Tag Archives: ruby

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 15 – ரூபி நிரலோட்டக் கட்டுப்பாடு

ரூபியின் சக்திவாய்ந்த அம்சங்களில் கட்டுப்படுத்தும் கட்டமைப்புகள் (control structures) ஒன்று. நிரலில் அறிவுதிறத்தையும் (intelligence), தர்க்கத்தையும் (logic) இணைக்க இந்த கட்டமைப்புகள் உதவுகிறது. கட்டுப்படுத்தும் கட்டமைப்புகளை மற்றும் தர்க்க கட்டளைகனைப் பயன்படுத்தி என்ன நிரலை செயல்படுத்தவேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். ரூபி நிபந்தனை கட்டளை: ரூபியின் கட்டுப்படுத்தும் கட்டமைப்புகளில், நிபந்தனை கட்டளை (if statement) மிகவும் அடிப்படையானதாகும். நிபந்தனை கட்டளையின் அமைப்பு பின்வருமாறு, [code lang=”ruby”]… Read More »

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 14 – ரூபியில் பொருள் நோக்கு நிரலாக்கம்

ரூபி பொருள் நோக்கு பயன்பாடுகளை (object oriented applications) உருவாக்க ஏதுவான சூழலைத்தருகிறது. பொருள் நோக்கு நிரலாக்கம் பற்றிய களம் மிகவும் பெரியது. அதை பற்றிய முழுமையாக விளக்கத்தை அளிப்பது இந்த பதிவின் நோக்கமல்ல. ஆகையால் பொருள் நோக்கு நிரலாக்கத்தின் அடிப்படை கருத்துகளையும், ரூபி நிரலாக்கத்திற்கு தேவையான கருத்துகளையும் மட்டும் பார்க்கலாம். பொருள் என்றால் என்ன: பொருள் (Object) என்பது எளிமையான, சிறு செயல்பாட்டினை, தன்னுள் கொண்டதாகும். இது பலமுறை பயன்படுத்தக்கூடியதாகவும், ஒரு மென்பொருளை நிர்மாணிக்க தேவையான… Read More »

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 13 – ரூபி கணித செயற்கூறுகள்

ரூபியில் கணித கூறானது (math module) நிரலருக்கு பல செயற்கூறுகளைக் கொடுக்கிறது. இதை கொண்டு பல கணக்கீடுகள் செய்ய முடியும். கூடுதலாக இதில் இரண்டு பொதுவான மாறிலிகள் (mathematical constants) உள்ளன. ரூபி கணித மாறிலிகள்: கணித கூற்றில் உள்ள மாறிலிகளை, Constants என்ற செயற்கூற்றை பயன்படுத்தி, பட்டியலிடலாம். [code lang=”ruby”] Math.constants => ["E", "PI"] [/code] ரூபியின் தற்போதைய பதிப்பின்படி இரண்டு மாறிலிகளே வரையறுக்கப்பட்டுள்ளது. இதை :: குறியீட்டை பயன்படுத்தி அணுகலாம். [code lang=”ruby”]… Read More »

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 12 – செயற்குறிகளின் முன்னுரிமை

முந்தைய அத்தியாயத்தில் ரூபி செயற்குறிகள் மற்றும் expressions-யை பார்த்தோம். அதற்கு இணையாக செயற்குறிகளின் முன்னுரிமையை (precedence) புரிந்து கொள்ளுதல் அவசியமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட செயற்குறிகள் உள்ள expression-னை ரூபி interpreter எந்த வரிசையில் மதிப்பீடு செய்யும் என்பதை முன்னுரிமை நிர்ணயிக்கிறது. எடுத்துக்காட்டு: நாம் expressions இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக மதிப்பீடு செய்வோம். உதாரணத்திற்கு, பின்வரும் expression-னை இடது பக்கம் முதல் வலது பக்கமாக மதிப்பீடு செய்தால் விடை 300என வரும்: [code lang=”ruby”] 10 +… Read More »

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 11 – ரூபி செயற்குறிகள்

இந்த அத்தியாயத்தில் ரூபியின் expressions உருவாக்க பயன்படும் செயற்குறிகளின் (operators) அடிப்படைகளை காணலாம். ரூபியில் பல்வேறு செயற்குறிகள் உள்ளன. Assignment Operators Math Operators Comparison Operators Bitwise Operators ரூபி செயல்பாடுகள்: எந்த மதிப்பை கொண்டு கணக்கீடு செய்யபடுகிறதோ அது செயலேற்பி (operand) ஆகும். கணக்கீடு செய்ய பயன்படுவதை செயற்குறிகள் (operators) எனலாம். செயற்குறிகளின் இரு பக்கமும் செயலேற்பிகள் இருக்கும். செயல்பாட்டின் விடையை assignment operator(=)-ரை பயன்படுத்தி ஒரு மாறிக்கு வழங்க வேண்டும். Irb-யில் பெரும்பாலான… Read More »

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 10 – ரூபி array-வின் மேம்பட்ட பயன்பாடுகள்

முந்தைய அத்தியாயத்தில் ரூபி array-யின் அறிமுகம் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் விரிவாக பார்க்கலாம். ரூபி array-க்களை இணைத்தல்: ரூபியில் arrays-களை இணைக்க பல்வேறு அணுகுமுறைகளை பயன்படுத்தலாம். அதில் முதலவதாக கூட்டலை (+) பயன்படுத்தி இணைக்கலாம், [code lang=”ruby”] days1 = ["Mon", "Tue", "Wed"] days2 = ["Thu", "Fri", "Sat", "Sun"] days = days1 + days2 => ["Mon", "Tue", "Wed", "Thu", "Fri", "Sat", "Sun"] [/code] மாற்றாக concat செயற்கூற்றையும் பயன்படுத்தலாம்.… Read More »

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 9 – ரூபி arrays

ரூபி மாறிகள் பற்றிய அத்தியாயத்தில் சொன்னதுபோல தரவுகளை நினைவக இடத்தில் வைப்பது மாறிகள் (variables) எனப்படும். பல்வேறு மாறிகளை ஒருங்கிணைத்து தன்னுள் கொண்டிருக்கும் பொருளாக (object) மாற்றுவது இன்றியமையாதாகும். இதை ரூபி array-யை கொண்டு செய்யலாம். இந்த அத்தியாயத்தில் array-யின் அறிமுகம், array உருவாக்குதல் மற்றும் கையாளுதலை காணலாம். ரூபி array என்றால் என்ன?: ரூபியில் array ஒரு பொருளாகும். அதில் பல உருப்படிகள் (items) இருக்கும், அது எந்த வகையான மாறியாகவும் (string, integer, fixnum, hash,… Read More »

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 8 – ரூபி ranges

ரூபி ranges-என்பது ஒரு தரவு தொகுப்பு (dataset), அதில் ஆரம்பம் முதல் கடைசி வரை உள்ள மதிப்பான ஒரு தருக்க தொடர்ச்சியுடன் (logical sequence) இருக்கும். Range-ல் உள்ள மதிப்புகள் எண்களாகவோ (numbers), குறியீடுகளாகவோ (characters), சரம் (string) அல்லது பொருளாகவோ (object) இருக்கலாம். ரூபியின் sequence range: ரூபியில் sequence ranges-யை பயன்படுத்தி அடுத்தடுத்த மதிப்புகளை உருவாக்கலாம். அவற்றுள் ஆரம்ப மதிப்பு, இறுதி மதிப்பு மற்றும் இடையிலுள்ள எல்லை மதிப்புகள் அடங்கும். இத்தகைய range உருவாக்க இரண்டு operators இருக்கிறது.… Read More »

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 7- ரூபி செயற்கூறுகள்

ரூபி செயற்கூறுகளானது (methods) நிரலை ஒருங்கிணைக்கவும், மறுபயன்பாடு செய்யவும் வழி செய்கிறது. நீண்ட ரூபி நிரலாக எழுதுவதற்கு பதிலாக நிரலை தர்க்க ரீதியில் (logical group) ஒருங்கிணைத்து நமது நிரலில் எங்கு தேவையோ அங்கு மறுபயன்பாடு செய்து கொள்ளலாம். இதனால் ஒரே நிரலை மீண்டும் மீண்டும் எழுத வேண்டியதில்லை. செயற்கூற்றைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. இதற்கு இரண்டே விசயம் செய்தால் போதும். ஒன்று செயற்கூற்றை உருவாக்குதல் மற்றொன்று அதை அழைத்தல் ஆகும். பிற மொழிகளில் உள்ள Function என்பதையே இங்கு Method… Read More »

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 6 – ரூபி number classes மற்றும் conversions

ரூபியில் எல்லாமே object தான். இதில் ஆச்சரியப்படும் விசயம் என்னவென்றால் ரூபியில் எண்கள் கூட object தான். பெரும்பாலான நிரலாக்க மொழிகள் எண்களை primitives ஆக கருதும். ஆனால் ரூபியில் எண்கள், எழுத்துக்கள் என எல்லாமே class தான். அவற்றுகான methods ஐ நாம் இயக்கிப் பார்க்கலாம். எல்லா எண் வகைகளுக்கும் அதற்கான class ரூபியில் உள்ளது. அதிலுள்ள method-களைக்கொண்டு எண்களை கையாளமுடியும். ரூபி number classes: ரூபியில் உட்பொதிந்த (builtin ) எண்களுக்கான classes உண்டு.… Read More »