எளிய தமிழில் IoT 22. இடர்மிகுந்த வேலைகளில் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு
சுரங்கப் பணியாளர்களின் உயிர் காக்கும் கேனரி (canary) பறவை சுரங்கங்களில் வேலை செய்பவர்கள் கேனரி போன்ற சிறு பறவைகளைக் கூண்டில் வைத்துக் கையோடு எடுத்துச் செல்வார்களாம். திடீரென்று கார்பன் மோனாக்சைடு (carbon monoxide) அல்லது மீத்தேன் (methane) போன்ற நச்சுவாயு மிகுந்தால் அந்தப் பறவை முதலில் கீச்சிடுதலை நிறுத்தி விட்டுத் துவண்டு விழும். அதைப் பார்த்தவுடன் வெளியே ஓடி வந்துவிடுவார்களாம். இவ்வாறு கேனரி அக்காலத்தில் ஆபத்தை முன்னறிவித்து உயிர் காக்கும் உணரியாக செயல்பட்டது. தொழில்நுட்ப ரீதியான கேனரி… Read More »