எளிய தமிழில் Computer Vision 14. தொழில்துறைப் படக் கருவி (Industrial camera)

தொழில்துறைப் படக்கருவிகளும் இணையப் படக்கருவிகளும் (Webcams) மென்பொருளிலிருந்து நாம் இணையப் படக்கருவிக்கு ஒரு சில எளிய கட்டளைகளைத் தான் அனுப்புகிறோம். ஆனால் தொழில்துறைப் படக்கருவிகளில் மென்பொருளுக்கும் வன்பொருளுக்கும் பல உள்ளீடுகளும் வெளியீடுகளும் தேவை. எடுத்துக்காட்டாக நம்முடைய தொழிற்சாலையில் செலுத்துப்பட்டையில் (conveyor belt) ஒரு பாகம் நகர்ந்து கொண்டிருக்கலாம். ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் துல்லியமாகக் குறிப்பொளி (strobe light) ஒளிர வேண்டும். அதேநேரத்தில் படக்கருவி படமெடுக்க வேண்டும். தவிரவும் நாம் படக்கருவி, கணினி மற்றும் மென்பொருள் ஆகியவற்றை… Read More »

பைதான் – ஜாவா: நடப்பு2020 ஆம் ஆண்டில் எது சிறந்தகணினி மொழி

தற்போதைய உலகின் நவீன சகாப்தத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான திறமைநிரலாக்கம் என்பதாகும். இந்த நிரலாக்க பயணத்தின் போது வெவ்வேறு நிரலாக்க மொழிகள் வெவ்வேறு பயன் பாடுகளைக் கொண்டுள்ளன என்பதை சிறிது முயன்றால் நம்மால் புரிந்துகொள்ளமுடியும், அதனால் ஒருவரின் தேவைகள் அவருடைய ஆர்வம்ஆகியவற்றின் அடிப்படையில் அவைகளுள் தனக்கு தேவையான மிகச்சரியான பொருத்தமான தொருநிரலாக்க மொழியைத் தேர்வு செய்ய முடியும். அதனால் ஒருவர் கணினிமொழியின் நிரலாக்கத்திற்குள் குதிப்பதற்கு முன், தன்னுடைய தேவைக்கு பொருத்தமான நிரலாக்க மொழியை புத்திசாலித்தனமாக… Read More »

சுதந்திர மென்பொருள் விழா – இரண்டாம் நாள் இணைய உரை

வணக்கம்., இலவச மென்பொருள் சுதந்திர தினம் இரண்டாம் நிகழ்வு இணைய வழி கருத்தரங்கம் இன்று நடைபெறுகின்றது. இலவச மென்பொருள்களில் கணினி கிராபிக்‌ஸ் பற்றி திரு.வீரநாதன் அவர்களும், கல்வியில் இலவச மென்பொருள்கள் பயன்பாடு பற்றி திரு.பாஸ்கர் அவர்களும் பங்குபெறுகின்றனர். இன்று மாலை 05.00 -06.30 மணி வரை நிகழ்வு நாள் :20.09.2020 Google meet link: meet.google.com/qvn-qpbz-awj அனைவரும் பயனடைய வேண்டுகின்றேன். அமைப்பு: சி.ராம்பிரகாஷ்இலவச மென்பொருள் கட்டமைப்பாளர்9159956709 goinggnu.files.wordpress.com/2020/09/wp-16005790537782963228204453746729.jpg

திறந்த படிவம் (OpenFOAM)

திறந்த படிவம் (OpenFOAM) என்பது ஒரு கட்டணமற்ற, கட்டற்ற CFD மென்பொருளாகும், இது OpenCFD Ltd என்றநிறுவனத்தாரால்2004 இல் முதன்முதல் உருவாக்கப்பட்டது. வணிகநிறுவனங்களிலும் , கல்வி நிறுவனங்களிலும் பொறியியல், அறிவியல் ஆகி யதுறைகளில் இது ஒரு பெரிய பயனாளர் தளத்தைக் கொண்டுள்ளது. வேதியியல் எதிர்வினைகள், கொதித்தலும்( turbulence ) வெப்பப் பரிமாற்றமும், ஒலியியல், திட இயக்கவியல் , மின்காந்தவியல் உள்ளிட்ட சிக்கலான திரவ ஓட்டங்களிலிருந்து எதையும் தீர்க்க இது ஒரு விரிவான வசதிகளைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளரின் முன்னேற்றங்கள்… Read More »

எளிய தமிழில் Computer Vision 13. பொருட்களைக் கண்டுபிடித்துக் (Object detection) குறித்தல்

பொருளைக் கண்டறிதல் (Object detection) நம்முடைய படத்தில் உள்ள பொருட்கள் யாவை, அவை என்ன வகை மற்றும் ஒவ்வொரு வகையிலும் எத்தனை இருக்கின்றன என்று  நமக்குத் தெரியாது. முதல் வேலையாக அவை அனைத்தையும் வகைப்படுத்தி அவை ஒவ்வொன்றையும் சுற்றி ஒரு எல்லைப் பெட்டியை வரைய விரும்புகிறோம். இதைப் பொருளைக் கண்டறிதல் என்று பொதுவாகச் சொல்கிறோம். இந்த வேலையைக் கீழ்க்கண்ட படி நிலைகளாகப் பிரிக்கலாம். பொருட்களின் இடம் குறித்தல் (localization) ஒரு படத்தில் முக்கியமான அல்லது மிகவும் புலப்படக்கூடிய… Read More »

சுதந்திர மென்பொருள் தின விழா – இணைய உரை – செப் 19 மாலை 5.30

அனைவருக்கும் இலவச மென்பொருள்கள் கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் கொண்டாடப்படும் இலவச மென்பொருள்கள் சுதந்திர தினம் (free software freedom day -2020) இந்த ஆண்டு இன்று (19-09-2020) கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள்கள் ( free softwares ) பற்றி இணையவழி கருத்தரங்கு இன்று மாலை 05.30 முதல் 06.30 வரை பின்வரும் கூகிள் காணொளியில் தமிழ் வழியில் மிகச்சிறந்த கணினி வல்லுநர்களால் நடத்தப்படுகின்றது . காணொளி சுட்டி : meet.google.com/zik-cdix-jkc நன்றிகள் இணையத்தில்… Read More »

கெர்பரோஸ்(Kerberos) ஒருஅறிமுகம்

கெர்பரோஸ்(Kerberos) என்பது ஒரு திறமூல அங்கீகரிக்கப்பெற்ற கணினி துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒற்றையான உள்நுழைவு நெறிமுறையாகும்.பொதுவாக விநியோகிக்கப்பட்ட அமைப்புகளில், வாடிக்கையாளர்கள் வலைபின்னல்களில் பிற வளங்களை அணுக வேண்டியிருக்கும் போது, அவை காலப்போக்கில் உருவாகியுள்ள பிணைய நெறிமுறைகள் மூலம் அங்கீகரிக்கப்படுகின்றன. அவ்வாறான விநியோகிக்கப்பட்ட அமைப்புகள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதால் பாதுகாப்பில் முக்கிய அக்கறை கொள்ள வேண்டியுள்ளது. நம்மால் பயன்படுத்தப்படும் அடிப்படை குறியாக்க வழிமுறையின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட பல்வேறு அங்கீகார நெறிமுறைகள் உள்ளன.அவைகளுள் தற்போது சமச்சீர் விசை குறியாக்கவியல் (தனியார்… Read More »

எளிய தமிழில் Computer Vision 12. அம்சப் பொருத்தம் (Feature matching)

அம்சப் பொருத்தத்துக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு சாலைக் குறியீடுகளை (road signs) அடையாளம் காண்பது. நம் படக்கருவியின் முன்னால் உள்ள குறியீடு நாம் முன்னர் பதிவு செய்துள்ள எந்தக் குறியீட்டுடன் அம்சப் பொருத்தம் கொண்டுள்ளது என்று பார்க்கவேண்டும். முதலில் படத்திலுள்ள குறியீட்டின் முக்கியப் புள்ளிகளைக் கண்டுபிடிக்க ((keypoint detection) வேண்டும். அடுத்து அம்ச விவரிப்பியைத் (feature descriptor) தயார் செய்ய வேண்டும். கடைசியாக நம்மிடம் உள்ள எந்த அம்ச விவரிப்பியுடன் இது பொருந்துகிறது என்று பார்க்க வேண்டும்.… Read More »

வேர்ட்பிரஸ் தமிழ் – மொழிபெயர்ப்பாளர்கள் அறிமுக கூட்டம்

  வேர்ட்பிரஸ் சென்னை நடத்தும் வேர்ட்பிரஸ் மொழிப்பெயர்ப்பாளர்களுக்கான அறிமுக கூட்டம். இந்த கூட்டத்தின் நோக்கம் வேர்ட்பிரஸ் வரும்கால பதிப்பை முழுக்க தமிழில் மொழிபெயர்த்து முடிப்பதே ஆகும். இந்த கூட்டத்தில் ஏற்கனவே உள்ள மொழிப்பெயர்ப்பாளர்களும், மொழிப்பெயர்ப்பு மேற்பார்வையாளர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த கூட்டத்தில் சிறப்புரையை விப்ஜி நிகழ்த்த உள்ளார், இவர் மென்பொருள் பொறியாளராக பெல் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஏற்கனவே தமிழ் மொழிப்பெயர்ப்பிற்கு பங்களிப்பு செய்துள்ளார். புதிய மொழிபெயர்பாளர்களுக்கு தமிழில் எவ்வாறு மொழிபெயர்ப்பு செய்வது என்பது பற்றி விளக்க உள்ளார்.… Read More »

PDF கோப்புகளில் இருந்து தமிழ் உரையை நகல் எடுக்கவும் தேடவும் உதவும் PDFA முறை

தமிழ் PDF கோப்புகளில் இருந்து உரையை நகல் எடுப்பது என்பது வெகு நாட்களாகவே சிக்கலாகவே இருந்து வருகிறது. ஒரு தமிழ் PDF ல் இருந்து உரையை நகல் எடுத்தால் நமக்கு குழம்பிய உரை மட்டுமே கிடைக்கிறது. உதாரணம் – உலககேம உற்று கே ாக்கும் ஒரு அற்புதச் சுற்றுலாத் தலமாக அந்தமான் அழகு தீவுகள் உள்ளன . வாழ்க்கைகயில் ஒரு முகை(கே)னும் அந்தமான் அழகு தீவிற்குச் செ-ன் அழகுறு வர கேவண்டும் . பூமியின் அழகு செ-ார்க்கம்… Read More »