அமெரிக்காவில் அமோக வளர்ச்சி அடையும் திறந்த மூல வன்பொருள் நிறுவனம்

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அமெரிக்காவில் வன்பொருள் தயாரிப்பாளர்களில் அதி வேகமாக வளரும் ஒன்றாக ஏடாஃப்ரூட் எப்படி ஆயிற்று? 2005 இல் எம்ஐடி பல்கலைக்கழக பொறியாளர் லிமார் ஃப்ரீடு இதை நிறுவினார். நீங்கள் திறந்த மூல மென்பொருள்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தெரிந்தோ தெரியாமலோ அனேகமாகத் தினமும் பயன்படுத்தி வருவீர்கள். ஆனால் இவர்கள் செய்வது திறந்த மூல வன்பொருள். இந்தத் தயாரிப்பு நிறுவனம் 2013 முதல் 2015 வரை ஏழரை மடங்கு வளர்ச்சியடைந்தது. விற்பனை 200 கோடி ரூபாய்க்கு மேல். பணியாளர்கள் 100 க்கும் மேல். நியூயார்க் மாநகர… Read More »

Big O குறியீடு – அறிமுகம்

ஒரு வழிமுறையைச் (algorithm) செயல்படுத்தும்போது, O(N), O(log N) போன்ற தொடர்களைக் கேள்விப்பட்டிருப்போம். இவற்றின் பொருளென்ன, அதன் முக்கியத்துவமென்ன என்பதைப்பற்றி இப்பதிவில் அறிந்துகொள்ள முயல்வோம். ஒரு வழிமுறையின் பேரளவாக்கத்தன்மை (scalability) இக்குறியீட்டால் அளவிடப்படுகிறது. வழிமுறைக்குக் கொடுக்கப்படும் உள்ளீட்டின் அளவு வேறுபடும்போது, அதன் வெளியீட்டிற்கு, எவ்வளவு அதிக உழைப்பு தேவைப்படுகிறது என்பதையே இக்குறியீடு உணர்த்துகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு வேலையைச்செய்ய ஒரு வழிமுறையில், ஐந்து நிமிடங்கள் எடுக்கிறது என வைத்துக்கொள்வோம். அதன் உள்ளீட்டின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும்போது, நாம் கூடுதலாகச் செய்யவேண்டிய… Read More »

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு நிதியளிக்கிறது

ஐககிய நாடுகள் சிறுவர் நிதியம் (Unicef) அமைத்துள்ள புதுமைக்கான நிதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிறுவர்களுக்கு திறந்த மூல மென்பொருள் தயாரிக்கும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு உதவுவதே இந்த நிதியின் குறிக்கோள். பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க இந்த நிதி உதவுகிறது. தொகுப்புத் தொடர் பேரேடு (blockchain), தானியங்கி வானூர்தி (UAV), தோற்ற மெய்மை மற்றும் மிகை மெய்மை (virtual and augmented reality), முப்பரிமாண அச்சிடல் (3D printing), பொருட்களின் இணையம் (Internet of Things), இயந்திரக் கற்றல்… Read More »

கூகிள் நிரலாக்கப் போட்டியில் ஹைதராபாத் பள்ளி மாணவர் வெற்றி

2017ஆம் ஆண்டுக்கான கூகிள் நிரலாக்கப் போட்டியில் ஹைதராபாத் பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் மேகந்த் காமகோடி வெற்றி பெற்றார். 78 நாடுகளிலிருந்து சுமார் 3500 மாணவர்கள் இந்தத் திறந்த மூல மென்பொருள் போட்டியில் பங்கேற்றனர். 13 முதல் 17 வயது வரை உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர்கள். இவர்கள் திறந்தமூல திட்டங்களில் கொடுக்கப்பட்ட ஐந்தாறு சிறிய பணிகளைச் செய்து முடிக்க வேண்டும். இவர்களில் 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 16 பேர் இந்தியர்கள். ஜூன் மாதத்தில் கலிபோர்னியாவில்… Read More »

ஒருங்குறியும், UTF-8 குறிமுறையும்

கணினியில் சேமிக்கப்படும் எந்தவொரு தகவலும் பூச்சியம், ஒன்று என்ற இரு எண்களைக்கொண்ட பைனரியாக மட்டுமே சேமிக்கப்படும். எண்கள், எழுத்துகள், பிறகுறியீடுகள் என எதுவாக இருந்தாலும், கணினியைப்பொருத்தவரை அவை பூச்சியம் மற்றும் ஒன்று என்ற இரு எண்களைக்கொண்ட தொடராகவே குறிக்கப்படும். இப்படி எண்களுக்கும், எழுத்துகளுக்கும், குறியீடுகளுக்கும் ஒரு எண் ஒதுக்கப்பட்டு, அது பைனரி வடிவத்தில் சேமித்துவைக்கப்படும். இவ்வாறாக ஒரு குறியீட்டிற்கு ஒரு எண்ணை ஒதுக்கும் முறைக்கு குறிமுறை என்று பெயர். ஒதுக்கப்பட்ட எண்ணுக்கு குறியெண் (codepoint) என்று பெயர்.… Read More »

உங்கள் முதல் திறந்த மூல பங்களிப்பை ஐந்து நிமிடங்களில் செய்வது எப்படி

உங்கள் நிரலாக்கத் திறன்களை மேம்படுத்த முதல் வழி நிறைய நிரல்கள் எழுதுவதுதான். இரண்டாவது வழி மற்றவர்கள் எழுதிய நிரல்களைப் படிப்பது. திறந்த மூல திட்டங்களில் பங்களிப்பதே இதற்கு மிகச் சிறந்த வழி. நீங்கள் பல்வேறு நிரலாக்கப் பாணிகளைப் பார்ப்பீர்கள். நீங்கள் எழுதும் நிரலைப் பற்றியும் அற்புதமான விமர்சனங்களைப் பெறுவீர்கள். முதல் பங்களிப்புகள் (First Contributions) என்ற இந்த திட்டம் நீங்கள் திறந்த மூல திட்டங்களுக்கு பங்களிப்பு தொடங்க உதவும் திட்டமாகும். உங்கள் திறந்த மூல பயணத்தைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறீர்களா?… Read More »

Hadoop – அறிமுகம் – பகுதி 1

HADOOP வரலாறு Hadoop என்பது Apache நிறுவனம் வழங்குகின்ற திறந்த மூல மென்பொருள் கருவி ஆகும். இதனை Doug Cutting என்பவர் உருவாக்கினார். இது பெரிய தரவில் கூறப்படுகின்ற பல்வேறு வேலைகளையும் குறைந்த செலவில் திறம்பட செய்வதற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு மென்பொருள்களின் கூட்டமைப்பு ஆகும். Hadoop உருவாக்கத்திற்கு முன்னர் Doug Cutting என்பவர் ‘Apache Lucene’ எனும் கருவியை உருவாக்கியிருந்தார். இக்கருவியைப் பற்றி நாம் ELK Stack-ல் ஏற்கனவே பார்த்துள்ளோம். வாக்கியங்கள்/வார்த்தைகளின் அடிப்படையில் துரிதமாகத் தேடல்களை நிகழ்த்துவதற்கு… Read More »

போய் வாருங்கள் கோபி

நேற்று தகடூர் கோபி (higopi) காலமானார். 42 வயதே ஆனவர். மாரடைப்பு வரும் வயதே அல்ல. நான் கணினி கற்க முயன்ற காலத்தில், தமிழையும் ஒருங்குறி எழுத்துருக்களையும் கணினிக்கு அறிமுகம் செய்தவர்களில் இவரும் ஒருவர். பல்வேறு குறிமுறைகள் இருந்த காலத்தில், அவற்றுக்கு ஒருங்குறி மாற்றியைத் தந்தவர். பெரும் கணினிப் பேராசிரியர்களும் நிறுவனங்களும் மட்டுமே தமிழ்க்கணிமைக்குப் பங்களித்த போது, கணினி நிரலாக்கம் கற்ற எவரும் தமிழ்க்கணிமைக்குப் பங்களிக்கலாம் என்ற ஆர்வத்தை உருவாக்கியவர். பட்டாம்பூச்சி விளைவின் படி, எனக்கு தமிழ்க்கணிமையில்… Read More »

கட்டற்ற வரைபடங்களைக் கொண்டாடுவாம் – OpenStreetMaps.org – ஓர் அறிமுகம் – காணொளி

OpenStreetMaps.org என்பது ஒரு கட்டற்ற வரைபடத் தளம் ஆகும்.  OpenStreetMaps.org ல் உலகின் அனைத்து இடங்கள், தெருக்கள், வணிக இடங்கள், கோயில்கள் என அனைத்து இடங்களையும் சேர்க்கலாம். உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் இந்த தரவுகள் சேர்க்கப்படுகின்றன. கூகுள் மேப் போன்ற தனியுரிம வரைபடத் தளங்கள் போலன்றி, இந்த வரைபடங்களை பயன்படுத்துவதற்கு யாதொரு தடையும் இல்லை. கட்டற்ற உரிமத்துடனே வழங்கப் படுவதால், வணிக ரீதியான செயலிகளையும் உருவாக்கிக் கொள்ளலாம். புதுவையைச் சேர்ந்த நண்பர் பிரசன்னா, ( prasmailme@gmail.com )… Read More »

நிகழ்நேரப் பெருந்தரவு – அறிமுகக் காணொளிகள்

ElasticSearch, Logstash, Kibana என்ற மென்பொருட்கள் மூலம் நிகழ்நேரப் பெருந்தரவு ஆய்வுகளைச் (Real Time Bigdata Analysis) செய்தல் பற்றி நமது எழுத்தாளர் நித்யா அவர்களின் காணொளிகள் இங்கே.   உரை வடிவில் இங்கே – www.kaniyam.com/category/elk-stack/     நீங்களும்  இதுபோல கட்டற்ற மென்பொருட்களுக்கு விளக்கக் காணொளிகளை உருவாக்கி அளிக்க வேண்டுகிறோம். நன்றி.