எளிய தமிழில் Electric Vehicles 7. மாறுமின் தூண்டல் மோட்டார்
நீரேற்றி (water pump), மின்விசிறி, குளிர் சாதனங்கள், கலவைக் கருவி (mixie), மாவரைக்கும் எந்திரம் (wet grinder) போன்ற பல அன்றாட மின்சாதனங்களில் மாறுமின் தூண்டல் மோட்டாரைப் (AC induction motor) பயன்படுத்துகிறோம். இவற்றில் வீட்டில் பயன்படுத்தும் குறைந்த திறன் சாதனங்களில் பெரும்பாலும் ஒற்றையலை (single phase) மோட்டார் இருக்கும். தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் அதிக திறன் சாதனங்களில் மூன்றலை (3-phase) மோட்டார் இருக்கும். மின்கலத்தின் நேர்மின்சாரத்தை (DC) மூன்றலை மாறுமின்சாரமாக (3-phase AC) மாற்ற வேண்டும் மின்கலம்… Read More »