Tag Archives: தமிழ்

எளிய தமிழில் Car Electronics 23. உட்பதித்த நிரலாக்கம்

உட்பதித்த நிரலாக்கம் (embedded programming) என்பது பொதுவாகக் கணினிகள், திறன்பேசிகள் அல்லாத சாதனங்களைக் கட்டுப்படுத்த எழுதுவது. இதைக் குறிப்பிட்ட வன்பொருளுக்குத் தோதாக  எழுதவேண்டும். நேரக் கட்டுப்பாடு மற்றும் கணினிகளை விட மிகக் குறைந்த நினைவகம் போன்ற பிரச்சினைகள் உண்டு. உட்பதித்த நிரலாக்கம் என்பதையே சாதனங்களுக்கான மென்பொருள் (firmware) என்றும் கூறுகிறார்கள். கணினிகள், திறன்பேசிகள் ஆகியவை இணையத்தில் இருப்பதால் செயலிகளையும், இயங்குதளத்தையும் இணையம் வழியாக மேம்பாடு செய்யலாம். ஆனால் சாதனங்களை விற்றபின் நுகர்வோர் வீடு, கடை, அலுவலகங்களில் சென்று… Read More »

எளிய தமிழில் Car Electronics 22. ஊர்தித்தர லினக்ஸ்

லினக்ஸ் (Linux) முதன்முதலில் தனிநபர் கணினிகளுக்காக உருவாக்கப்பட்டது. பின்னர் வழங்கிகள் (servers) முதல் மீத்திறன் கணினிகள் (super computers) வரை, திறன்பேசிகள் (smartphones) முதல்  பொருட்களின் இணையம் (Internet of Things – IoT) வரை லினக்ஸ் இயங்குதளமே ஆதிக்கம் செலுத்துகிறது.  ஊர்தித் தர லினக்ஸ் (Automotive Grade Linux – AGL) என்பது லினக்ஸ் கருநிரலின் (kernel) அடிப்படையிலான திறந்த மூலத் திட்டமாகும். இதை உருவாக்கி மேம்படுத்தப் பல வாகன உற்பத்தியாளர்கள், முதல் அடுக்கு வழங்குநர்கள்… Read More »

எளிய தமிழில் Car Electronics 21. ஊர்தி இயங்குதளங்கள்

வன்பொருளையும் மென்பொருளையும் நிர்வகிப்பதற்கான அனைத்து முக்கிய செயல்பாடுகளையும் உள்ளடக்கியன இயங்குதளங்கள் (operating systems). மேலும் செயலிகள் வன்பொருளின் அம்சங்களை நேரடியாக அணுக இயலாது. இயங்குதளம் மூலமாகத்தான் அணுகவேண்டும். ஆன்டிராய்டு ஊர்தி இயங்குதளம் (Android Automotive OS – AAOS), ஊர்தித்தர லினக்ஸ் (Automotive Grade Linux), பிளாக்பெரி கியூனிக்ஸ் (BlackBerry QNX) ஆகியவை சந்தையில் பயன்பாட்டில் உள்ள சில ஊர்தி இயங்குதளங்கள் ஆகும். நிகழ் நேர இயங்கு தளம் (Real-time Operating System – RTOS) கணினிகள்,… Read More »

எளிய தமிழில் Car Electronics 20. பணிமனையில் பழுது கண்டறிந்து சரிசெய்தல்

ஒருமித்த பழுது கண்டறியும் சேவைகள் (Unified Diagnostic Services – UDS) என்பது தானுந்துகளின் கட்டுப்பாட்டகங்களுக்கான (automotive ECU)  ISO 14229 என்ற பன்னாட்டுத் தரநிலையில் வரையறுக்கப்பட்டுள்ள தொடர்பு நெறிமுறை ஆகும். முழுமையான பழுது கண்டறிதல் நீங்கள் ஒரு பழைய கார் வாங்கப்போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வாங்குவதற்கு முன்பு மேலோட்டமான ஆய்வு மூலம் அதன் செயல்பாட்டில் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் கண்டறிய முடியாது. இம்மாதிரி வேலைகளுக்கு முழுமையான பழுது கண்டறிதல் தேவைப்படுகிறது. குறிப்பாக மின்னணு சாதனங்கள்… Read More »

எளிய தமிழில் Car Electronics 19. ஓடும்போது பழுது கண்டறிதல்

வண்டியில் ஏதேனும் செயல்பிழை ஏற்பட்டால் பணிமனைக்குக் கொண்டு சென்று பழுது பார்க்கலாம்தானே? ஓடும்போதே பழுது கண்டறிதல் அவசியமா, என்ன – என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி. இதற்கு இரண்டு பதில்கள் உள்ளன. முதலாவது, உங்கள் வண்டியிலிருந்து வெளிவரும் உமிழ்வு (emission) தரநிலைக்குள்தான் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதில் அரசாங்கங்கள் குறியாக இருக்கின்றன. ஆகவே 1988 இல் கலிஃபோர்னியாவில் தொடங்கி, பின்னர் அமெரிக்கா முழுவதும், அதன் பின்னர் ஐரோப்பா, இந்தியா உட்படப் பல உலக நாடுகளும் ஓடும்போது உமிழ்வு… Read More »

எளிய தமிழில் Car Electronics 18. CAN உட்பிணையம்

இது நிகரிடைப் பிணையம் (Peer-to-peer network) CAN உட்பிணையம் (bus) என்பது ஒரு நிகரிடைப் பிணையம் (Peer-to-peer network) தகவல் பரப்பு அமைப்பாகும். அதாவது இதில் இணைந்திருக்கும் எந்தவொரு கட்டுப்பாட்டகமும் (ECU) தகவலை அனுப்பவும் பெறவும் முடியும். பிணையத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு ECU வையும் பொதுவாகப் பிணையத்திலுள்ள ஒரு கணு (node) என்று கருதலாம். இது 125 kbps இலிருந்து அதிகபட்சம் 1 Mbps வரை தகவலை அனுப்ப முடியும். இதில் அதிகபட்சமாக 2048 தனிப்பட்ட அடையாளம்… Read More »

எளிய தமிழில் Car Electronics 17. ஊர்திப் பிணைய நெறிமுறைகள்

ஒரு உணரி பல ECU க்களுக்குத் தகவல் அனுப்பவேண்டுமென்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு ECU க்கும் நேரடியாகத் தனித்தனி கம்பி போட்டால் காரில் கம்பிகளின் எண்ணிக்கை அதிகமாகிப் பராமரிப்பது மிகவும் கடினமாகிவிடும். இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கப் பிணையத்தைப் பயன்படுத்துகிறோம்.  பிணையமும் (network) உட்பிணையமும் (bus) பிணையம் (network) என்பது மிகவும் பரவலாக இருப்பது. எடுத்துக்காட்டாக, ஒரு அலுவலகத்தில் உள்ளத் தனிநபர்க் கணினிகள், வழங்கிகள் (இணையம், தரவு, கோப்பு), அச்சு எந்திரங்கள் ஆகியவற்றை இணைப்பது பிணையம். உட்பிணையம் (bus) என்பது… Read More »

எளிய தமிழில் Car Electronics 16. மின்னணு இயக்கத் தடுப்பி

கம்பிகளை நேரடியாக இணைத்துப் பழைய கார்கள் திருட்டு எரியூட்ட சுவிட்சின் (Ignition switch) பின்னால் மின்கலத்திலிருந்து ஒரு கம்பி வரும், மற்றொரு கம்பி  ஓட்டத்துவக்கும் மோட்டாருக்குச் (Starter motor) செல்லும். அந்தக் காரின் சாவியை வைத்துக் காரின் பொறியை (Engine) ஓட்டத்துவக்கினால் இந்தக் கம்பிகள் இரண்டையும் மின் சுற்று (circuit) உள்ளுக்குள் இணைக்கும். உடன் பொறி ஓடத் துவங்கும். சாவியில்லாமல் காரைத் திருட முயல்பவர்கள் இந்த இரண்டு கம்பிகளையும் மானிப்பலகையின் (dashboard) பின்புறமாகக் கழற்றி நேரடியாக இணைக்க… Read More »

எளிய தமிழில் Car Electronics 15. ஊர்திக் கம்பிதைத்தல்

இன்று கார்களில் பல மின்னணு பாகங்கள் பொருத்தப்படுகின்றன என்று நாம் பார்த்தோம். இவை நகர்தல், திருப்புதல், நிறுத்துதல் போன்ற அடிப்படைச் செயல்பாடுகள் தவிர, பல்வேறு தகவல், பொழுதுபோக்கு செயல்பாடுகளையும் செய்கின்றன. இந்த மின்னணு பாகங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், ஊர்தியின் ஒவ்வொரு பகுதிக்கும் சக்தியையும் சமிக்ஞைகளையும் கடத்துவதற்கும் மின்கம்பிகள் இன்றியமையாதவை. கம்பிதைத்தல் (Wiring Harness) என்பது இம்மாதிரியுள்ள பல நூற்றுக்கணக்கான மின்கம்பிகளை உறைகளுக்குள் கட்டித் தொகுத்து, அடையாளமிட்டு, ஒழுங்கமைத்து வைப்பதற்கான ஒரு பயனுள்ள அமைப்பு ஆகும். இது மின் கம்பிகளை… Read More »

எளிய தமிழில் Car Electronics 14. அதிநவீன ஓட்டுநர் உதவி அமைப்புகள்

ஓட்டுநரின் கண்களுக்கு எளிதில் புலப்படாத பிரச்சினைகளை உணரிகள் மூலம் கண்டறிந்து முன்கூட்டியே எச்சரிக்கும் அதிநவீன பாதுகாப்புத் தொழில்நுட்பம் கார்களில் வரத் தொடங்கியிருக்கிறது. எச்சரிப்பது மட்டுமல்லாமல் சில நேரங்களில் தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடும். இதுதவிர ஓட்டுநர் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டிய சோர்வு தரும் வேலைகளைத் தானியங்கியாகச் செய்யும் அம்சங்களும் வந்துள்ளன. இவற்றைப் பொதுவாக அதிநவீன ஓட்டுநர் உதவி அமைப்புகள் (Advanced Driver Assistance Systems – ADAS) என்று சொல்கிறார்கள். இவற்றைப் பற்றி விரிவாகக் கீழே… Read More »