கணியம் அறக்கட்டளை தொடக்கவிழா – நிகழ்வுக் குறிப்புகள்

  22.04.2018 அன்று காலை 10.30 மணிக்கு நிகழ்வுகள் தொடங்கின. கட்டற்ற தமிழ்க்கணிமைக்கான ஒரு அமைப்பின் தேவை, பிற அமைப்புகளின் பங்களிப்புகள் பற்றி நித்யா பேசினார். பின் கணியம் அறக்கட்டளையின் நோக்கம், குறிக்கோள்கள், செயல்திட்டங்கள் பற்றி சீனிவாசன் பேசினார். பின் உதயன், எழுத்துரு உருவாக்கம், அவற்றின் சிக்கல்கள், தேவைகள் பற்றி பேசினார். தமது தளம் udayam.in பற்றிய அறிமுகம் தந்தார். தான் உருவாக்கிய கோலம் எழுத்துருவை வெளியிட்டார். இல.சுந்தரம் அவர்களின் 20 எழுத்துருக்களையும் வெளியிட்டார். அவற்றை பின்வரும்… Read More »

FSFTN – விக்கிப்பீடியா Onsite Editathon 2018- ஏப்ரல் 29, 2018 10-5

அனைவருக்கும் வணக்கம், கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN), தமிழ் விக்கிபீடியாவின் வேங்கைத் திட்டம் கட்டுரைப்போட்டி 2017 – 2018 தின் பகுதியாக, ஒரு நாள் Editathon நிகழ்வு நடத்த தீர்மானித்துள்ளது. இதன் மூலமாக கல்லூரி மாணவர்கள், ஐ.டி ஊழியர்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை தமிழில் உருவாக்கவும், மேம்படுத்தவும், அறிவுசார் படைப்புகள் தன் மொழியில் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தயும் சார்ந்து விவாதங்கள், உரைகள் நிகழ்த்தவும் முயர்ச்சிக்கிறது. இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்து, தங்கள்… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 2. தொடர்ந்து இரண்டு ஆங்கில மொழிப் பேரரசுகள்

பேரரசு அல்லது வல்லரசு என்பது மேலாதிக்க நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாட்டை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். இது உலகளாவிய அளவில் விரிவான முறையில் செல்வாக்கை பயன்படுத்துவது மற்றும் வலிமையைக் காட்டுவதுதான். இது பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப மற்றும் பண்பாட்டு வலிமை, அரசியல் செயலாட்சி நயம் மற்றும் செல்வாக்கின் ஒருங்கிணைந்த வழிவகைகளால் செயல்படுகிறது. இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில் பிரிட்டிஷ் பேரரசு, அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் மூன்றும் வல்லரசாகக் கருதப்பட்டன. “பிரிட்டிஷ் பேரரசில் ஞாயிறு மறைவதில்லை”… Read More »

செயற்கூறிய நிரலாக்கம் – ஒற்றைஉள்ளீட்டாக்கம் – பகுதி 6

முந்தைய பகுதியில் mult மற்றும் add என்ற இருசெயற்கூறுகளைகளின் உள்ளீட்டுஉருபுகளின் எண்ணிக்கையின் வேறுபாட்டால், அவற்றைக்கொண்டு செயற்கூற்றுக்கலவையை உருவாக்கமுடியாமல் போனது. [code lang=”javascript”] var add = (x, y) => x + y; var mult5 = value => value * 5; var mult5AfterAdd10 = y => mult5(add(10, y)); [/code] இங்கே add செயற்கூறு இரண்டு உள்ளீட்டுஉருபுகளை ஏற்கிறது. எனவே அதனை ஒற்றை உள்ளீட்டுஉருபை ஏற்கும் mult என்ற செயற்கூறோடு… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் – 1

“தமிழின் நிகழ்காலம் குறித்து வருந்துகிறேன். எதிர்காலம் குறித்து அஞ்சுகிறேன்” தமிழின் நிகழ்காலப் போக்கு தமிழ் இன்று அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மொழியாகவும், உயர் கல்வி மற்றும் வணிக மொழியாகவும் இல்லை. ஆகவே உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியிலும், பணியிடத்திலும் ஓரளவாவது ஆங்கிலத்தில் பரிச்சயம் இல்லையெனில் யாரும் சமாளிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மைதான். மேலும் விற்பனை மற்றும் சேவைத் துறையில் பணிபுரிந்தாலோ, மென்பொருள் உருவாக்குவோரும் மற்றவர்களும் வெளிநாட்டவருடன் சேர்ந்து வேலைசெய்ய வேண்டியிருந்தாலோ அல்லது தகவல் அழைப்பு… Read More »

கணியம் அறக்கட்டளை தொடக்க விழா – ஏப்ரல் 22, 2018 ஞாயிறு – 10.00 முதல் 5.00 வரை

கணியம் அறக்கட்டளை தொடக்க விழா – ஏப்ரல் 22, 2018 ஞாயிறு – 10.00 முதல் 5.00 வரை நாள் – ஏப்ரல் 22, 2018 ஞாயிறு நேரம் – 10.00 முதல் 5.00 வரை இடம் – கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, தமிழ்நாடு, கடை எண் 5/350, பழைய மகாபலிபுரம் சாலை, நேரு நகர், துரைப்பாக்கம், சென்னை 600 097 துரைப்பாக்கம் CTS அருகில் Free Software Foundation Tamilnadu Shop No.5/350, Old Mahabalipuram… Read More »

செயற்கூறிய நிரலாக்கம் – செயற்கூறுகளின் கலவை – பகுதி 5

உலகெங்குமுள்ள நிரலர்களுக்கு ஒரு பொதுப்பண்பு உண்டு. ஒருமுறை எழுதிய நிரலை மறுமுறை எழுத அவர்கள் விரும்புவதில்லை. முன்பெழுதியதுபோன்ற நிரலை மீண்டும் எழுதநேரும்போது, ஏற்கனவே உள்ள நிரலைப்பயன்படுத்தவே முயல்கிறோம். கொள்கையடிப்படையில், நிரலின் மறுபயன்பாடு என்பது மிகச்சிறந்த கோட்பாடு. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. குறிப்பிட்ட தேவைக்காக நிரலெழுதும்போது பிற இடங்களில் அதைப்பயன்படுத்துவது கடினமாகிறது. அதேநேரத்தில், மிகவும் பொதுப்படையாக நிரலெழுதினால், எந்த தேவைக்காக எழுதப்பட்டதோ, அதை நிறைவேற்றுவதே கடினமாகிவிடுகிறது. ஆகவே, இவையிரண்டுக்குமிடையே ஒரு சமநிலையைக்கண்டறிவது அவசியம். பலமுறை பயன்படுத்தக்கூடிய… Read More »

செயற்கூறிய நிரலாக்கம் – சூழச்சுருட்டு – பகுதி 4

Closureஐப்பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னதாக, அதைப்பயன்படுத்தும் ஓர் எளிய செயற்கூற்றைக்காணலாம். [code lang=”javascript”] function grandParent(g1, g2) { var g3 = 3; return function parent(p1, p2) { var p3 = 33; return function child(c1, c2) { var c3 = 333; return g1 + g2 + g3 + p1 + p2 + p3 + c1 + c2 + c3; }; };… Read More »

செயற்கூறிய நிரலாக்கம் – உயர்வரிசை செயற்கூறுகள் – பகுதி 3

கீழேயுள்ள நிரலிலுள்ளதைப்போன்ற செயற்கூறுகளை நமது அன்றாட நிரலாக்கப்பணியில் கண்டிருப்போம். [code lang=”javascript”] function validateSsn(ssn) { if (/^\d{3}-\d{2}-\d{4}$/.exec(ssn)) console.log(‘Valid SSN’); else console.log(‘Invalid SSN’); } function validatePhone(phone) { if (/^\(\d{3}\)\d{3}-\d{4}$/.exec(phone)) console.log(‘Valid Phone Number’); else console.log(‘Invalid Phone Number’); } [/code] அடிப்படையில், இவ்விரு செயற்கூறுகளும் ஒரேவேலையைத்தான் செய்கின்றன. அதாவது, கொடுக்கப்பட்ட மதிப்பை (ssn / phone), ஒரு செங்கோவையைக்கொண்டு (RegularExpressions) சரிபார்த்து, அதன் விடையை அச்சிடுகின்றன. எனவே, இவ்விரு செயற்கூறுகளுக்குப்பதிலாக… Read More »

Hadoop – hdfs,mapreduce – பகுதி 2

ஒரே ஒரு கணினியில் hadoop-ஐ நிறுவினால் அது single node cluster-எனவும், பல்வேறு server-களை இணைத்து நிறுவினால் அது multi-node cluster எனவும் அழைக்கப்படும். இங்கு Ubuntu 16.04 எனும் கணினியில் நிறுவுவது பற்றி பார்க்கலாம். 1. Hadoop எனும் கட்டமைப்பு Java-ல் எழுதப்பட்டிருப்பதால், முதலில் நமது கணினியில் Java நிறுவப்பட்டுள்ளதா என்பதை $ java -versionஎனக் கொடுத்து சோதிக்கவும். இது பின்வருமாறு ஒரு வெளியீட்டைக் கொடுத்தால் java நிறுவப்பட்டுள்ளது என்று அர்த்தம். இல்லையெனில் பின்வருமாறு கொடுத்து… Read More »