மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 14: பயனர் கதையை தெளிவாகத் தயார் செய்தால் பாதி வேலையை முடித்தது போல!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 14   நாம் முன்னர் பார்த்தபடி, மென்பொருள் தேவைகள் பட்டியல் ஒரு தகவல் தொடர்பு பிரச்சினை. மென்பொருள் உருவாக்கி வாங்க விரும்புபவர்கள் அதை உருவாக்கத் தெரிந்தவர்களுக்கு தெளிவாகச் சொல்வது அவசியம். இல்லாவிட்டால் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது என்று சொல்கிறார்களே அம்மாதிரி ஆகிவிடும்.   70 – 80 களில் அமெரிக்க வங்கிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அவர்கள் மற்ற வங்கிகளுடன் போட்டியில் வெல்ல என்ன செய்யலாம் என்று சிந்திக்கத்… Read More »

எளிய தமிழில் CSS – மின்னூல்

Cascading Style Sheets இணையப் பக்கங்களை அழகாக வடிவமைக்கும் ஒரு நுட்பம். கணினிக்கேற்ற வலை வடிவமைப்போடு கைபேசிக் கருவிகளுக்கான வலைத்தளங்கள், செயலிகள் உருவாக்கத்திலும் CSS பெரும்பங்கு வகிக்கிறது. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது.இதில் வெளியான CSS பற்றிய கட்டுரைககளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.comRead More »

எளிய இனிய கணினி மொழி – ரூபி – மின்னூல்

  “எளிய இனிய கணினி மொழி” – ரூபிக்கு இதை விட பொருத்தமான விளக்கத்தை அளித்திருக்க முடியாது. இன்று பெரும்பாலான இணைய பயன்பாடுகள் ரூபியில் எழுதப்படுகின்றன. நிரலை சுருக்கமாக எழுதுவதே ரூபியின் சக்திவாய்ந்த அம்சங்களில் ஒன்றாகும். மென்பொருட்களை அதிவிரைவாகவும், எளிமையாகவும் ரூபியில் உருவாக்க முடியும். ரூபியின் அடிப்படையையும், பரவலாக பயன்படுத்தப்படும் அம்சங்களையும் பிரியா இந்நூலில் விவரித்திருக்கிறார். ரூபியின் எளிமையும், இனிமையும் இந்நூலெங்கும் வியாபித்திருப்பது அவரது சிறப்பு. “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய… Read More »

ஏன் வேண்டாம் பேஸ்புக்கின் ஃப்ரீ பேசிக்ஸ்?

1. இணையத்தை இலவசமாக எல்லா மக்களுக்கும் கொடுக்க ஃப்ரீ பேசிக்சை விட ஏர்செல்லின் திட்டம்(www.medianama.com/2015/10/223-aircel-free-internet/ ), மொசில்லாவின் சம மதிப்பீட்டுத் திட்டம்(www.thehindubusinessline.com/info-tech/net-neutrality-mozilla-suggests-equal-rating/article7177532.ece ), ஜிகாட்டோவின் சுங்கமில்லா இணையத் திட்டம் (www.digit.in/general/gigatos-toll-free-internet-28094.html ) எனச் சிறந்த பல திட்டங்கள் இருக்கின்றன. ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம் என்பது பேஸ்புக்கை முன்னிறுத்தும் திட்டமே தவிர, இலவச இணையத்தை முன்னிறுத்தும் திட்டமாக இல்லை. 2. ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்திற்கு பேஸ்புக்கும் பணம் செலவழிக்கவில்லை; தொலைத் தொடர்பு நிறுவனங்களும் செலவழிக்கவில்லை. அப்படியானால் இந்த இலவசத்… Read More »

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 24 – கோப்புகளைக் கையாளுதல்

முந்தைய அத்தியாயத்தில் கோப்பகங்களை எப்படி கையாளுவதெனப்பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ரூபியில் கோப்புகளை எப்படி உருவாக்குவது, எப்படி திறப்பது, படிப்பது மற்றும் எழுதுவது எப்படியென்று பார்ப்போம். மேலும் கோப்புகளை எவ்வாறு அழிப்பது மற்றும் பெயர் மாற்றுவதென்றும் காண்போம். புதிய கோப்பை உருவாக்குதல்: ரூபியில் ஒரு புது கோப்பை உருவாக்க file வர்க்கத்திலுள்ள new செயற்கூற்றைப் பயன்படுத்தலாம். New செயற்கூற்றிற்கு இரண்டு arguments கொடுக்க வேண்டும். ஒன்று உருவாக்க வேண்டிய கோப்பின் பெயர், மற்றொன்று எந்த முறையில் கோப்பை திறக்க… Read More »

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 23 – கோப்பகங்களைக் கையாளுதல்

இதுவரை ரூபியின் அடிப்படைகளை பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ரூபியில் கோப்பு (File) மற்றும் கோப்பகங்கள் (Directory) கையாளுவதை காணலாம். வேறொரு கோப்பகத்திற்கு செல்லுதல்: ஒரு குறிப்பிட்ட கோப்பகத்திலிருந்து ரூபி செயலிகளை செயல்படுத்த ஆரம்பிக்கலாம். பெரும்பாலான நேரங்களில், நிரல் மூலமாக, நாம் ஒரு கோப்பகத்திலிருந்து, கோப்பு அமைப்பிலுள்ள (file system) மற்றொரு கோப்பகத்திற்கு போக வேண்டியிருக்கும். ரூபியில் Dir வர்க்கத்தில் பல்வேறு செயற்கூறுகள் உள்ளன. அதை கொண்டு நாம் மற்றொரு கோப்பகத்திற்கு செல்லலாம். முதலவதாக நாம் எந்த கோப்பகத்தில்… Read More »

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 22 – சரத்திலிருந்து பிற பொருட்களை உருவாக்குதல்

இதுவரை சரம் உருவாக்கம்,ஒப்பீடல் மற்றும் கையாளுதல் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் சரத்திலிருந்து வேறு வர்க்கத்தை சார்ந்த பொருட்களை எவ்வாறு உருவாக்குவது என காண்போம். சரத்திலிருந்து array-ஐ உருவாக்குதல்: ஒரு சரத்திலிருந்து array-வைப்பெற split செயற்கூற்றையும் மற்றும் சில செங்கோவைகளையும் (regular expressions) பயன்படுத்த வேண்டும். Split செயற்கூறானது சரத்தை பகுதிகளாகப் பிரித்து array கூறுகளாக வைக்கிறது. இந்த மாற்றத்தின்போது split செயற்கூறு எந்த குறியீட்டைப் பயன்படுத்தி பிரிக்க வேண்டும் என்பதை செங்கோவைகள் சொல்கின்றன. நாம் ஒரு முழுமையான… Read More »

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 21 – சரங்களைக் கையாளுதல்

இந்த அத்தியாயத்தில் ரூபியில் சரங்களை மாற்றுதல்,பெருக்குதல் மற்றும் இடைப்புகுத்தலை காணலாம். மேலும், ரூபியின் chomp மற்றும் chop செயற்கூறுகளைப்பற்றியும் காணலாம். சரத்தின் பகுதியை மாற்றுதல்: ரூபியில் [ ]= செயற்கூற்றை பயன்படுத்தி சரத்தின் பகுதியை மாற்ற இயலும். இந்த செயற்கூற்றைப் பயன்படுத்தி மாற்ற வேண்டிய சரத்தை செயற்கூற்றிற்கு அனுப்பி புதிய சரத்தை அமைக்கலாம். உதாரணம் பின்வருமாறு: [code lang=”ruby”] myString = "Welcome to JavaScript!" myString["JavaScript"]= "Ruby" puts myString => "Welcome to Ruby!"… Read More »

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 20 – சரங்களை இணைத்தல் மற்றும் ஒப்பிடுதல்

முந்தைய அத்தியாயத்தில் ரூபியில் string வர்க்கத்திற்கு பொருட்களை உருவாக்குவது எப்படி என்று பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ரூபியில் சரங்களைப் பெறுதல், ஒப்பிடுதல் மற்றும் இணைத்தலை காண்போம். ரூபியில் சரங்களை இணைத்தல்: முந்தைய அத்தியாயங்களில் படித்தது போல, ரூபியில் ஒரு வேலையைச் செய்ய பல வழிகள் உள்ளன. அதேப்போல் சரங்களை இணைக்கவும் பல வழிகள் உள்ளன. ‘+’ செயற்கூற்றை பயன்படுத்தி சரங்களை இணைக்கலாம்: [code lang=”ruby”] myString = "Welcome " + "to " + "Ruby!"… Read More »

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 19 – ரூபி சரங்கள்

சரம் (String) என்பது குறியீடுகளின் (characters) குழுவாகும். இது மனிதர்கள் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களை படிக்க உதவுகிறது. சரத்தை கையாளும் பகுதி நிரலாக்கத்தில் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த அத்தியாயத்தில் சரங்களின் அடிப்படைகளை காண்போம். ரூபியில் சரங்களை உருவாக்குதல்: ரூபியில் String வர்க்கத்திலிருந்து சரங்களை உருவாக்கலாம். கூடுதலாக, இந்த பொருளில் பல்வேறு செயற்கூறுகள் உள்ளன. இதனை பயன்படுத்தி சரங்களைக் கையாளலாம். String வர்க்கத்திலுள்ள new செயற்கூற்றைக் கொண்டு ஒரு புது சரத்தை உருவாக்கலாம். [code lang=”ruby”] myString… Read More »