தமிழில் வேர்ச்சொல் வடிகட்டியை open-tamil பைதான் நிரல் தொகுதி மூலம் வழங்குகிறோம். ஆசிரியர்: முத்தையா அண்ணாமலை <ezhillang@gmail.com> சுருக்கம்: இந்த கட்டுரையில் நான் சமீபத்தில் 2013-இல் வெளியிடப்பட்ட தமிழ் வேர்ச்சொல் பகுப்பாய்வு வடிகட்டியை பொது பயனுக்கு மாற்றியது பற்றி விரிவாக எழுதுகிறேன். இந்த வேலைப்பாடுகள் முழுதுமே திறமூல மென்பொருள் சூழலினால் உருவானது என்பதை மனதில் கொள்வது முக்கியமானதும் கூட. தமிழின் கணிமை ஆய்வின் பொது வளர்ச்சிக்கு இத்தகைய பொதுவெளியில் உள்ள மென்பொருள்கள் தொடர்ந்து உதவும் என்றும், உருமாறி… Read More »
கணியம் அறக்கட்டளை சார்பாக, சென்னை வள்ளியம்மை பொறியியற் கல்லூரி, சென்னையில் 05.02.2019 இயல்மொழி ஆய்வுக் கருவிகள் பயிற்சிப் பட்டறை (Natural Language Processing Workshop) நடத்தப்பட்டது. திரு. இலட்சுமிகாந்தன், இப்பட்டறையை நடத்தினார். கலந்து கொண்ட மாணவர்கள் ஏற்கெனவே பைதான் மொழி கற்றிருந்ததால், நேரடியாக NLTK, SpaCy பைதான் நிரல் தொகுதிகள் வழியே பயிற்சி அளிக்கப்பட்டது. பின்வரும் தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. Natural Language Processing in a nutshell Regular Expression Tokenization Simple topic identification… Read More »
Multiple LinearRegression ஒன்றுக்கும் மேற்பட்ட அம்சங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு விஷயத்தைக் கணிக்கிறது எனில் அதுவே multiple linear regression எனப்படும். ஒவ்வொரு அம்சமும் x1,x2,x3.. எனக் கொண்டால், இதற்கான சமன்பாடு பின்வருமாறு அமையும். multiple linear-ல் ஒவ்வொரு feature-க்கும் ஒரு தீட்டா மதிப்பு காணப்படுமே தவிர, no.of rows –ஐப் பொறுத்து மாறாது. எனவே தீட்டா என்பது எப்போதும் 1 row-ல் பல்வேறு மதிப்புகள் அமைந்துள்ள அணியாக இருக்கும். பின்னர் இந்த அணியை transpose செய்து… Read More »
TiddlyWiki என்பது ஒரு பயன்பாடு அன்று ஆயினும் HTML . JavaScript ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட பெரியஅளவிலான 2எம்பி கொள்ளளவுகொண்டதொரு இணையபக்கமாகும் நாம் நம்முடைய இணையஉலாவியை கொண்டு இதில் திருத்தம் செய்து கொண்டு தனியானதொரு கோப்பாக மறுபெயரிட்டு சேமித்து கொள்ளமுடியும் இதனை கொண்டு குறிப்பெடுத்திடலாம் ,செயல்திட்டத்தை உருவாக்கிகொள்ளலாம் இணைய இதழ்களை வெளியிடலாம் நாம் விரும்பும் இணையபக்கத்தை bookmarkசெய்து சேமித்து கொள்ளலாம் நம்முடைய புதிய இணையபக்கத்தை வெளியிடலாம் நம்முடைய வலைபூவை வெளியிடலாம் என்றவாறான பல்வேறு பணிகளை இதில் செயல்படுத்தி பயன்பெறமுடியும்… Read More »
அணிகள் பல்வேறு எண்கள் அணிவகுத்துச் செல்வது அணிகள் எனப்படும். simple linear regression-ல் ஒரே ஒரு எண்ணை வைத்துக் கொண்டு வேறொரு எண்ணைக் கணித்தோம். ஆனால் இனிவரும் multiple linear-ல் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்கள் ஒன்றாகச் சேர்ந்து வேறொரு எண்ணைக் கணிக்கப் போகிறது. அதாவது ஒரு வீட்டின் சதுர அடி விவரத்தை மட்டும் வைத்துக் கொண்டு, அவ்வீட்டின் விலையைக் கணிப்பது simple linear எனில், ஒரு வீட்டின் சதுரஅடி, அறைகளின் எண்ணிக்கை, எத்தனை வருடம் பழையது போன்ற… Read More »
தானியங்கியியல் (Robotics) என்றவுடனே நம் மனக்கண்ணில் தோன்றுவது எந்திர மனிதன் தான். டெர்மினேட்டர், ஸ்டார் வார்ஸ் படத்தில் வந்த C3P0 மற்றும் R2D2, வால்-E, ரஜினிகாந்தின் எந்திரன் மற்றும் ரோஸி எந்திரப் பணிப்பெண் போன்ற திரைப்படங்களில் வந்த கற்பனை ஆளுமைகள் இந்த எந்திர மனிதனின் கவர்ச்சியை வளர்த்து விட்டன. தவிரவும் மனித இயக்குனரின்றி தானாகவே இயங்கும் (automatic) எந்திரங்கள் யாவற்றையும் தானியங்கி என்றுதான் சொல்கிறோம். இக்காரணத்தினால் Robotics துறையைத் தமிழில் எந்திரனியல் என்று சொல்வதே மிகப் பொருத்தமாக… Read More »
Gradient descent குறைந்த அளவு வேறுபாடு ஏற்படுத்தக் கூடிய தீட்டாக்களின் மதிப்பினைக் கண்டுபிடிக்கும் வேலையை gradient descent செய்கிறது முதலில் தீட்டாக்களுக்கு ஒரு குறிப்பிட்ட மதிப்பினைக் கொடுத்து அதற்கான cost-ஐக் கண்டறிகிறது. பின்னர் அம்மதிப்பிலிருந்து, ஒரு குறிப்பிட்ட அளவு விகிதத்தில் தீட்டாக்களின் மதிப்புகள் குறைக்கப்பட்டு அதற்கான cost கண்டறியப்படுகிறது. இவ்வாறாக ஒவ்வொரு சுழற்சியிலும் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டே வந்து குறைந்த அளவு cost கண்டுபிடிக்கப்படுகிறது. இதற்கான சமன்பாடு பின்வருமாறு. இங்கு ஒவ்வொரு சுழற்சியின் முடிவிலும் தீட்டா-0… Read More »
Simple linear regression -க்கான சமன்பாடு பின்வருமாறு அமையும். இதை வைத்து (1,1) , (2,2) , (3,3) எனும் புள்ளி விவரங்களுக்கு பின்வரும் கணிப்பான் h(x) மூலம் கணிப்பதை நாம் இங்கு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இந்தக் கணிப்பானது தீட்டா-0 மற்றும் தீட்டா-1 எனும் இரண்டு முக்கிய parameters-ஐப் பொறுத்தே அமைகிறது. எனவே வெவ்வேறு மதிப்புள்ள parameters-க்கு வெவ்வேறு வகையில் கணிப்புகள் நிகழ்த்தப்படுவதை பின்வரும் உதாரணத்தில் காணலாம். This file contains hidden or bidirectional Unicode… Read More »
அன்றாட வாழ்க்கையில் கட்டற்ற மென்பொருட்கள் – ராகுல், கமலவேலன்
கணியம் அறக்கட்டளை அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம் அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது வரை Kaniyam.com தளத்தில் கடந்த 7 ஆண்டுகளாக, கட்டற்ற மென்பொருள் சார்ந்த கட்டுரைகளும், மின்னூல்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. FreeTamilEbooks.com தளத்தில் 5.5 ஆண்டுகளில் 500 மின்னூல்கள் இது வரை வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்கூறு… Read More »