‘கட்டற்ற கணித்தமிழ்: தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகள்’  – இணையவழி பயிற்சி – 03.01.2021 – மாலை 4 IST

எதிர்வரும் 03.01.2021 அன்று இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் ‘கட்டற்ற கணித்தமிழ்: தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகள்’ என்னும் இணையவழி பயிற்சியினை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன். முனைவர் தமிழ்ப்பரிதி மாரி 7299397766 ** பயிற்சியில் பங்கேற்க: meet.google.com/spa-rckq-gss பதிவிற்கு: forms.gle/gCDfWMt9Zsd69GqU6

கணியம் நண்பர்களுக்கு  பிறந்தநாள் பரிசு – ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது

கணியம் நண்பர்களுக்கு  பிறந்தநாள் பரிசு – ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது   பல நூறு தன்னார்வலர்கள் இணைந்து, பல்வேறு கட்டற்ற கணிமைக்கான திட்டங்களில் பங்களித்து வருகிறோம். நம் அனைவரின் பங்களிப்புகளுக்கும் இன்று ஆனந்த விகடன் இதழ் மாபெரும் பரிசு தந்துள்ளது. ‘2020 ன் டாப் 10 இளைஞர்கள்‘ என்ற பிரிவில் கணியம் அறக்கட்டளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை பெரு மகிழ்வுடன் அறிவிக்கிறோம். 6.1.2021 தேதியிட்ட, இந்த வார ஆனந்த விகடன் இதழில் இந்த அறிவிப்பு வெளியாகி… Read More »

தமிழின் மொழித் தொழில்நுட்பம் – இணைய உரை – 27.12.2010 மாலை 6 மணி IST

தமிழ் இணையக் கழகம் வழங்கும்இணையத்தமிழ்ச் சொற்பொழிவு – 53 தேதி: 27 – 12- 2020 மாலை 6 மணி அன்று கேரள காசர்கோடு மத்திய பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியராகச் பணியாற்றி வரும் முனைவர் கோ. பழனிராஜன் அவர்கள் “தமிழின் மொழித் தொழில்நுட்பம்” என்ற தலைப்பில் விரிவான உரைவழங்க உள்ளார். எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள். Teamlink Meeting ID: 5526828256 உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின்… Read More »

எளிய தமிழில் Computer Vision 27. பணியாளர் பாதுகாப்பும் உடல்நலனும்

கீழ்க்கண்ட வேலைகளுக்கு கணினிப் பார்வைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம்: அபாயகரமான பணியிடங்களில் தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் (PPE – Personal Protective Equipment) அணியவேண்டும் என்ற வழிமுறைகளைப் பின்பற்றுதல்.  அபாயகரமான வேதிப்பொருட்கள் (Chemicals) சரக்கு வைப்பு மற்றும் போக்குவரத்தைக் கண்காணித்தல்.  மீண்டும் மீண்டும் செய்யும் வேலைகளில் காயமடைவதைத் (repetitive injury) தடுக்க பணிச்சூழலியல் (Ergonomics) மதிப்பீடு. கட்டுமான தளத்தில் ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்த்தல் செய்யும் வேலையைப் பொருத்து பணியிடங்களில் தலைக்கவசம், பாதுகாப்புக் கண்ணாடி போன்ற சாதனங்களை அணிவது அவசியம்.… Read More »

‘விக்கித்தரவு: தமிழில் தரவு மேம்பாடு’ இணைய வழிப்பயிற்சி டிசம்பர் 23 2020 மாலை 4.30 IST

எதிர்வரும் 23.12.2020 அன்று இந்திய ஒன்றிய நேரம் 16.30 மணியளவில் ‘விக்கித்தரவு: தமிழில் தரவு மேம்பாடு’ என்னும் இணைவழி பயிற்சியினை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன்.கூகுள் படிவத்தில் முன்பதிவு செய்து இந்நிகழ்வில் பங்கேற்க விழைகின்றேன்.**முனைவர் தமிழ்ப்பரிதி மாரி+91+7299397766tparithi@gmail.com**பயிற்சியில் பங்கேற்க: meet.google.com/spa-rckq-gss பதிவிற்கு: forms.gle/gCDfWMt9Zsd69GqU6

பாதுகாப்பான தேர்வு உலாவி( Safe Exam Browser(SEB))

பாதுகாப்பான தேர்வு உலாவி( Safe Exam Browser(SEB)) என்பது இணையத்தின் வாயிலான நேரடியாக தேர்வுகளை பாதுகாப்பாக மேற்கொள்ள உதவதயாராக இருக்கின்ற ஒரு இணைய உலாவி-சூழலாகும் . இம்மென்பொருளானது எந்தவொரு கணினியையும் பாதுகாப்பான பணிநிலையமாக மாற்றுகிறது. இது எந்தவொரு பயன்பாடுகளுக்கான அணுகலையும் ஒழுங்குபடுத்துகிறது மேலும் இணையவாயிலான தேர்வினை எழுதிடும் எந்தவொரு மாணவனும் அங்கீகரிக்கப்படாத வளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. இது மின்-மதிப்பீடுகளை பாதுகாப்பாக மேற்கொள்ள உதவிடும் ஒரு இணையஉலாவி சூழலாகும். இம்மென்பொருளானது எந்தவொரு கணினியையும் தற்காலிகமாக பாதுகாப்பான பணிநிலையமாக மாற்றுகிறது.… Read More »

எளிய தமிழில் Computer Vision 26. மேற்பரப்பு குறைபாடு சோதனை (surface defect inspection)

உலோக பாகங்களின் மேற்பரப்பு குறைபாடு சோதனை மேம்பட்ட 2D மற்றும் 3D மேற்பரப்பு குறைபாடு ஆய்வு அமைப்புகள் இந்த வேலைக்குப் பயன்படுகின்றன. குறிப்பாக உலோக பாகங்களின் பொருளிலோ அல்லது உற்பத்தியிலோ இருக்கும் ஒடுக்கங்கள் (dents), நுண்துளைகள் (pores), சில்லுகள் (chips), பொளிந்த வடுக்கள் (pits), நிறமாற்றம், துரு, கீறல்கள், காடிகள் (grooves) போன்ற பழுதுகளை நம்பத்தகுந்த முறையில் கண்டறிய முடியும். 2D மற்றும் 3D சோதனைகளை சேர்ந்து செய்வதால் தவறான நிராகரிப்பு வீதத்தைக் (false reject rate)… Read More »

எளிய தமிழில் Computer Vision 25. தரம் பிரித்தல் மற்றும் வகைப்படுத்தல்

ஜவுளித் தொழிற்சாலை மற்றும் கிடங்குகளில் ரகவாரியாகப்பிரித்தல் ஜவுளித் தொழிற்சாலை மற்றும் கிடங்குகளில் வண்ணம் மற்றும் வடிவமைப்புபடி எண்ணுதல் மற்றும் ரகவாரியாகப் பிரித்தல் வேலைகளை கணினிப்பார்வை மூலம் செய்வதால் செலவைக் குறைக்க முடியும். இதற்கு நம் கணினிப்பார்வை அமைப்பு முதலில் செலுத்துப் பட்டையில் நகரும் ஜவுளிகளின் படத்தைப் பிடிக்கிறது. அடுத்து விளிம்பு கண்டறிதலைப் பயன்படுத்தி வடிவங்களை அடையாளம் காண்கிறது. கடைசியில் நாம் முன்னர் பார்த்தபடி ஹ்யூ உருமாற்றம் (Hough transform) பயன்படுத்தி வடிவியல்வாரியாகப் பிரித்தெடுக்கிறது. விலங்குத்தோல், மரப்பலகை போன்ற… Read More »

லேங்க்ஸ்கேப் – பயிலகம் வழி நடத்தும் ஒரு மாத இலவச இணையவழி பைத்தான் பயிற்சி

லேங்க்ஸ்கேப் நிறுவனம் முன்னெடுக்கும் இலவசப் பைத்தான் பயிற்சிகள் பயிலகம் பயிற்றுநர்கள் மூலம் தமிழ் வழியில் நடத்தப்படுகிறது. ஒரு மாதம் (திங்கள் – சனி வரை) இப்பயிற்சி நடத்தப்படும். பைத்தான், ஜேங்கோ(Django) ஆகியன பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் இவ்வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமும் நேரமும் உள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். பயிற்சியை முறையாக முடிப்பவர்களுக்கு, லேங்க்ஸ்கேப் நிறுவனத்தின் பணி வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளில் வாய்ப்பு தரப்படும். * பயிற்சி முற்றிலும் இலவசமா? ஆம். முற்றிலும் இலவசம். *… Read More »