பட்டியல்கள்(Lists),மாறாத பட்டியல்கள்(Tuples) ஆகியவற்றில்கணினியின் நினைவக மேலாண்மை

தரவுகளை வரிசைப்படுத்தப்பட்ட வழியில் சேமிப்பதற்காக பைதான் எனும் கணினிமொழியானது ஒன்றுக்கு மேற்பட்ட தரவுகளின் கட்டமைப்பு களைக் கொண்டுள்ளது. அவைகளுள் பட்டியல்கள்(Lists), மாறாத பட்டியல்கள்(Tuples) ஆகியஇரண்டு தரவுகளின் கட்டமைப்பு களுக்குமட்டுமான ஒருசில பொதுவான தன்மைகளையும் இவ்விரண்டின் வெவ்வேறான தரவுகளின் கட்டமைப்புகளின் அவசியத்தைப் பற்றிய புரிதலையும் இந்த கட்டுரையில் காணலாம். இந்த இரண்டு வகைதரவுகளின் கட்டமைப்புகளிலும் நினைவகம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதையும் இதில் காணலாம். இந்த கட்டுரை CPython செயல்படுத்தலின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது என்ற செய்தியையும் மனதில் கொள்க. பட்டியல்கள்(Lists),மாறாத… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 23. MR உருவாக்கும் கட்டற்ற திறந்தமூலக் கருவிகள்

இந்தத் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் திறன்மிக்க MR தலையணிகளை வெளியிட்டுள்ளன. ஆனால் இவை பெரும்பாலும் மிகவும் விலையுயர்ந்தவையாக உள்ளன. பயிற்சிக்கும், நிரல் எழுதி சோதனை செய்து பார்க்கவும் குறைந்த விலையில் தலையணிகள் இருந்தால் வசதியாக இருக்குமல்லவா? இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக ஹோலோகிட் அட்டைப்பெட்டித் தலையணி (HoloKit Cardboard Headset) மற்றும் அரைசான் AR/MR தலையணி (Aryzon AR/MR Headset) சந்தைக்கு வந்துள்ளன.  ஹோலோகிட் அட்டைப்பெட்டித் தலையணி ஹோலோகிட் திறன்பேசித் திரை அடிப்படையிலான மிகை மற்றும் கலந்த… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 30-05-2021 – மாலை 4 மணி – இன்று – Python data structures

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Basics of Python, List comprehension, Dictionary comprehension, Map, filter and reduce. பைதான் மொழியில் list, dictionary, map, filter, reduce ஆகியவற்றை பயன்படுத்துதல் பற்றி காண்போம்.… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 22. MR தலையணி (headset) வகைகள்

கலந்த மெய்ம்மை (MR) தலையணிகள் அடிப்படையில் AR போலவே மெய்யுலகத்தில் மெய்நிகர் உருவங்களைச் சேர்க்கவேண்டும். ஆகவே நாம் முந்தைய AR கட்டுரையில் பார்த்த இரண்டு வழிமுறைகளைத் திரும்பப் பார்ப்போம். படத்தில் இடதுபுறம் இருப்பது தோற்ற மெய்ம்மை (VR). மெய்யுலகம் தெரியாது. நாம் முற்றிலும் மெய்நிகர் உலகிலேயே இருப்போம். ஒப்பீடு செய்ய மட்டுமே இதைக் காட்டுகிறோம். ஒளியியல் வழி ஊடுருவும் காட்சி (Optical see through) படத்தில் நடுவில் கண்ணாடி வழியாக வெளியுலகம் தெரியும். கண்ணாடியின்மேல் நாம் மெய்நிகர்… Read More »

விண்டோஇயக்கமுறைமைஅமைவின்நிருவாகி க்கான திறமூல கருவிகள்

கணினி நிருவாகிகளின் அல்லது கணினி அமைவுநிருவாகிகளின் மென்பொருட்களானவை உள்ளமைவுகள், நிருவாகப் பணிகள், பாதுகாப்பை மேம்படுத்துதல், தொழில்நுட்ப ஆதரவு போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன, குறிப்பாக வலைபின்னலில் இணைக்கப்பட்ட கணினி அமைப்புகளில். திறமூல கருவிகள் அமைவுநிருவாகிகளின் பணியை எளிதாக்குகின்றன, அவைகளுள் ஒரு சில சிறந்தவை பின்வருமாறு. 1.PowerShell மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டஇது முதன்முதல் கருத்தில் கொள்ளும் கருவிகளில் ஒன்றாகும். இது கட்டமைப்பு மேலாண்மை , தானியங்கிபணி (குறுக்கு-தளம்) க்கான ஒரு கட்டமைப்பாகும், இது உரைநிரலாக்க மொழியையும் கட்டளை வரி… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 23-03-2021 – மாலை 4 மணி – இன்று – Jupyter Notebook

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Jupyter Notebook மூலம் பைதான் மொழி கற்றல் – ஒரு அறிமுகம் Jupyter Notebook என்பது பைதான் நிரல் எழுதுவதற்கான ஒரு மென்பொருள் ஆகும். இதன் மூலம் Apache Spark,… Read More »

Shogun- எனும் இயந்திர கற்றலிற்கான மென்பொருள் நூலகம் ஒரு அறிமுகம்

இயந்திர கற்றல் (ML) என்பது சக்தி வாய்ந்தது. கடந்த இரண்டு தசாப்தங்களாக, ஒரு வழக்கத்திற்கு மாறான கல்வித் துறையிலிருந்து நாம் வாழும் முறையை மாற்றிடுமாறு உருவாகியுள்ளது. அதன் வழிமுறைகள் சமுதாயத்தை பாதிக்கின்றன மேலும் அதன் கருவிகள் உலகப் பொருளாதாரத்தில் ஒரு பில்லியன் டாலர் செல்வாக்கைக் கொண்டுள்ளன. இவ்வாறான சூழலில் Shogun எனும் இயந்திர கற்றலிற்கான மென்பொருள் நூலக மேம்படுத்துநர்கள் இது முதன்மை வழிமுறைகளுடனும் பயனாளரின் நட்புடன்கூடிய , அணுகக்கூடியது என்பதை உறுதிப்படுத்த விரும்புகின்றார்கள். அறிவியலறிஞர்கள், தரவுகளின் ஆர்வலர்கள்,… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 21. கலந்த மெய்ம்மை (Mixed Reality – MR)

ஊடாடும் மிகை மெய்ம்மை (AR) கலந்த மெய்ம்மை (MR) தொழில்நுட்பத்தின் முக்கிய சிறப்பியல்பு என்னவென்றால் நாம் கணினி உதவியுடன் உருவாக்கிய வடிவங்கள் மெய்யுலக சூழலில் உள்ள பொருட்களுடன் நிகழ்நேரத்தில் ஊடாட (interact) இயலும் என்று முன்னரே பார்த்தோம். இதற்கு மாறாக மிகை மெய்ம்மை (AR) தொழில்நுட்பத்தில் இம்மாதிரி ஊடாடல் இயலாது. ஆகவே கலந்த மெய்ம்மையை ஊடாடும் மிகை மெய்ம்மை என்றும் கூறலாம். மெய்யுலகமும் மெய்நிகர் வடிவங்களும் பின்னிப்பிணைந்தவை (intertwined) மெய்யுலகில் மெய்நிகர் பொருட்களை மேலடுக்காக (overlays) மிகை… Read More »

அஞ்சலி – இரா. கதிர்வேல்

    Link இரா. கதிர்வேல் தஞ்சையில் உள்ள பேராவூரணி, சித்தாதிக்காடு ஊரைச் சேர்ந்தவர். இன்று காலை ஊரில் வீட்டின் அருகில் உள்ள, அறுந்த மின்கம்பியின் அருகே சென்ற, தன் குழந்தையை காப்பாற்றி , மின்சாரம் தாக்கி, உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு, பேரதிர்ச்சியில் உள்ளேன். 30 வயதுகளில் உள்ள இளைஞர். தானாகவே லினக்சு, பைதான் நுட்பங்களைப் படித்தவர். கணியம் தளத்தின் தொடக்கத்தில் இருந்தே பேராதரவு தந்தவர். தாம் கற்றவற்றை தமிழில் பிறர்க்கு பகிர்ந்தவர். கணியம் தளத்தில்… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 14-03-2021 – மாலை 4 மணி – இன்று

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. இயந்திரவழிக் கற்றல் – ஒரு அறிமுகம் தரவுகளில் இருந்து தானாகவே கற்றுக்கொள்ளும் கருவிகளின் காலம் இது. இவை பங்களிக்காத துறைகளே இல்லை எனும் அளவிற்கு எல்லாத் துறைகளிலும், கற்கும் கருவிகள்… Read More »