ராஸ்பெர்ரி பையில் இயங்குதளம் நிறுவி நிரல் எழுதுவது எப்படி

ராஸ்ப்பெரி-பை கணினி ஏன் உருவாக்கப்பட்டது, எந்த வகையில் வித்தியாசமானது, வகுப்பறையில் ராஸ்பெர்ரி பை பயன்படுத்த வழிகள் எவை ஆகியவற்றை எங்கள் முந்தைய கட்டுரையில் காணலாம். நினைவக அட்டை மற்றும் துணைக்கருவிகளும் தேவை ராஸ்பெர்ரி பை பல மாதிரிகளில் கிடைக்கிறது, பை 3 B மாதிரி அதிக அம்சங்கள் கொண்டது சுமார் ரூ 3200 க்கு கிடைக்கிறது. புதிதாக பை 3 B+ என்ற மாதிரி சுமார் ரூ 3700 விலையில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தவிர திட்டத்துக்குத்… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – நிரல்வழிச் செயல்முறை

இதுவரையில் நாம் அடையாள அணுக்க மேலாண்மை பற்றியும், எளிய சேமிப்பகச்சேவை பற்றியும் அறிந்திருக்கிறோம். முந்தைய பதிவுகளில் உருவாக்கிய பயனர்களின் அணுக்கத்திறப்புகளைக் கொண்டு, S3இல் பின்வருவனவற்றைச் செய்துபார்க்கலாம். ஒரு கொள்கலனை உருவாக்குதல் அக்கொள்கலனில் ஒரு கோப்பினைப் பதிவேற்றுதல் நாம் பதிவேற்றிய கோப்பு, சரியான கொள்கலனில் உள்ளதா என சரிபார்த்தல் பதிவேற்றிய கோப்பினை அழித்தல் முதற்படியில் உருவாக்கிய கொள்கலனை அழித்தல் அடிப்படை கட்டமைப்பு இச்செயல்முறைக்காக, நாம் C# மொழியைப் பயன்படுத்தவிருக்கிறோம். இணையச்சேவைகளை நிரல்வழியே இயக்குவதற்கு ஏதுவாக, பலமொழிகளுக்கான மென்பொருளாக்கக் கொட்டான்களை… Read More »

ஆதாரமா? சேதாரமா? நிகழ்ச்சி – FSFTN உறுப்பினர்களின் கருத்து – காணொளி

தந்தி தொலைக்காட்சியின் “ஆதாரமா? சேதாரமா?” நிகழ்ச்சியில் நம் FSFTN உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். ஆதார் அட்டையின் பிரச்சனைகளையும், அதன் பயன்பாட்டில் உள்ள ஆபத்துகளையும் எடுத்துரைத்தனர். #FSFTN #ThanthiTV #Media #AadhaarFails #News #… -https://peertube.mastodon.host/videos/watch/1357e9ea-5108-4163-a98e-ee6693895d87

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 16. தகவல் தொழில்நுட்ப உதவியுடன் நீங்களும் ஒரு எழுத்தாளராகலாம்

வெளியீடு செய்த எழுத்தாளராக ஆவதற்கு இதுதான் வரலாற்றிலேயே சிறந்த காலம் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அது உண்மைதான். நூலாசிரியர்கள் முன்னர் இருந்ததை விட வாசகர்களை அடைய அதிக வாய்ப்புகளை கொண்டுள்ளனர். மேலும் தங்கள் படைப்புகளை வெளியீடு செய்வதில் முன்னை விட அதிகமான கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள விரும்பினால், அதுவும் சாத்தியமே. மேலும் புத்தகங்களை விநியோகம் செய்வதில் வந்த மாற்றங்களால் ஒவ்வொரு வாசகருக்கும் எந்தப் புத்தகமும் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். இணையப்  புத்தகக் கடை அலமாரிகள்… Read More »

இணையப்பாதுகாப்பிற்கு வலுவான கடவுச்சொற்கள் அவசியம்

உங்கள் வீட்டைப் பூட்டாமல் திறந்து வைத்துவிட்டு வெளியே செல்வீர்களா? எளிய கடவுச்சொற்களானவை நம்முடைய வீடுகளைப் பூட்டாமல் திறந்து வைத்திருப்பதற்குச் சமமாகும். நம்மில் பலர் இணையத்தில் வெவ்வேறு தளங்களில் உள்நுழைவு செய்வதற்கு அனைத்திற்கும் ஒரே கடவுச்சொற்களையே பயன்படுத்திடுவர். அதனால் இணையத்திருடர்கள் நம்முடைய சொந்த தகவல்களை எளிதாக அபகரித்துக் கொள்ள இதன் வாயிலாக நாமே வழிகாட்டிட உதவுகின்றோம் என்ற செய்தியை மனதில் கொள்க. மிகஎளிதாக நினைவில் இருக்கும் கடவுச்சொற்களை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது மிகமுக்கியமாக 2016 இல்… Read More »

Introduction to Apache Spark (Bigdata) in Tamil – ஸ்பார்க் ஒரு அறிமுகம்

குறிப்புகளும், நிரல்களும் இங்கே. This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode characters. Learn more about bidirectional Unicode characters Show hidden characters wget redrockdigimark.com/apachemirror/spark/spark-2.3.1/spark-2.3.1-bin-hadoop2.7.tgz tar -xzvf spark-2.3.1-bin-hadoop2.7.tgz sudo mv spark-2.3.1-bin-hadoop2.7 /usr/local/bigdata sudo mv… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – S3 – எளிய சேமிப்பகச்சேவை

நிரல்வழிச் செயல்முறைக்கு முன்னதாக, எளிய சேமிப்பகச்சேவையின் (S3) அடிப்படையை தெரிந்துகொள்வது அவசியம். எனவே இப்பதிவில் S3 பற்றி தெரிந்துகொண்டு, அடுத்தபதிவில் செயல்முறையைப் பார்க்கலாம். அமேசானில் பெருமளவு பயன்படுத்தப்படும் சேவைகளில் எளிய சேமிப்பகச்சேவையும் ஒன்று. இதன் அடிப்படைப் பயன்பாடு கோப்புகளைச் சேமித்துவைப்பதாக்கும். S3இல் நமக்கென கொள்கலன்களை (Buckets) உருவாக்கிக்கொண்டபிறகு, அவற்றில், கோப்புகளைச் சேமித்துவைக்கலாம். இவற்றை கோப்பகங்களில் ஒருங்கிணைத்து வைக்கவும் முடியும். மேலும், ஒவ்வொரு கோப்பைப் பற்றியும், கோப்பகத்தைப் பற்றியும், சில தகவல்களையும் அவற்றோடு சேர்த்து சேமிக்கலாம். ஒரு வலைத்தளத்தில்,… Read More »

கணக்கு பதிவியலிற்கான குனுகதா கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடு

குனுகதா (GNUKhata) என்பது கட்டற்ற கட்டணமற்ற நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய டேலி (Tally) பயன்பாட்டிற்கு மாற்றான ஒரு கணக்கு பதிவியல் பயன்பாடாகும். இது கணக்கு பதிவியலுடன் கையிருப்பு பொருட்களையும் பராமரித்திடும் ஒரு சிறந்த பயன்பாடாகவும் விளங்குகின்றது. இதனுடைய குனுகதா v5.10 எனும் பதிப்பை மும்பையிலுள்ள Digital Freedom Foundation எனும் நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது. இதில் பேரேடு, இறுதிக் கையிருப்பு, இருப்புநிலைக் குறிப்பு, இலாபநட்டக் கணக்கு ஆகிய அறிக்கைகளை மாதவாரியாக, காலாண்டு வாரியாக, ஆண்டு வாரியாகப்… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 15. தகவல் தொழில்நுட்ப உதவியுடன் தமிழை எளிதாகக் கற்பிக்கலாம்

தமிழ் மொழியில் கற்றுக்கொள்ள அதிகமான எழுத்துகள் உள்ளன என்ற ஒரு கருத்து நிலவுகிறது. தமிழில் 12 உயிர், 18 மெய் எழுத்துகள், ஒரு ஆய்த எழுத்து ஆக மொத்தம் 31 எழுத்துகள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்தும் ஒவ்வொரு உயிரெழுத்துடன் சேர்ந்து மொத்தம் 216 உயிர்மெய் எழுத்துகளை உருவாக்குகின்றன என்பது உண்மைதான். மெய்யெழுத்தை எழுதி, சேர்க்க வேண்டிய உயிரெழுத்து அடையாளம் 11 தெரிந்தால் போதும். ஆகவே மேற்கண்ட கருத்து சரியா என்று நீங்களே சொல்லுங்கள். மொழியைக் கற்பிப்பதில் பல… Read More »