Category Archives: Tamil

[தினம் ஒரு கட்டளை] df வட்டுகளின் பயன்பாடு எவ்வளவு?

நாள்15: df அமைப்பில் உள்ள வட்டுகளின் பயன்பாடு எவ்வளவு என்பதனை அறிய இந்தக்கட்டளை பயன்படுகிறது. df: இந்த கட்டளை இணைக்கப்பட்ட சேமிப்பிட விவரங்களை குறிப்பாக மொத்த அளவு, பயன்படுத்தப்பட்ட அளவு, பயன்பாட்டிற்கு இருக்கும் சேமிப்பிட அளவு ஆகியவற்றை காட்டுகிறது. தொடரியல்: hariharan@kaniyam: ~/odoc/ $ df தெரிவுகள்: -h: இந்த தெரிவானது கோப்பின் அளவுகளை வெறும் பைட்டுகளில் காட்டாமல் mb,gb எனும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அளிக்கிறது. Syntax: df -h df -T: எனும் தெரிவு… Read More »

[தினம் ஒரு கட்டளை] ping கணினி இணைப்பில் இருக்கிறதா?

நாள் 14: ping ping: இந்தகட்டளை இரு கணிணிகள் சரிவர இணைய இணைப்பில் இருக்கின்றனவா என்பதை சோதிக்க பயன்படுகிறது.இந்த பிங் கட்டளை கொடுக்கப்பட்ட கணினியின் இணையப் பெயரையும் (hostname) அல்லது இணைய நெறிமுறை முகவரி (ip address)வைத்து ICMP துணுக்குகளை கொடுக்கப்பட்ட  முடிவில்லாமல் இணைய முகவரிக்கு அனுப்பும். தொடரியல்:  hariharan@kaniyam : ~/odoc $ ping [ipaddress/websiteaddress] hariharan@kaniyam : ~/odoc $ ping google.com hariharan@kaniyam : ~/odoc $ ping 8.8.8.8 தெரிவுகள்: -c:… Read More »

[தினம் ஒரு கட்டளை] uptime இயங்குநேரம்.

13ம் நாள் uptime: இந்த கட்டளை இயங்குதளம் துவங்கியதிலிருந்து எவ்வளவு நேரமாக இயங்குகிறது என காட்டுகிறது. மேலும் சராசரியாக எவ்வளவு பளுவை மையச்செயலகம்  தாங்குகிறது என்பதையும் கூறுகிறது. இந்தக்கட்டளை காட்டும் விவரங்கள்: 1. தற்போதைய நேரம். 2. இயங்கும் நேரம் நாட்களில் (1 நாள்களுக்குள் இயங்கும் நேரம் இருப்பின் மணிநேரங்கள் மற்றும் மணித்துளிகள் காட்டப்படும்) 3. மணிநேரங்கள் மற்றும் மணித்துளிகள் (நாட்கள் அல்லமல் இருக்கும் நேர விவரங்கள்) 4. தற்போது இயக்கத்தில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை 5.… Read More »

[தினம் ஒரு கட்டளை] top செயல்பாடுகளை மேலிருந்து பார்

நாள் : 12 top இந்த கட்டளை பெரும்பாலான லினக்ஸ் இயங்குதளங்களில் வேலைசெய்யும் வேலைசெய்யவிலை எனில் அது வேறொரு பெயரில் கண்டிப்பாக இருக்கக்கூடும். இந்தக்கட்டளை நமக்கு கணினியில் தற்போது நடந்துகொண்டிருக்கும் செயல்பாடுகளை பற்றிய பல்வேறு வகையான விவரங்களை தெரிவிக்கும். அவ்வாறு தெரிவிக்கும் விவரங்களின் பட்டியல் பின்வருமாறு : 1. தற்போதைய நேரம். 2. கணினி இயங்கிக்கொண்டிருக்கும் நேரம். 3. கணினியில் உள்நுழைந்துள்ள பயனர்களின் எண்ணிக்கை. 4. கணிணியில் உள்ள சராசரி செயல்பாடுகளின் சுமை ( Average System… Read More »

[தினம் ஒரு கட்டளை] whoami நான் யார்?

நாள் 11: whoami கணிணியில் நாம் எந்த பயனராக உள்நுழைந்துள்ளோம் என அறிய இந்தக்கட்டளை பயன்படுகிறது. தொடரியல்: hariharan@kaniyam: ~/odoc  $ whoami நன்றி! ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர், Programmer Life – programmerlife1.wordpress.com

[தினம் ஒரு கட்டளை] mkdir கோப்புறை உருவாக்கு

10 வது நாள் நாம் பார்க்கவிருப்பது கோப்புறை உருவாக்கும் கட்டளை நாம் தொடர்புள்ள கோப்புகளை எல்லவற்றையும் சேர்த்து ஒரு கோப்புறை உருவாக்கி அதில் சேமிப்பது தேவைப்படும் நேரத்தில் அந்த கோப்பினை நாம் எளிதாக கண்டறிய வழிவகை செய்யும். mkdir – இந்த கட்டளை கோப்புறையை உருவாக்கு (make directory) எனும் ஆங்கில சொற்சுருக்கத்தை அதன் பெயராகக் கொண்டுள்ளது. கோப்புறையை உருவாக்க பயன்படும் இந்த கட்டளை சில கோப்புறைகளின் உள்ளே மூல பயனர் மட்டுமே இயக்க இயலும். அவ்வாறான… Read More »

[தினம் ஒரு கட்டளை] Date நாள்

9-வது நாளாகிய இன்று நாம் பார்க்கவிருக்கும் கட்டளை date பெயரிலேயே அது எதைப்பற்றியது என்று எளிதில் விளங்கும். date – நாள் இந்தக்கட்டளை இயங்குதளம் பராமரிக்கும் இன்றைய தேதி மற்றும் நேரத்தை (வன்பொருள் கடிகாரம் நேரத்தை மற்றொரு வடிவத்தில் பராமரிக்கும்.) காட்டும். தொடரியல் : hariharan@kaniyam: ~/odoc/ $ date மேற்கண்ட கட்டளை இன்றைய தேதி மற்றும் நேரத்தை காண்பிக்கிறது. date கட்டளை மூலம் காட்டப்படும் தேதியை நமக்கு தேவையானபடி வடிவமைப்பு செய்துகொள்ள முடியும். வடிவமைப்புக்காண குறியீடுகள்… Read More »

[தினம் ஒரு கட்டளை] PS செயல்பாட்டு நிழற்படம்

மற்றொரு தினம் ஒரு கட்டளை பதிவில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 8 வது நாள் PS – Process Selection (Snapshot) லினக்ஸ் கணினியில் துவங்கியதிலிருந்து பல செயல்படுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அந்த நிகழ்வுகளை ஒரு நிழற்படம் போல ஒருகனப் பொழுதில் இருப்பனவற்றை பட்டியலிட்டு காட்ட இந்த கட்டளை பயன்படுகிறது. தொடரியல்: hariharan@kaniyam : ~/odoc $ ps இந்த கட்டளை தற்போது கட்டளை இயக்கியில் இயக்கத்தில் இருக்கும் செயல்பாடுகளை காண்பிக்க பயன்படுகிறது. தெரிவுகள்: இந்த கட்டளைக்காண… Read More »

[தினம் ஒரு கட்டளை] GREP தேடுதல் வேட்டையின் கருவி

இன்று 7ம் நாள். நாம் பார்க்கவிருக்கும் கட்டளை GREP – Global Regular Expression Print ஒரு கோப்பிலோ அல்லது ஒரு திரையிலோ (ஒரு கட்டளையின் வெளியீடு) உள்ள உரையில் ஒரு உள்ளீடாக கொடுக்கப்பட்ட சொல் அல்லது காட்டுரு (pattern)க்கு பொருத்தமானவைகளை பட்டியலிடக்கூடிய ஒரு கட்டளை ஆகும். தொடரியல் : hariharan@kaniyam: ~/odoc $ grep “pattern” filename தெரிவுகள் : -i எனும் தெரிவு ஆங்கில பெரிய மற்றும் சிறிய எழுத்து வேறுபடுகளை புறக்கணித்து பொருத்தங்களை… Read More »

[தினம் ஒரு கட்டளை] Head and Tail தலையும் வாலும்

இன்று 6 வது நாள் வார இறுதியாக வருவதாலும், இரு எதிரெதிரான கட்டளைகளை புரிந்துகொள்வதற்கு எளிதாக இருப்பதாலும், இன்று  இரு கட்டளைகளைக் காண்போம். அதில் முதலாவதாக HEAD பற்றி காண்போம். head கட்டளை ஒரு உரை கோப்பின் முதல் சில வரிகளை காண்பிக்க பயன்படுகிறது. தானமைவு (default) அமைப்பாக 10 வரிகளை அளிக்கிறது. இருநிலை தரவுகளைக்கொண்ட கோப்புகளாக இருப்பின் அவற்றில் உள்ள உரை மற்றும் குறியீடுகளை காண்பிக்கிறது. பல கோப்புகளை உள்ளீடாக அளிக்கும் போது ஒவ்வொறு கோப்பின்… Read More »