Tag Archive: தமிழில் பைத்தான்

பைத்தான் படிக்கலாம் வாங்க – 17 – வென்றது வியனா? அப்பாவா?

மன்னரிடம் நெல்மணிகள் கேட்ட கதையில் வென்றது மோகனா? மன்னரா? கண்டுபிடித்து விட்டீர்களா? மோகன் தான் எனக் கண்டுபிடித்திருப்பீர்கள். முதல் சதுரத்திற்கு ஒரு நெல்மணி, இரண்டாவது சதுரத்திற்கு இரண்டு நெல்மணி, மூன்றாவது சதுரத்திற்கு நான்கு நெல்மணி என அறுபத்து நான்குக் கட்டங்களுக்கும் கண்டுபிடித்தால் மொத்தம் 18,446,744,073,709,551,615 நெல்மணிகள் தேவைப்படும். இந்த நெல்மணிகளை எடுத்து வைக்க மட்டுமே மன்னருக்கு…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 15 – while 2

முந்தைய பதிவில் வீட்டுப்பாடம் கொடுத்திருந்தோமே! செய்து விட்டீர்களா? முதல் வீட்டுப்பாடம், முந்தைய பதிவில் பார்த்த நிரலுக்குப் பாய்வுப்படம் வரைவது. முதல் நிரல்: This file contains bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க! 14 – while

இது வரை if elif else பார்த்திருக்கிறோம். இந்தப் பதிவில் while பார்க்கப் போகிறோம். while என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருள் என்ன? எப்போது என்பது! இதை எதற்கு நிரல் மொழிகளில் பயன்படுத்துகிறார்கள்? ஓர் எடுத்துக்காட்டு சொல்கிறேன் பாருங்களேன். 1 என்று ஐந்து முறை அச்சிட வேண்டும் எப்படி நிரல் எழுதுவது? இந்த நிரல் சரியா…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க! 13 – if elif else

“நீங்கள் மூன்று எண்களில் பெரிய எண்ணைக் கண்டுபிடிக்க ஒரு பாய்படம் வரைந்திருந்தீர்கள். ஆனால், நான் வேறொரு படம் வரைந்திருந்தேன். இந்தப் படம் சரியென எனக்குப் படுகிறது. இதற்குப் பைத்தான் நிரல் எழுத முடியுமா?” என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். உறுதியாக முடியும். பைத்தான் படிக்க வேண்டும் என்னும் அவருடைய முயற்சி பாராட்டுதலுக்குரியது. அவர் வரைந்த பாய்படம்(Flowchart),…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க! 12 – மூன்று எண்களில் பெரிய எண் எது?

மூன்று எண்களில் பெரிய எண்ணைக் கண்டுபிடிப்பதற்கான பாய்படத்தை(flowchart) வரைந்து வரக் கேட்டிருந்தேன். வரைந்து விட்டீர்களா? நானும் அந்த வீட்டுப்பாடத்தைச் செய்திருக்கிறேன். நீங்கள் இது போலவும் செய்திருக்கலாம். மாற்று வழியிலும் செய்திருக்கலாம். உங்கள் பாய்படத்தை github.com தளத்தில் பதிவேற்றி, இணைப்பைக் கருத்துகளில் பதியுங்கள். சரி, இப்போது மேல் உள்ள பாய்படத்திற்குப் பைத்தான் நிரல் எழுதுவோமா? 1. மூன்று…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க! 11 – வாங்க பழகலாம்!

இது வரை பார்த்த பதிவுகளில் பைத்தான் நிரலை எப்படி எழுதுவது? உள்ளீடு எப்படிக் கொடுப்பது? அச்சிடுவது எப்படி? என்று பார்த்திருக்கிறோம். ஆனாலும் பைத்தானின் எளிமையை, இனிமையை இன்னும் முழுமையாக நாம் சுவைக்கவில்லை. அதைத் தான் இந்தப் பதிவில் சுவைக்கப் போகிறோம். இரண்டு எண்களில் பெரிய எண் எது? இரண்டு எண்களில் பெரிய எண்ணை எப்படிக் கண்டுபிடிப்பது?…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க! 10 – செயல்கூற்றின் வெளியீடு, மாறிகள்

input() என்பதன் முன்பு name = என்று கொடுத்து இருந்திருக்கிறீர்கள். ஆனால், print() என்பதன் முன் எதையுமே கொடுக்கவில்லை ஏன்? என்னும் கேள்வியுடன் முந்தைய பதிவை முடித்திருந்தேன். இந்தப் பதிவு புரிய முந்தைய பதிவின் முன்னோட்டம் தேவையான ஒன்று. இன்னும் நீங்கள் அதைப் படிக்கவில்லை என்றால், கொஞ்சம் படித்து விட்டு இந்தப் பதிவைத் தொடருங்களேன். கேள்வி…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க! 9 – செயல்கூறு ஆராய்வோம்!

செயல்கூறு என்றால் என்னவென்று பார்ப்போம் என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா? செயல் என்றால் என்ன? ஏதாவது ஒரு வேலையைச் செய்வது! அதே தான் செயல்கூறும்! ஒருவரைக் கூப்பிட்டு, சாப்பிடு என்று சொல்கிறோம். சாப்பிட அவர் என்னென்ன செய்வார்? சாப்பிடுதல்: 1. தட்டு / இலை எடுப்பார். 2. சோற்றை அதில் வைப்பார். 3. கறி…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க! 8 பைத்தான் உங்களை வரவேற்கட்டும்!

இதுவரை பார்த்த பதிவுகள் வழியே விண்டோஸ், லினக்ஸ் ஆகிய இயங்குதளங்களில் எப்படிப் பைத்தான் நிரலை எழுதி, இயக்கி, வெளியீட்டையும் பார்க்கத் தெரிந்து கொண்டோம். அந்தப் படியை இன்னும் ஏறாதவர்கள் ஒரு முறைக்கு இருமுறை அந்தப் படியை ஏறப் பழகிக் கொள்ளுங்கள். அந்தப் படியில் முறையாக ஏறியவர்களுக்கு இனி நிரல் எழுதுவது என்பது எட்டாக்கனி இல்லை, முழுமையாக…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 7 – லினக்சில் நிரல் எழுதுவோம்!

முந்தைய பதிவில் விண்டோசில் எப்படி லினக்ஸ் நிரல் எழுதுவது என்று பார்த்தோம். இப்போது லினக்சில் எப்படி எழுதுவது என்று பார்ப்போம். லினக்ஸ் இயங்குதளத்தில் பைத்தான் நிரல் எழுதுவதற்கு முன், நோட்பேட்++(Notepad++),  நோட்பேட்கியூகியூ(Notepadqq) போன்ற மென்பொருட்களை நிறுவிக் கொள்வது சிறந்தது. இம்மென்பொருட்கள் கட்டாயமாகத் தேவையா எனக் கேட்டால் இல்லை தான்! இருந்தாலும் இவற்றைப் பயன்படுத்துவதில் சில நன்மைகள்…
Read more