எந்தவொரு கணினி மொழியையும் எளிதாக கற்றுகொள்வதற்கான ஐந்து படிமுறைகள்

ஒருசிலர் புதிய நிரலாக்க(கணினி) மொழிகளைக் கற்க விரும்புகிறார்கள். வேறுசிலர் அவ்வாறு விரும்பவில்லை ஆயினும் அவ்வாறு கற்கவிரும்பாதவர்கள் கூட பின்வரும் ஐந்து படிமுறைகளை மட்டும் பின்பற்றி எளிதாக எந்தவொரு புதிய நிரலாக்க(கணினி) மொழியையும் கற்றுக் கொள்ள முடியும். இந்த கட்டுரையில், ஒரு நிரலாளரைப் போல எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதை காண்பிக்கப் படுகின்றது, இதன் மூலம் புதியவர்எவரும் எந்தவொரு நிரலாக்க(கணினி)மொழியையும் நம்பிக்கையுடன் கற்றுக்கொள்ள முடியும் என்பது திண்ணம். உண்மை என்னவென்றால், நாம் எவ்வாறு நிரலாக்கம் செய்வது எனும் படிமுறையை… Read More »

எளிய தமிழில் Computer Vision 24. தயாரிப்பு மற்றும் பாகங்களைத் தொகுத்தல் (Product and Component Assembly)

செலுத்துப்பட்டையில் (conveyor belt) வரும் பாகங்கள் ஒற்றையாக வரும். மேலும் இவை ஒரே திசையமையில் இருக்கக் கூடும். இவற்றை ஒவ்வொன்றாக எந்திரனின் கைப்பிடியில் பிடித்து எடுப்பது அவ்வளவு கடினமான வேலை அல்ல. பலவிதமான பாகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தாலும் பாகங்களை அவற்றின் வடிவம் (shape), அளவு (size)  மற்றும் பட்டைக்குறி (barcode) மூலம் அடையாளம் கண்டுகொள்ளலாம். ஆனால் கலன்களில் (bin) கொட்டி வைத்திருக்கும் பாகங்கள் சீரற்ற திசையமைவில் (random orientation)  இருக்கும். இவற்றை எந்திரனின் கைப்பிடியில் பிடித்து… Read More »

JavaScript ஏன்பிரபலமாக உள்ளது

ஜாவாஸ்கிரிப்ட் GitHubஇல் உள்ள செயல்திட்டங்களுக்கு பங்களிப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மிகவும் பிரபலமான நிரலாக்க மொழியாக இருந்து வருகிறது. இது தொடர்ந்து மிகவும் பிரபலமான சிறந்த கணினி மொழிகளில் ஒன்றாக திகழ்வதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவை பின்வருமாறு 1. ஜாவாஸ்கிரிப்ட் ஆனது துவக்கநிலை, இடைநிலை மேம்பட்ட நிலை ஆக எந்தவொரு நிலையிலுள்ள மேம்படுத்துநர்களுக்கும் தேவையான வசதிவாய்ப்புகளை வழங்குகிறது .இதனை கொண்டு நாம் துவங்கவிரும்பும் எந்தவொரு புதிய பயன்பாட்டிற்கான செயல்திட்டத்திற்காகவென IDE எனும் நிரலாக்கத்திற்கான தனிப்பட்ட எந்தவொரு சூழல்… Read More »

எளிய தமிழில் Computer Vision 23. சோதனை அமைப்புகள் (Inspection systems)

அடுத்து கணினிப் பார்வை அமைப்புகளைத் தொழில்துறையில், மேலும் குறிப்பாகத் தயாரிப்பில், பயன்படுத்தும் சில வழிமுறைகளைப் பார்ப்போம். பார்வை சோதனை அமைப்புகள் என்றால் என்ன?  பார்வை சோதனை அமைப்புகள் (இயந்திரப் பார்வை அமைப்புகள்) பல்வேறு தொழில்துறை மற்றும் உற்பத்தி வேலைகளில் பட அடிப்படையிலான சோதனையைத் தானியங்கி முறையில் வழங்குகின்றன. 2D மற்றும் 3D இயந்திரப் பார்வை அமைப்புகள் இப்போது பொதுவாகத் தானியங்கி சோதனை (automated inspection), எந்திரன் வழிகாட்டுதல் (robot guidance), தரக் கட்டுப்பாடு (quality control), தரம்… Read More »

avidemux-எனும் கட்டற்ற பயன்பாடு ஒரு அறிமுகம்

avidemux என்பது ஒரு எளிய கானொளி காட்சி பதிப்பாளர் ஆகும், இது கானொளி காட்சிகளைஎளிதாக வெட்டுதல், வடிகட்டுதல் , குறியாக்கம் செய்தல் ஆகிய பணிகளுக்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. இது AVI, DVD ஆகியவற்றிற்கு இணக்கமான MPEG கோப்புகளையும், MP4 , ASF உள்ளிட்ட பல்வேறுவகையான கோப்புகளையும் ஆதரிக்கின்றது. இதன்வாயிலாக செயல்திட்டங்கள், பணி வரிசை , சக்திவாய்ந்த உரைநிரல் திறன்களைப் பயன்படுத்தி நம்முடைய பணிகளை தானியக்கமாக்கலாம். இது குனு GPL உரிமத்தின் கீழ் பொதுமக்களின்பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது. இந்த செயல்திட்டம்… Read More »

எளிய தமிழில் Computer Vision 22. கற்றல் தரவு தயார் செய்தல்

புதிய பணியாளருக்குப் பயிற்சி கொடுப்பது போலவேதான் நீங்கள் கைமுறையாக வகைப்படுத்தல் (classification) செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு புதிய பணியாளருக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். என்ன செய்வீர்கள்? நீங்கள் வகைப்படுத்திய மாதிரிகளைக் காட்டி அதேபோல் செய்யச் சொல்வீர்கள் அல்லவா? எந்திரக் கற்றலில் பழக்குவதும் அதேபோல் தான். கைமுறையாக வகைப்படுத்திய படங்கள் ஆயிரக்கணக்கில் தேவை. தரவுத்தளங்களில் உள்ள படங்களை முடிந்தால் பயன்படுத்தலாம் படத்தொகுப்பில் ஒரு வடிவமைப்பைக் (pattern) கண்டுபிடிப்பது போன்ற எளிய கணினிப் பார்வை திட்டங்களுக்கு… Read More »

எளிய தமிழில் Computer Vision 21. படத் தரவுத்தளங்கள்

இயந்திரக் கற்றலுக்கு படத்தரவுகள் அவசியம் இயந்திரக் கற்றல் முறையில் பல்லாயிரம் படங்களையும் அவற்றைக் கைமுறையாக வகைப்படுத்திய தரவுகளையும் உள்ளீடு செய்யவேண்டும் என்று முன்னர் பார்த்தோம். இம்மாதிரி படங்களும், தரவுகளும் நமக்கு எங்கிருந்து கிடைக்கும்? எம்னிஸ்ட் (MNIST)  இது கையால் எழுதப்பட்ட இலக்கங்களின் பெரிய தரவுத்தளமாகும். இது பொதுவாக பல்வேறு இயந்திரக் கற்றல் பட வகைப்படுத்தல் (classification) முறைகளில் பயிற்றுவிக்கவும், சோதனை செய்யவும் பயன்படுகிறது.  சிஃபார் (CIFAR)  இந்தத் தரவுத்தளத்தில் வானூர்திகள், சீருந்துகள், பறவைகள், பூனைகள், மான்கள், நாய்கள்,… Read More »

Rஎனும் கணினிமொழியின் மூலம் MongoDB ஐப் பயன்படுத்துதல்

MongoDB என்பதுஒரு பிரபலமான திறமூல ஆவண தரவுத்தளமாகும், செயல் திறன் , அளவிடுதல் ஆகியவற்றிற்கு இது பெயர் பெற்றது. எந்தவொரு நிறுவன பயன்பாட்டிலும் ஏராளமான தரவுகளை நிருவகிக்கும் திறன்கொண்ட தரவுத்தள மாதிரி இதில் உள்ளது. அதனோடு R எனும் நிரலாக்க மொழியில் MongoDBஐ திறம்பட கையாளும் பல தொகுப்புகள் கூடஉள்ளனஎன்ற தகவலை மனதில்கொள்க, தரவுகளைப் பிரித்தெடுக்கவும் கையாளவும்.MongoDBஇன் பின்வருவனவற்றை உள்ளடக்கிய பல்வேறு முக்கிய வசதிவாய்ப்புகள் உள்ளன. உயர் செயல்திறன்: இது உட்பொதிக்கப்பட்ட ஆவணங்களை ஆதரிக்கிறது; எனவே I… Read More »

எளிய தமிழில் Computer Vision 20. கணினிப் பார்வையும் இயந்திரக் கற்றலும் (Machine learning)

இயந்திரக் கற்றல் (Machine learning) கணினிப் பார்வை வேலைகளுக்குத் தோதாக பல வினைச்சரங்கள் (algorithm) ஓபன்சிவியில் நிரலகங்களாக உள்ளன என்று முன்னர் பார்த்தோம். இயந்திரக் கற்றல் முறையில் பல்லாயிரம் படங்களையும் அவற்றைக் கைமுறையாக வகைப்படுத்திய தரவுகளையும் உள்ளீடு செய்வோம். இவற்றைப் பார்த்து வடிவமைப்பைக் (pattern) கணினி அடையாளம் கண்டுகொள்ளும் (recognize). பின்னர் நீங்கள் ஒரு புதிய படத்தை உள்ளிட்டால் முன்னர் கற்றுக்கொண்ட மாதிரியைப் (model) பயன்படுத்தி இதன் வகையை ஊகம் செய்ய (predict) முடியும். ஆழ்ந்த கற்றல்… Read More »

Flutterஎன்பதன் துனையுடன் கைபேசி பயன்பாட்டை எளிதாக உருவாக்கிடுக

உலகெங்கிலும் உள்ள கைபேசி பயன்பாடுகளின்மேம்படுத்துநர்கள் மத்தியில் தற்போது Flutter என்பது ஒரு பிரபலமான வரைச்சட்டத்திற்கான செயல்திட்டமாகும். இந்த வரைச்சட்டத்திற்காக ஆர்வமுள்ள ஒரு பெரிய, நட்பு சமூகம் ஒன்றும் உள்ளது, நிரலாளர்கள் தங்களுடைய செயல்திட்டங்களை கைபேசிக்கு கொண்டு செல்ல இந்த Flutter உதவுவதால் இது தொடர்ந்து மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகின்றது. இந்த கட்டுரை யானது Flutter உடன் கைபேசி பயன்பாட்டினை எவ்வாறு மேம்படுத்திடுவது என்பதற்கான வழிகாட்டியாக உதவிடும். இந்த கட்டுரையை படித்த பிறகு, திறன்பேசிகள், மடிக்கணினிகள்… Read More »