Tag Archives: tamil

எளிய தமிழில் Computer Vision 4. படத்தை எண்களாகப் பதிவு செய்தல்

படத்தை எண்களாகப் பதிவு செய்யும் (Digital image representation) மூன்று அடிப்படை வழிமுறைகளை இப்படத்தில் காணலாம். இடது பக்கம் இருப்பது வண்ணப் படம் (Color image), நடுவில் இருப்பது சாம்பல் அளவீட்டுப் படம் (Grayscale image) மற்றும் வலது பக்கம் இருப்பது கருப்பு வெள்ளை அல்லது இருமப் படம் (Black and white or binary Image). கருப்பு வெள்ளை அல்லது இருமப் படங்கள்  நாம் பொதுவழக்கில் கருப்பு வெள்ளைப் படங்கள் என்று சொல்பவை தொழில்நுட்ப ரீதியாக… Read More »

எளிய தமிழில் Computer Vision 3. படத்தைப் பதிவு செய்யும் (Image recording) வழிமுறைகள்

தமிழில் வடிவம் மற்றும் உருவம் போன்ற சொற்களை shape க்குப் பரவலாகப் பயன்படுத்துகிறோம். படம் என்ற சொல்லே image க்கு ஒப்பானது. ஆனால் படம் என்றால் ஓவியம் மற்றும் திரைப்படம் என்றும் புரியக்கூடும். ஆகவே பொருள்மயக்கம் வரக்கூடிய இடங்களில் பிம்பம் என்ற சொல்லையும் பயன்படுத்தலாம். படம் என்றால் என்ன? மிக எளிதாகச் சொல்லப்போனால் படம் என்பது முப்பரிமாண உலகத்தை ஒரு குறிப்பிட்ட கணத்தில் இரு பரிமாணங்களில் பதிவு செய்வதுதான். இந்த பதிவைச் செய்வதற்கு பலவிதமான தொழில்நுட்பங்கள் உள்ளன.… Read More »

தமிழும் ஒருங்குறியும் – இணைய உரையாடல் – ஜீலை 11 மாலை 7.30 – 8.30 IST – இசூம்

வரும் சனிக்கிழமை (11/07/2020) மாலை 7.30 – 8.30 மணிக்கு (இந்திய நேரம்) “தமிழும் ஒருங்குறியும்” என்ற தலைப்பில் ஓர் இணையவழி உரையாடல் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த கால வரலாறும், இற்றைநிலையும், எதிர்காலத்தில் செய்யவேண்டியவைகளும் பற்றி உரையாட எண்ணியுள்ளேன். இப்புலனத்தில் ஆர்வம் உள்ளோர், நேரம் இயன்றால் பங்கு கொள்ளுங்கள். கலந்து கொள்வதற்கான இணைப்பு விவரம் படத்தில் உள்ளது.

எளிய தமிழில் Computer Vision 2. தொழில்துறையில் முக்கியப் பயன்பாடுகள்

தொழில்துறையில், அதிலும் குறிப்பாக உற்பத்தியில், கணினிப் பார்வைக்கு என்ன முக்கியமான பயன்பாடுகள் உள்ளன என்று பார்ப்போம். கைமுறைத் தொகுப்பு வேலைக்கு உதவுதல் (Aiding Manual Assembly) முன்னேறியுள்ள இன்றைய தொழில்நுட்பத்தின் உதவியால் சில உற்பத்திப் பொருட்கள் தானியங்கியாகத் தொகுக்கப்படுகின்றன. எனினும் பெரும்பாலான பொருட்கள் இன்னும் கைமுறையாகவே தொகுக்கப்படுகின்றன. துல்லியமாகத் தொகுக்க வேண்டிய பொருட்களில் கணினிப் பார்வை பிழைகளைத் தடுக்க உதவும். ஒவ்வொரு செயலுக்கும் பின்னர், தொகுப்பவர் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு முன்பு, அது சரியாகவும் முழுமையாகவும் மேற்கொள்ளப்பட்டதா… Read More »

தினமொரு தமிழ் சொல்… டிவிட்டர் பாட்(Bot)

கணியம் அறக்கட்டளையின் Project Ideas-ல் Kondasamy Jayaraman என்பவரால் முன்மொழியப்பட்ட கருத்துதான், தினம் ஒரு தமிழ் சொல் – Twitter bot தமிழ் சொற்களை Twitter, Mastodon, Facebook போன்ற சமூக வலைதளங்களில் தினமும் தமிழ் சொற்களையும் உடன் அதன் பொருளையும் சேர்த்து, பதிவிடலாம் இதன் மூலம் இதுவரை நமக்கு அறிமுகமாகாத புதிய சொற்களையும், பழக்கத்திலிருந்து மற(றை)ந்த சொற்களையும் தெரியப்படுத்தும் ஒரு முயற்சி. பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பங்கள்: Python நிரலாக்க மொழி Back4App Heroku விக்சனரி-யில் இருந்து சொற்களை… Read More »

ஓப்பன்-தமிழ் வெளியீடு – வரிசை எண் 0.97

ஒப்பன்-தமிழ் வரிசை எண் v0.97 வணக்கம் தமிழ் கணிமை ஆர்வலர்களே, இன்று ஓப்பன்-தமிழ் நிரல் தொகுப்பு வரிசை எண் 0.97 வெளியீடு அறிவிக்கிறோம். இதில் புதியன, சென்ற 2019-நவம்பர் மாதம் கழித்து வந்த மேம்பாடுகளாகியன, கீழ்வருமாறு.இதனை பெற $ pip install –upgrade open-tamil==0.97 என்று கட்டளை கொடுக்கலாம். 1 புதிய மேம்பாடுகள்: மாத்திரை கணித்தல் – தமிழ் உரையில் உள்ள சொற்களின் மாத்திரை அளவை கணிக்க புதியசார்பு ‘tamil.utf8.total_maaththirai()’ என்று திரு. பரதன் தியாகலிங்கம் அவரால்… Read More »

எளிய தமிழில் Computer Vision 1. ஐம்புலன்களில் கண்களே முதன்மை!

ஐம்புலன்களில் கண்களை நாம் உயர்வாகக் கருதக்காரணம் நம் வேலைகளைச் செய்யவும், பல இடங்களுக்குச் சென்று வரவும், எழுதப் படிக்கவும் பார்வை இன்றியமையாததாக உள்ளது. மற்ற எல்லாப் புலன்களையும் விட கண்ணால் பார்க்கும் தகவல்களை செயலாக்கவும் சேமிக்கவும் நம் மூளை அதிக இடத்தை ஒதுக்குகிறது. ஆனால் அது ஒழுங்காக வேலை செய்துகொண்டிருக்கும்வரை நாம் நம் கண்களின் அருமையைப் பற்றிப் பெரும்பாலும் யோசிப்பதில்லை. ஒரு படக்கருவி மூலம் எடுத்த படத்தைக் கணினி மூலம் ஆராய்ந்து அதிலுள்ள அம்சங்களைப் பிரித்தெடுத்து அதன்படி… Read More »

எளிய தமிழில் IoT 23. திறன்மிகு மானிகள் (Smart Meters)

தொழிற்சாலைகளில் தயாரிப்பைப் பொருத்து மின்சாரம், தண்ணீர், நீராவி, எரிவாயு, அழுத்தக் காற்று, டீசல், உலை எரியெண்ணெய் (furnace oil) போன்ற பொதுப்பயன்களை (Utilities) பெரும்பாலும் குழாய்த்தொடர்  மூலம் பயன்படுத்துவார்கள். தேவையான வேலைகளுக்கு மட்டுமே தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துகிறோமா என்று எப்படித் தெரியும்? கவனமில்லாமல் தேவையற்றுத் திறந்து விடவில்லை என்று எப்படித் தெரியும்? இவற்றுக்கெல்லாம் பயனளவைக் கண்காணித்தல் (Consumption Monitoring) மிக முக்கியம். முதலீடு அதிகம் செய்யாமல் பல இடங்களில் பயனளவைக் கண்காணிக்க IoT இப்பொழுது வழி… Read More »

எளிய தமிழில் IoT 22. இடர்மிகுந்த வேலைகளில் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு

சுரங்கப் பணியாளர்களின் உயிர் காக்கும் கேனரி (canary) பறவை சுரங்கங்களில் வேலை செய்பவர்கள் கேனரி போன்ற சிறு பறவைகளைக் கூண்டில் வைத்துக் கையோடு எடுத்துச் செல்வார்களாம்.  திடீரென்று  கார்பன் மோனாக்சைடு (carbon monoxide) அல்லது மீத்தேன் (methane) போன்ற நச்சுவாயு மிகுந்தால் அந்தப் பறவை முதலில் கீச்சிடுதலை நிறுத்தி விட்டுத் துவண்டு விழும். அதைப் பார்த்தவுடன் வெளியே ஓடி வந்துவிடுவார்களாம். இவ்வாறு கேனரி அக்காலத்தில் ஆபத்தை முன்னறிவித்து உயிர் காக்கும் உணரியாக செயல்பட்டது. தொழில்நுட்ப ரீதியான கேனரி… Read More »

எளிய தமிழில் IoT 21. சீரொளி (Laser) உணரிகள்

தொழிற்சாலைகளில் உற்பத்தியின்போது கீழ்க்கண்ட அம்சங்களை அளவிட சீரொளி உணரிகளைப் பயன்படுத்தலாம்: உளது அல்லது இருப்பது (presence) இடப்பெயர்ச்சி (displacement) தூரம் (distance) இருப்பிடம் (position) தடிப்பளவு (thickness)  ஒரு பொருள் இருப்பதையும் (presence) இல்லாததையும் (absence) கண்டறிதல் குறைந்த தூரத்தில் உள்ள ஒரு பொருளைக் கண்டறியக்கூடிய அருகாமை உணரிகளைப் (inductive proximity sensors) பயன்படுத்தலாம். ஒளிமின்னழுத்த (Photoelectric) உணரிகள் ஒரு பொருள் இருப்பது அல்லது இல்லாததைக் கண்டறிய ஒளியைப் பயன்படுத்துகின்றன. ஆனால் கண்ணாடி அல்லது நெகிழி (plastic)… Read More »