Tag Archives: தமிழ்

சில்லுவின் கதை 7. ஒரு நாட்டின் தரநிலையையே உயர்த்திய தனிநபர்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) எந்தத் தயாரிப்பு தேவை என்று நுகர்வோரால் சொல்ல இயலாது, ஏனெனில் எதைத் தயாரிக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியாது 0:52 புதிய தயாரிப்புகளை உருவாக்கி சந்தையில் வெளியிடுதல் பற்றி சோனி  (Sony) நிறுவனத்தின் தலைவர் அகியோ மோரிட்டா (Akio Morita), “எந்த வகையான தயாரிப்புகள் வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்பதற்குப் பதிலாக… Read More: சில்லுவின் கதை 7. ஒரு நாட்டின் தரநிலையையே உயர்த்திய தனிநபர் »

சில்லுவின் கதை 6. நம் நாட்டின் ஜுகாடு மனநிலையை மாற்ற வேண்டும்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) ஜப்பானிய சில்லுகள் அமெரிக்க சில்லுகளைவிட 10 மடங்கு நம்பகமானவை 0:00 பில் ஹியூலெட் (Bill Hewlett), டேவ் பேக்கார்ட் (Dave Packard) சேர்ந்து 1930 களில் கலிபோர்னியாவில் தங்கள் கார் கொட்டகையில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினர். அவர்கள் மின் மற்றும் மின்னணு கருவிகளை உருவாக்கினர். இந்த நிறுவனம் பின்னர் HP எனப்… Read More: சில்லுவின் கதை 6. நம் நாட்டின் ஜுகாடு மனநிலையை மாற்ற வேண்டும் »

சில்லுவின் கதை 5. பேரளவு உற்பத்தியால் விலையை வீழ்த்துவதில் இன்டெல் முன்னிடம்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சில்லுகளைப் பயன்படுத்தி பயனுள்ள பொருட்கள் தயாரிப்பதில் ஜப்பான் முன்னிலை 0:00 சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்கா இந்தக் குறைக்கடத்தி வில்லைகளையும் (wafer) சில்லுகளையும் (chip) உருவாக்குவதில் மிகவும் சிறந்து விளங்கியது. ஜப்பான் அவற்றைப் பயன்படுத்தி நுகர்வோருக்கான பயனுள்ள பொருட்கள் தயாரிப்பதில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டது. நுணுக்கமான கம்பிப் பிணைப்புக் (wire bonding) கைவேலைக்கு… Read More: சில்லுவின் கதை 5. பேரளவு உற்பத்தியால் விலையை வீழ்த்துவதில் இன்டெல் முன்னிடம் »

சில்லுவின் கதை 4. ஒரு டாலருக்கு 50 மில்லியன் டிரான்சிஸ்டர்கள்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) பேரளவு உற்பத்தி (mass production) மூலம் செலவைப் பலமடங்கு குறைத்து விலையை வீழ்த்தல் 0:23 சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதிக்கு (San Francisco Bay Area) அருகில்தான் இந்த சிலிக்கான் சில்லுகள் தயாரிக்கப்பட்டன. இதனால்தான் இது சிலிக்கான் பள்ளத்தாக்கு (Silicon Valley) என்று பெயர்பெற்றது. 1965 இல் இங்கு தயார் செய்த… Read More: சில்லுவின் கதை 4. ஒரு டாலருக்கு 50 மில்லியன் டிரான்சிஸ்டர்கள் »

சில்லுவின் கதை 3. ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தால் மட்டும் போதாது

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) ஃபோட்டோலித்தோகிராபி (photolithography) செயல்முறையில் ஒளி மறைப்பியைக் கையால் வரைந்து வெட்டுதல் 0:00 ஃபோட்டோலித்தோகிராபிக்கான ஒளி மறைப்பியை சிவப்பு வண்ண ரூபிலித் (Rubylith) தாளில் வரைந்து வெட்டுவோம் என்றும், பின்னர் அதை குறும்படிவாக்கி (miniaturized) அச்சிடுவோம் என்றும் பார்த்தோம். ஒரு புதிய பொருளைக் கண்டுபிடிப்பதுடன் அதை நம்பகத்தன்மையுடன் உற்பத்தி செய்வதும் மிக முக்கியம்… Read More: சில்லுவின் கதை 3. ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தால் மட்டும் போதாது »

சில்லுவின் கதை 2. விண்வெளியிலும் ஏவுகணையிலும் சோவியத் ரஷ்யாவுடன் போட்டி

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சோவியத் ரஷ்யா முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்கை (Sputnik) விண்வெளியில் செலுத்தியது 0:00 எட்டு திறமையான நபர்கள் ராபர்ட் ஷாக்லியின் (Robert Shockley) நிறுவனத்தை விட்டு வெளியேறி 1957 இல் ஃபேர்சைல்ட் செமிகண்டக்டர் நிறுவனத்தை (Fairchild Semiconductors) இணைந்து நிறுவினர் என்று முன்னர் பார்த்தோம். இவர்கள் ஒருங்கிணைந்த மின்சுற்றுகளில் தங்கள் சொந்த வடிவமைப்பைக்… Read More: சில்லுவின் கதை 2. விண்வெளியிலும் ஏவுகணையிலும் சோவியத் ரஷ்யாவுடன் போட்டி »

சில்லுவின் கதை 1. இரண்டாம் உலகப் போரில் குண்டுப் பாதைக் கணக்கீடு

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay)   இந்த அரையாண்டு ஐஐடி பம்பாயில் CMOS அளவியல் ஒருங்கிணைந்த மின்சுற்று (CMOS Analog Integrated Circuit – IC) வடிவமைப்பு வகுப்பில் ஒரு புதிய பரிசோதனையைச் செய்து வருகிறேன். ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும், “சில்லுவின் கதை” என்ற தலைப்பில் சில்லுவின் வரலாறு பற்றி சில நிமிடங்கள் பேசுகிறேன். திரிதடையத்தின் (transistor)… Read More: சில்லுவின் கதை 1. இரண்டாம் உலகப் போரில் குண்டுப் பாதைக் கணக்கீடு »

எளிய தமிழில் Electric Vehicles 30. வளர்ந்து வரும் மின்கலத் தொழில்நுட்பங்கள்

சோடியம் அயனி மின்கலம் செலவும் குறைவு, மூலப்பொருளும் எளிதில் கிடைக்கும்  லித்தியம் அயனி மின்கலம் போன்றே சோடியம் அயனி மின்கலமும் ஒரு வகையான மீள் மின்னேற்றத்தக்க மின்கலம் ஆகும். இது லித்தியத்துக்குப் பதிலாக சோடியத்தைப் பயன்படுத்துகிறது. சமையல் உப்பிலிருந்து சோடியம் தயாரிக்கலாம். ஆகவே இதற்கு செலவு குறைவு. மேலும் லித்தியம் போன்று ஓரிரு நாடுகளில் ஓரிரு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டியது இல்லை. லித்தியம் அயனி மின்கலத்தைவிட தீப்பிடிக்கும் வாய்ப்பு குறைவு. மேலும் அதிகக் குளிர் நாடுகளிலும்… Read More: எளிய தமிழில் Electric Vehicles 30. வளர்ந்து வரும் மின்கலத் தொழில்நுட்பங்கள் »

எளிய தமிழில் Electric Vehicles 29. பழைய மின்கலம் மறுசுழற்சி

மறுசுழற்சிக்கு முன் மறுபயன்பாடு முதலில் சிக்கனம், அடுத்து மறுபயன்பாடு, பின்னர் மறுசுழற்சி (Reduce, reuse, recycle) என்பதுதான் நம் கொள்கை. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் முதலில் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். அதாவது வீணாவதைத் தவிர்க்கவேண்டும். அடுத்து மறுபயன்பாடு. அதாவது அப்படியே வேறு வேலைக்குப் பயன்படுத்த முடியுமானால் அதைச் செய்ய வேண்டும். கடைசியாகத்தான் மறுசுழற்சி. ஆகவே மறுசுழற்சிக்கு முன்னர் மறுபயன்பாட்டுக்கு என்ன வழி என்று முதலில் பார்ப்போம். தடையிலா மின் வழங்கி (uninterrupted power supply – UPS),… Read More: எளிய தமிழில் Electric Vehicles 29. பழைய மின்கலம் மறுசுழற்சி »

எளிய தமிழில் Electric Vehicles 28. மின்கலத்தை மாற்றீடு செய்தல்

எரிவாயு உருளையைப் போல் மின்கலத்தையே மாற்றீடு செய்தல் (swapping) ஒரு உருளையில் எரிவாயு தீர்ந்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம்? அதே உருளையிலேயே எரிவாயுவை மீண்டும் நிரப்புவதில்லை. அந்த உருளையைக் கொடுத்துவிட்டு வேறொரு நிரப்பிய உருளையை பதிலுக்கு வாங்கிக் கொள்கிறோம் அல்லவா? மின்கலத்தையே மாற்றீடு செய்தல் என்பது இதேபோல வடிந்த மின்கலத்தைக் கொடுத்துவிட்டு முழுமையாக மின்னேற்றிய வேறொரு மின்கலத்துக்கு மாற்றீடு செய்வதுதான். இது ஒரு விற்பனை நிலையத்தில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கு ஒப்பாக விரைவானது. உங்கள் ஊர்தியில் மின்னேற்றுவதற்காக… Read More: எளிய தமிழில் Electric Vehicles 28. மின்கலத்தை மாற்றீடு செய்தல் »