Tag Archive: tamil

எளிய தமிழில் Electric Vehicles 16. வீட்டு மின்னேற்றி

வீடுகளில் அதிகபட்ச மின்னோட்டம் 15 ஆம்பியர் தரநிலை கொண்ட 3-துளை மின் சாக்கெட்டில் கிடைக்கும். வீட்டு மின்னழுத்தம் 220 வோல்ட் என்று இருப்பதால் மின்னோட்டம் 15 ஆம்பியர் என்றால் மின்னேற்றம் அதிகபட்சம் 3300 W அல்லது 3.3 kW என்று வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் மின்னேற்றம் செய்ய 8 முதல் 10 மணி நேரம்…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 15. வெப்ப மேலாண்மையகம்

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் சூட்டைத் தணிப்பது மிக முக்கியம் ஊர்தி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இழுவை மோட்டார், மின்கலம், திறன் மின்னணு (power electronics) சாதனங்கள் ஆகியவற்றில் அதிக மின்னோட்டம் இருப்பதால் சூடாகிக் கொண்டே இருக்கும். மேலும் மின்கலத்தில் மின்னேற்றம் செய்யும்போதும் அது சூடாகும். இந்த சூட்டைத் தணிக்கா விட்டால் இவை திறனுடன் வேலை…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 14. மின்கலன் மேலாண்மையகம்

மின்னூர்தியின் செயல்பாடுகள் அதன் மின்கலத்தைப் பெரிதும் நம்பியுள்ளன. ஆகவே அதைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதும் கட்டுப்பாடு செய்வதும் அவசியம். உயர் மின்னழுத்த லித்தியம் அயனி மின்கலங்களில் மின்னூர்திகள் இயங்குகின்றன. லித்தியம் அயனி மின்கலங்கள் மற்ற மின்கல வேதியியல்களுடன் ஒப்பிடும்போது அதிக ஆற்றல் அடர்த்தி கொண்டவை. ஆனால் சில வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகளில் இவை தீப்பற்றிக் கொள்ளும் அபாயம்…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 13. மோட்டார் கட்டுப்பாட்டகம்

பெட்ரோல் டீசல் கார்களிலும் பல மின்னணு கட்டுப்பாட்டகங்கள் உள்ளன. ஆகவே மின்னூர்திகளுக்குப் பிரத்தியேகமான கட்டுப்பாட்டகங்களைப் பற்றி மட்டும் இங்கு பார்ப்போம். மின்னழுத்தத்தையும், அலைவெண்ணையும் துல்லியமாகக் கட்டுப்படுத்த வேண்டும் நம் வீடுகளில் மின்தடங்கல் ஏற்பட்டால் அவசரகாலப் பயனுக்கு மின்மாற்றி (inverter) வைத்திருப்போம் அல்லவா? மின்சாரம் இருக்கும்போது மாறுமின்சாரத்தை (Alternating Current – AC) நேர்மின்சாரமாக (Direct Current…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 12. திறன் மின்னணுவியல்

வழக்கமாக சமிக்ஞைகளையும் (signals) தரவுகளையும் (data) அனுப்பவும் செயல்படுத்தவும் (processing), சேமிக்கவும்தான் நாம் மின்னணுவியல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். இந்த வேலைகளுக்கு ஆற்றல் (power) அதிகம் தேவையில்லை. கணினிகள், தொலைக்காட்சி, விளையாட்டு முனையங்கள் (game console) ஆகியவற்றின் மின்னோட்டத் தரநிலை (rating) ஒரு ஆம்பியருக்குக் (ampere) குறைவுதான்.  மின்னூர்திகளில் திறன் மின்னணுவியல் இழுவைக்குப் பெரும்பாலும் மூன்றலை மாறுமின்…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 11. மின்கலக் கூறுகளும் தொகுதிகளும்

மின்னழுத்தமும் மின்னோட்டமும் பெட்ரோல் டீசல் கார்களில் ஈய-அமில ( Lead acid) மின்கலங்களைப் பயன்படுத்துகிறோம். இவை 12 வோல்ட் மின்னழுத்தத்தில் 48 ஆம்பியர்-மணி (Ampere hour – Ah) தரநிலை கொண்டவை. அதாவது ஒரு மணி நேரத்துக்கு 48 ஆம்பியர் மின்னோட்டம் வரை தர இயலும். குளிர்காலத்தில் எஞ்சினைத் துவக்கும்போது இவற்றால் 300 முதல் 400…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 10. லித்தியம் அயனி இழுவை மின்கலம் வகைகள்

லித்தியம் அயனி மின்கலங்களிலேயே எந்த நேர்மின்முனை, எதிர்மின்முனை, மின்பகுபொருள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்துப் பல வகைகள் உள்ளன. NMC வகை லித்தியம் அயனி மின்கலங்கள் நாம் பெட்ரோல் டீசல் கார்களில் ஓட்டத் துவக்குவதற்குப் பயன்படுத்துபவை ஈய-அமில (Lead-acid) மின்கலங்கள். இவற்றில் ஈயம் நேர் மின்முனையாகவும் (anode), ஈய ஆக்சைடு எதிர் மின்முனையாகவும் (cathode), நீர்த்த…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 9. மின்கல அடிப்படைகள்

மின்னூர்திகளில் மின்சாரத்தை சேமித்து வைக்க நமக்கு ஒரு செயல்திறன் மிக்க நம்பகமான மின்கலம் தேவை. ஆகவே மின்கலங்கள் எந்த அடிப்படையில் வேலை செய்கின்றன என்று முதலில் பார்ப்போம். மின் வேதியியல் வினை (Electrochemical reaction) மின் வேதியியல் மின்கலம் என்பது வேதிவினைகளிலிருந்து மின் ஆற்றலை உருவாக்கும் ஒரு சாதனம் ஆகும். ஒரு முதன்மை (primary) மின்கலம்…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 8. மாறுமின் நிலைக்காந்த ஒத்தியங்கு மோட்டார்

தூண்டல் மோட்டாரின் (Induction Motor) அம்சங்களையும் தொடியற்ற நேர்மின் மோட்டாரின் (Brushless DC Motors – BLDC) அம்சங்களையும் மாறுமின் நிலைக்காந்த ஒத்தியங்கு மோட்டார் (AC Permanent Magnet Synchronous Motor – PMSM) ஓரளவு கொண்டது. இதன் வடிவமைப்பு தொடியற்ற நேர்மின் மோட்டார் போன்றதே. சுற்றகத்தில் (rotor) நிலைக்காந்தங்களும் நிலையகத்தில் (stator) கம்பிச்சுருள்களும் இருக்கும்….
Read more

எளிய தமிழில் Electric Vehicles 7. மாறுமின் தூண்டல் மோட்டார்

நீரேற்றி (water pump), மின்விசிறி, குளிர் சாதனங்கள், கலவைக் கருவி (mixie), மாவரைக்கும் எந்திரம் (wet grinder) போன்ற பல அன்றாட மின்சாதனங்களில் மாறுமின் தூண்டல் மோட்டாரைப் (AC induction motor) பயன்படுத்துகிறோம். இவற்றில் வீட்டில் பயன்படுத்தும் குறைந்த திறன் சாதனங்களில் பெரும்பாலும் ஒற்றையலை (single phase) மோட்டார் இருக்கும். தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் அதிக திறன்…
Read more