ணங்களையும் உருவாக்குவதற்கான ஒரு அமைப்பாகும். சேர்க்கை வண்ண மாதிரிகள் (additive color models) மற்றும் கழித்தல் வண்ண மாதிரிகள் (subtractive color models) என்று இரண்டு வெவ்வேறு வண்ண மாதிரிகள் உள்ளன. சேர்க்கை மாதிரிகள் கணினித் திரைகளில் வண்ணங்களைக் குறிக்க ஒளியைப் பயன்படுத்துகின்றன. மாறாக கழித்தல்…
Read more

எளிய தமிழில் Computer Vision 4. படத்தை எண்களாகப் பதிவு செய்தல்

படத்தை எண்களாகப் பதிவு செய்யும் (Digital image representation) மூன்று அடிப்படை வழிமுறைகளை இப்படத்தில் காணலாம். இடது பக்கம் இருப்பது வண்ணப் படம் (Color image), நடுவில் இருப்பது சாம்பல் அளவீட்டுப் படம் (Grayscale image) மற்றும் வலது பக்கம் இருப்பது கருப்பு வெள்ளை அல்லது இருமப் படம் (Black and white or binary…
Read more

எளிய தமிழில் Computer Vision 3. படத்தைப் பதிவு செய்யும் (Image recording) வழிமுறைகள்

தமிழில் வடிவம் மற்றும் உருவம் போன்ற சொற்களை shape க்குப் பரவலாகப் பயன்படுத்துகிறோம். படம் என்ற சொல்லே image க்கு ஒப்பானது. ஆனால் படம் என்றால் ஓவியம் மற்றும் திரைப்படம் என்றும் புரியக்கூடும். ஆகவே பொருள்மயக்கம் வரக்கூடிய இடங்களில் பிம்பம் என்ற சொல்லையும் பயன்படுத்தலாம். படம் என்றால் என்ன? மிக எளிதாகச் சொல்லப்போனால் படம் என்பது…
Read more

கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு – மாநாட்டுக் குறிப்புகள்

இரண்டு நாட்களாக இயங்கலையில் நேரலையில் களை கட்டியிருந்த கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு இன்று மாலையுடன் இனிதே நிறைவு பெற்றது. மாநாட்டுக் குறிப்புகள்: 1) திறமூலத் தமிழ் நிரல் தொகுப்பில் தொடங்கிய அமர்வுகள், தமிழ் இணையக் கல்விக் கழக அமர்வில் நிறைவடைந்தன. மொத்தம் பதினோரு அமர்வுகள். 2) ஒவ்வோர் அமர்வும் தித்திக்கும் தேனாக இருந்தது. நேரலையில்…
Read more