எளிய தமிழில் Python -4

4. Variable Types (மாறி வகைகள்) : எண்கள் மற்றும் எழுத்துகளை  சேமித்து வைக்கப்பட்ட நினைவக இடத்தையே மாறிகள் (variable) என்கிறோம். அதாவது, நீங்கள் ஒரு மாறி உருவாக்கினால், நினைவகத்தில் சிறிதளவு இடத்தை நீங்கள் வைத்திருப்பீர்கள். ஒரு மாறி தரவு வகை அடிப்படையில்நீங்கள் இந்த மாறிகளில் integer, decimals அல்லது எழுத்துகளை string ஆக சேமிக்க முடியும்.நினைவக இடத்தை ஒதுக்குவதற்கு பைத்தான் மாறிகள் வெளிப்படையான அறிவிப்பு தேவையில்லை. நீங்கள் ஒரு மாறி ஒரு மதிப்பு கொடுக்கும் போது… Read More »

எளிய தமிழில் Python – 5

முந்தைய பகுதியின் தொடர்ச்சி…. 4.4 list (பட்டியல்):    list ஆனது square bracket-க்குள் இருந்தால் அதனையே list என்கிறோம்.இவை C-ல் உள்ள Array-களைப் போன்றது. ஒரே list-ல் வெவ்வேறு data types ஆனது இருக்க முடியும்.ஒரு list-ல் store செய்யப்பட்ட மதிப்புகள் slice ஆபரேட்டர் ([ ] மற்றும் [ : ] ஆகியவற்றைப்பயன்படுத்தி அணுகலாம். உதாரணம்1 இதில் a என்ற list-ல் எண்களும், b என்ற list-ல் string-களும்,c என்ற list-ல் எண்கள் மற்றும்… Read More »

எளிய தமிழில் Python – 3

3. பைத்தானில் நிரல்களை கையாளுதல் 3.1 நிரலினை எழுதுதல் : பைத்தானில் புதிய பைத்தான் கோப்பினை உருவாக்க windows-ல் start->all programs -> python-ஐ தேடி அதில் IDLE என்பதை click செய்யவும்.  idle என்பது python shell script ஆகும். அதில் file என்பதை click செய்து அதில் இருக்கும் new file-னை சொடுக்கவும்.  அதில் விரியும் window-ல் python program-னை எழுதலாம். print (“Hello World!”); பிறகு ctrl+s பொத்தானை அழுத்தி save செய்ய… Read More »

எளிய தமிழில் Python – 2

பைத்தான்  நிறுவுதல் 2.1 பைத்தானை windows-ல் நிறுவுதல் : பைத்தான் பதிவிறக்கத்திற்கு 29 Mb வட்டு இடம் தேவைப்படுகிறது; பைத்தான் மீண்டும் நிறுவ வேண்டும் என்றால் உங்கள் கணினியில் 50 Mb வட்டு இடம் தேவைப்படுகிறது.பதிவிறக்கம் செய்ய இந்தlink – ஐ www.python.org -ஐclick  செய்யவும்.இதில் புதிய பதிப்பை install செய்வதே சிறந்தது.இதிலே தான் extra future இருக்கும்.இதில் பைத்தான் பதிப்பு  python-3.4.3.msi வைத்தே நிறுவுதல் பற்றி காண்போம்.இதில் பைத்தான் பதிப்பு python-3.4.3.msi பதிவிறக்கம் செய்த பின் இருமுறை சொடுக்கி… Read More »

எளிய தமிழில் Python -1

1.1. அறிமுகம் : பைத்தான் ஒரு கணிணி மொழியாகும்.இதை, இந்த தொடர் எளிமையாக அறிமுகம் செய்கிறது.பைத்தான் (Python Programming Language) என்பது ஒரு திறந்த மூல நிரலாக்க மொழியாகும். இம்மொழியை உருவாக்கியவர் குய்டொ வான் ரூஸ்ஸொம்(Guido van Rossum) என்ற நெதர்லாந்து நாட்டு நிரலாளர்(programmer) ஆவார். இவர் இம்மொழிக்குப் பெயரை, ‘Monty Python’s Flying Circus’ என்ற இங்கிலாந்து நகைச்சுவை நாடகத்தின் பெயரைக் கொண்டு, பைத்தான்(python) என்று வைத்தார். அந்நாடகம் ஒருஅடிமன வெளிப்பாட்டிய நகைச்சுவையை (Surreal humor)… Read More »

மும்பை பள்ளி மைக்ரோசாஃப்ட்-ஐ விட்டு கட்டற்ற திறந்த மூல மென்பொருளுக்கு மாற்றியது

மைக்ரோசாஃப்ட், அடோபி போன்ற தனியுரிம மென்பொருள்களுக்குப் பதிலாகக் கட்டற்ற திறந்த மூல மென்பொருள்களுக்கு (Free and Open Source Software – FOSS) மாற்றம் செய்து மும்பை மஸ்காவுனில் உள்ள செயின்ட் மேரி என்ற அரசு உதவிபெறும் பள்ளி நகரிலேயே முதல் பள்ளியாக இடம் பெற்றது. மைக்ரோசாஃப்ட் இயங்கு தளம் மட்டும்தான் என்று இருக்கக் கூடாது என்றும் செலவைக் குறைக்கும் இலவச திறந்த மூல மென்பொருட்களைப் பயன்படுத்த மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்றும் சமீபத்தில் மராட்டிய மாநில இடைநிலை… Read More »

இந்திய மொழிகளுக்கு நவீன, திறந்த மூல எழுத்துருக்களை உருவாக்க ஒரு வடிவமைப்பு நிறுவனம் முனைந்துள்ளது

அச்சுக்கலை முக்கியமானது, வடிவமைப்பு செய்பவர்களுக்கு மட்டும் அல்ல, இணையம் மற்றும் திறன்பேசி பயனர்களுக்கும்தான். ஆனால் ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்தும் இந்த இணைய உலகில், இந்தியாவின் பல வட்டார மொழிகள் இருக்கும் உள்ளடக்கத்தின் ஒரு சிறு பகுதிதான். எனவே, வட்டார மொழிகளில் எவரும் அவ்வளவு கவனம் செலுத்துவது இல்லை. 2013 -லிருந்து, மும்பையைச் சேர்ந்த அச்சுக்கலை கூட்டு இந்த நிலையை மாற்றுவதற்கு வேலை செய்து வருகிறது. குஜராத்தி, குர்முகி, தமிழ் மற்றும் தெலுங்கு முதலான இந்திய மொழிகளுக்கான நவீன… Read More »

Big Data – ஓர் அறிமுகம்

source – commons.wikimedia.org/wiki/File:BigData_2267x1146_white.png நமது ஊரில் உள்ள பழக்கப்பட்ட மளிகைக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கும்போது, அந்தக் கடைக்காரருக்கு நம்மைப் பற்றிய விவரம் முழுவதும் தெரிந்திருக்கும். மேலும் அவர் நம்முடன் கொண்ட பழக்கத்தினால் நமக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதை சற்று கணித்து வைத்திருப்பார். எனவே நமது ரசனைக்கேற்ப அவரிடம் ஏதேனும் புது சரக்குகள் வந்து இறங்கியிருப்பின், அதனை நம்மிடம் காட்டி ‘இது உங்களுக்கு மிகவும் பிடிக்கும். பயன்படுத்தித்தான் பாருங்களேன்” என்பார். நாமும் “சரி! வாங்கித்தான்… Read More »

சென்னை விக்கி நிரல் திருவிழா, சூலை 23 2017

வரும் ஞாயிறு அன்று சென்னை லினக்சு பயனர் குழு நடத்தும் விக்கி நிரல் திருவிழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். இடம் Hexolabs Interactive Tech Pvt Ltd, Type II/17, Dr.VSI Estate, திருவான்மியூர், சென்னை 41. தொலைபேசி – 044 42169699 NIFT அருகில், Origin Towers எதிரில். நேரம் ஞாயிறு 23.07.2017 காலை 10.00 முதல் மாலை 5 வரை.   அவசியமானவை மடிக்கணினி கொண்டுவருதல் அவசியம். குறைவான இணைய இணைப்பே இருப்பதால்,… Read More »

தரவு உரிமையாளர்களின் கைகளை வலுப்படுத்துக – ஆதார், ஜிஎஸ்டி தொழில்நுட்ப ஆலோசகர்

ஆதார் திட்டத்தின் பிரதான வடிவமைப்பாளராகவும் தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருப்பவர் பிரமோத் வர்மா. புதிய ஜிஎஸ்டி வரி செலுத்த வழிவகை செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய நிறுவனமாகிய ஜிஎஸ்டி பிணையத்தின் (GSTN) ஆலோசகரும் ஆவார். ஒரு சிறந்த தொழில்நுட்ப நிபுணரான வர்மா பல பொறுப்புகளை ஏற்றுள்ளார். இவர் கல்வியறிவை மேம்படுத்துவதற்கு ஒரு தொழில்நுட்ப தளத்தை உருவாக்கியுள்ள ஏக்ஸ்டெப் (EkStep) என்ற ஆதாய நோக்கமற்ற அமைப்பின் தலைமை தொழில்நுட்ப அலுவலர்; இந்திய தேசிய கட்டணக் கூட்டுத்தாபனத்தின் (National Payments Corporation of… Read More »