கட்டற்ற கோ எனும் நிரல்தொடர்மொழியை அறிந்துகொள்க

Go என்பது கணினியின் அமைவு செயல்முறையை மனதில்கொண்டு பொதுபயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டஒரு நிரல்தொடர்மொழியாகும். . இந்த கோஎனும் மெழியானது கூகுள் நிறுவனத்தின் Robert Griesemer, Rob Pike, Ken Thompson. ஆகியோரால் சேர்ந்து 2007இல் உருவாக்கப்பட்டு பொதுப்பயன்பாட்டிற்காக 2009இல் வெளியிடப்பட்டது. இது மென்பொருள் உருவாக்குபவருக்கு ஒருவலுவான நிலையானவகையில் குப்பையான கட்டளைகள் அனைத்தையும் சேகரித்து ஒதுக்குவதற்கான உள்ளக கட்டமைப்பை வழங்குகின்றது. இது கட்டளைகள் அனைத்தும் ஒன்றுசேரும் புள்ளியை சார்ந்துள்ளதை திறனுடன் நிருவகிப்பதற்கான செயல்முறையை ஆதரிக்கின்றது என்ற அடிப்படையை பயன்படுத்தி இந்த… Read More »

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 7- ரூபி செயற்கூறுகள்

ரூபி செயற்கூறுகளானது (methods) நிரலை ஒருங்கிணைக்கவும், மறுபயன்பாடு செய்யவும் வழி செய்கிறது. நீண்ட ரூபி நிரலாக எழுதுவதற்கு பதிலாக நிரலை தர்க்க ரீதியில் (logical group) ஒருங்கிணைத்து நமது நிரலில் எங்கு தேவையோ அங்கு மறுபயன்பாடு செய்து கொள்ளலாம். இதனால் ஒரே நிரலை மீண்டும் மீண்டும் எழுத வேண்டியதில்லை. செயற்கூற்றைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. இதற்கு இரண்டே விசயம் செய்தால் போதும். ஒன்று செயற்கூற்றை உருவாக்குதல் மற்றொன்று அதை அழைத்தல் ஆகும். பிற மொழிகளில் உள்ள Function என்பதையே இங்கு Method… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – 13 : டெஸ்ட் கேஸ் உத்திகள் – 2

அலைபேசி, கணினி, தொலைக்காட்சி, குளிரூட்டி என ஏராளமான மின்னணுக் கருவிகள் விற்கும் நிறுவனம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு இரசீது கொடுக்கும் மென்பொருள் ஒன்றை நம்முடைய உருவாக்குநர்கள் உருவாக்கிக் கொடுப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் உருவாக்கும் நேரத்தில் சோதனையாளர்கள் டெஸ்ட் கேஸ்கள் எழுதத் தொடங்கியிருப்பார்கள். இங்கு நம்முடைய மென்பொருள் இரசீது கொடுக்கும் மென்பொருள் என்பதால், பல்வேறு வகைகளில் இரசீதுகளைச் சோதிக்க டெஸ்ட் கேஸ்கள் உருவாக்கப்பட வேண்டும். அதாவது, 10000 ரூபாய்க்கு மேல் பொருள் வாங்கினால் தள்ளுபடி கடன் அட்டை (கிரெடிட் கார்டு)… Read More »

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 6 – ரூபி number classes மற்றும் conversions

ரூபியில் எல்லாமே object தான். இதில் ஆச்சரியப்படும் விசயம் என்னவென்றால் ரூபியில் எண்கள் கூட object தான். பெரும்பாலான நிரலாக்க மொழிகள் எண்களை primitives ஆக கருதும். ஆனால் ரூபியில் எண்கள், எழுத்துக்கள் என எல்லாமே class தான். அவற்றுகான methods ஐ நாம் இயக்கிப் பார்க்கலாம். எல்லா எண் வகைகளுக்கும் அதற்கான class ரூபியில் உள்ளது. அதிலுள்ள method-களைக்கொண்டு எண்களை கையாளமுடியும். ரூபி number classes: ரூபியில் உட்பொதிந்த (builtin ) எண்களுக்கான classes உண்டு.… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – 12 – டெஸ்ட் கேஸ் உத்திகள் – 1

தோழர், அடுத்த பதிவில் ‘பிழை வாழ்க்கை வட்டம்‘ பற்றிப் பார்ப்போம் என்று சென்ற பதிவில் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், அதற்கு முன் எனக்கு ஒரு சந்தேகம் – டெஸ்ட் கேஸ் எழுதுவது பற்றிப் (www.kaniyam.com/software-testing-8-write-test-case/) படித்து விட்டு, ஜிமெயிலில் பயனர் உருவாக்கும் பக்கத்திற்கு டெஸ்ட் கேஸ்களை எழுதலாம் என நினைத்து ஆர்வத்தில் டெஸ்ட் கேஸ் எழுதத் தொடங்கினேன். இன்னும் முடிக்க முடியவில்லை. எழுத எழுத டெஸ்ட் கேஸ்கள் வந்து கொண்டே இருக்கின்றன; நானும் பக்கம் பக்கமாக டெஸ்ட் கேஸ்கள்… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 9: லேத் பட்டறையில் வேலையை மாற்றி மாற்றி ஏற்றி இறக்குவது போல!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 9 நான் தகவல் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு முன் ஒரு இயந்திர பொறியாளராக என் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினேன். நடுத்தர அளவிலான தொழிற்சாலையில் வேலை திட்டமிடல் எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். லேத் பட்டறை இயக்குபவரிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னார், “காலைல கிருஷ்ணன் சார் சொல்ற வேலையை ஏத்துவோம் சார். அதைக் கஷ்டப்பட்டு அலைன் பண்ணி முடிச்சு டூல் செட் பண்ணி கடைசல ஆரம்பிக்கலாம்னு இருப்போம். அப்பதான் சக்திவேல்… Read More »

JSON வடிவில் ஆத்திச்சசூடி, திருக்குறள்

JSON வடிவில்  ஆத்திச்சூடியும் திருக்குறளும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொபைல் செயலிகளும் கணிணி செயலிகளும் எளிதில் உருவாக்கலாம். ஆத்திச்சூடி JSON மூலநிரல் – github.com/tk120404/Aathichudi   திருக்குறள் டாக்டர் மு.வரதராசனார் மு. கருணாநிதி சாலமன் பாப்பையா ஆகியோர் உரைகளோடு JSON வடிவில். மூலநிரல் – github.com/tk120404/thirukkural ஆக்கம் – அர்ஜன் குமார்

விடையளி – தமிழ்ச்சொல் வளத்திற்கு ஒரு தேர்வு

திரு. விஜய்ராஜ், இப்பக்கத்தில் சில தமிழ்க்கேள்விகள் தொகுத்து வருகிறார். தமிழ் சொல்வளம் பெருக அவர் இதை ஒரு விளையாட்டு போல இதில் நடத்தி வருகிறார். இதில் புகுபதிந்து யார் வேண்டுமானாலும் கேள்விகளைச் சேர்க்கலாம். எனவே, உங்களுக்கு நேரமிருப்பின் நீங்களும் நல்லக் கேள்விகளை இதில் சேர்த்தால் அவருக்கு உதவியாய் இருக்கும். அதே சமையத்தில் இந்தத் தளத்தை பயன்படுத்துவோருக்கும் நல்லதாய் அமையும். vidaiyali.herokuapp.com இது ஒரு கட்டற்ற மென்பொருள். Ruby On Rails, PostgreSQL ல் எழுதப்பட்டது. மூலநிரல் –… Read More »

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 5 – ரூபி variable scope

Variable scope என்றால் என்ன?: Scope என்பது நிரலில் variable–களின் எல்லைகளை வரையறுக்கும். ரூபியில் variable scope நான்கு வகைப்படும், அவை local,global,instance மற்றும் class. கூடுதலாக ரூபியில் constant type-ம் உண்டு. ஒரு variable-ன் பெயரின்முன்வரும் சிறப்பு குறியீட்டைப்பொருத்து அதன் எல்லை அறியப்படுகிறது. பெயரின் தொடக்கம் Variable Scope $ A global variable @ An instance variable [a-z] or _ A local variable [A-Z] A constant @@ A… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – 11 – சோதிக்கத் தொடங்குவோம்! !

அலகுச்(தனி உருப்படி) சோதனையை உருவாக்குநர் முடித்து, இணைப்புச் சோதனையை டெஸ்டர்கள் முடித்திருக்கிறார்கள். ஒவ்வோர் உருப்படியையும் உருவாக்கி அந்த உருப்படிகளை மற்ற உருப்படிகளுடன் சரிவர இணைந்து இயங்குகின்றனவா என்று இது வரை பார்த்திருக்கிறோம். ஜிமெயில், யாஹூ மெயில் போல, மின்னஞ்சல் சேவை கொடுக்கும் மென்பொருள் ஒன்றை நம்முடைய நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இங்கு, மின்னஞ்சல் நுழைவுப் பக்கம் (லாகின் பக்கம்) உள்பெட்டி (இன்பாக்ஸ்) வெளிப்பெட்டி (சென்ட் ஐடெம்) தொடர்புகள் என ஒவ்வோர் உருப்படியையும் மற்ற… Read More »