Tag Archives: tamil

எளிய தமிழில் Car Electronics 5. பொறிக் கட்டுப்பாட்டகம்

பழைய கார்களில் எரிகலப்பியும் (carburetor) நெரிப்பானும் (choke) ECU வருவதற்கு முன் பழைய கார்களில் எரிகலப்பி என்ற சாதனத்தைப் பயன்படுத்தினோம். இது பெட்ரோல் கார்களில் பொறிக்குள் நுழையும் காற்றையும் எரிபொருளையும் கலக்கவும் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது. காற்று-எரிபொருள் கலவை, பற்றவைப்பு நேரம் (ignition timing) மற்றும் செயலற்ற வேகம் (idle speed) போன்றவை இயந்திர (mechanical) வழிமுறையில் கட்டுப்படுத்தப்பட்டன.  பெட்ரோல் திரவமாக உட்செலுத்தப்படுவதால் அது எரியும் முன் ஆவியாக வேண்டும். சூடான பொறியில் இது பிரச்சினையில்லை. ஆனால் குளிர்ந்த… Read More »

எளிய தமிழில் Car Electronics 4. ஊர்தி இயக்கிகள் தொழில்நுட்பம்

ஊர்தி இயக்கிகள் (actuators) எரிபொருளைக் கட்டுப்படுத்துவது முதல் காற்றுக் குளிர்விப்பு அமைப்பில் காற்றோட்டத்தை இயக்குவது மற்றும் திறன் இருக்கைகளை இயக்குவது வரை பல்வேறு செயல்திறன்களையும் பயணிகளின் வசதிக்கான வேலைகளையும் செய்கின்றன. சில நேரங்களில் நீங்கள் இயக்கிகளைக் கைமுறையாக இயக்கலாம். ஆனால் பெரும்பாலும் கணினிகள் தேவைக்கேற்ப முடிவெடுத்து இவற்றை இயக்குகின்றன. எடுத்துக்காட்டாக, பழைய எரி கலப்பி (carburetor) கார்களில் நீங்கள் முடுக்கியை (accelerator) மிதிக்கும் போது, அது நேரடியாக ஊசிவாய் வாயிலைத் (throttle valve) திறக்கும். இதனால் அதிகக்… Read More »

எளிய தமிழில் Car Electronics 3. ஊர்தி உணரிகள் தொழில்நுட்பம்

நாம் ஊர்தியை ஓட்டிச் செல்லும் போது எதிர்பாராத விதமாக ஒரு மாடு குறுக்கே ஓடி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். நம் கண் அதைப் பார்த்து, மூளைக்குச் செய்தியை அனுப்பி, மூளை அதை ஆபத்து என்று அறிந்து நம் கால்களுக்கு “பிரேக்கை அழுத்து” என்று கட்டளை அனுப்பி நிறுத்துவதற்குள் சிறிது நேரம் தாமதமாகிவிடும். நம் கண்கள் அதைப் பார்த்தவுடன், மூளையின் தலையீடு இல்லாமலேயே, நம் கால்கள் பிரேக்கை அழுத்திவிடும். இதைத்தான் அனிச்சைச் செயல் (reflex action) என்று… Read More »

எளிய தமிழில் Car Electronics 2. மின்னணுக் கட்டுப்பாட்டகம்

ஊர்திகளில் மின்னணுக் கட்டுப்பாட்டகம் (Electronic Control Unit – ECU) முதன் முதலில் ஏன், எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்று விவரமாகப் பார்ப்போம். இதை மின்னணுக் கட்டுப்பாட்டுக் கூறு (Electronic Control Module – ECM) என்றும் சொல்கிறார்கள். இதன் மூலம் நாம் இவற்றின் தேவையையும், திறனையும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். பொறிக்குள் பெட்ரோல் காற்றுக் கலவையைத் தேவையான விகிதத்தில் அனுப்பவேண்டும் பொறிக்குள் (engine) எரிதலுக்கு பெட்ரோலும் காற்றிலுள்ள ஆக்ஸிஜனும் தேவை. ஆனால் இந்தக் கலவையைச் சரியான… Read More »

எளிய தமிழில் Car Electronics 1. உயர் நிலைக் கண்ணோட்டம்

தானுந்து மின்னணுவியல் (Automotive Electronics) இரு சக்கர ஊர்திகள், ஆட்டோ போன்ற மூன்று சக்கர ஊர்திகள் மற்றும் உழவு இயந்திரங்களின் (tractors) உற்பத்தி எண்ணிக்கையில் உலகச் சந்தையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பயணிகள் ஊர்திகளிலும், பேருந்து (bus), சரக்குந்து (truck/lorry) போன்ற வணிக ஊர்திகளிலும் நான்காம் இடத்தில் இருந்தபோதிலும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியால் இவையும் வேகமாக வளர்ந்து வருகின்றன. மேலும் ஊர்திகள் தயாரிப்பின் மொத்தச் செலவில் சுமார் 1 % இருந்த மின்னணு சாதனங்கள் சில ஊர்திகளில்… Read More »

எளிய தமிழில் 3D Printing 24. உற்பத்தியின் தர உறுதிதான் பெரிய சவால்

வாகனத்துறை, கட்டுமானம், மருத்துவம் மற்றும் விண்வெளி போன்ற மிகவும் இக்கட்டு நிறைந்த பயன்பாடுகளுக்கு முப்பரிமாண அச்சிடல் பயன்படுத்தப்படுகிறது என்று பார்த்தோம். பாகத்தின் தரம் குறைவாக இருந்தால் எந்தத் துறையிலும் பிரச்சினைதான். ஆனால் இம்மாதிரி மிகவும் இக்கட்டு நிறைந்த துறைகளில் ஒரு பாகம் தரக்குறைவால் பழுதடைந்தால் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படக்கூடும். ஏறக்குறைய 50% நிறுவனங்கள் தங்கள் 3D அச்சுப்பொறிகளைப் பயன்படுத்துவதில் தரக் கட்டுப்பாடுதான் அவர்களின் முக்கிய சவால் என்று கூறுகின்றன. 3டி அச்சிடலில் உள்ள தர பிரச்சினைகளின் வகைகள்… Read More »

எளிய தமிழில் 3D Printing 23. விண்வெளித் துறைப் பயன்பாடுகள்

விண்வெளித் துறையில் 3D அச்சிடலுக்குப் பல பயன்பாடுகள் உள்ளன. செயற்கைக் கோள்களின் எடையைக் குறைக்க அவற்றின் பாகங்கள் 3D அச்சு முறையில் தயாரிக்கப்படுகின்றன. பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் (International Space Station) பதிலி பாகங்கள் 3D அச்சு முறையில் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் நாசா நிறுவனம் நிலா மற்றும் செவ்வாய் கோளில் தேவைப்படும் பொருட்களை அங்கேயே தயாரிக்கக்கூடிய 3D அச்சு எந்திரங்களை உருவாக்கி வருகிறது. இவற்றில் ஒரு எடுத்துக்காட்டாக ஏவூர்தி (rocket) 3D அச்சிடலைப் பற்றி இங்கு பார்ப்போம்.… Read More »

எளிய தமிழில் 3D Printing 22. மூக்குக் கண்ணாடிகளும் அவற்றின் சட்டங்களும்

மூக்குக் கண்ணாடிகளை அவரவருக்குப் பொருந்துமாறு தனிப்பயனாக்கல் அவசியம் பேரளவு உற்பத்தி செலவைக் குறைக்கும், ஆனால் தனிப்பயனாக்குவது கடினம் மற்றும் அதிக செலவாகும். மூக்குக் கண்ணாடிகள் மற்றும் அவற்றின் சட்டங்கள் தயாரிக்கும் தொழில்துறையில் அனைத்து விதமான மற்றும் அளவிலான முக வடிவங்களின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஆகவே மூக்குக் கண்ணாடிகள் மற்றும் அவற்றின் சட்டங்களை ஒவ்வொருவருக்கும் ஏற்ற மாதிரி தனிப்பயனாக்க வேண்டும். 3D அச்சிடலின் வரம்பற்ற திறனின் மூலம் இத்துறை முற்றிலும் பயனடைகிறது. 3D அச்சிடலின் மூலம்… Read More »

எளிய தமிழில் 3D Printing 21. உதிரி மற்றும் பதிலி பாகங்கள்

பல சந்தர்ப்பங்களில் பதிலி பாகம் (Replacement Part) மட்டும் தனியாகக் கிடைப்பதில்லை தயாரிப்புகள் அல்லது சாதனங்களின் பாகங்களை இழந்தாலோ அல்லது உடைந்தாலோ அதன் விளைவுகள் சிரமமானவை முதல் நாசம் விளைக்கும் வரை இருக்கலாம். எடுத்துக்காட்டாக காரின் பின் விளக்கை மூடியுள்ள நெகிழி பாகம் உடைந்துவிட்டால் அதை மட்டும் மாற்ற இயலாது. முழு பின் விளக்குத் தொகுப்பையே மாற்ற வேண்டுமென்று சொல்லி செலவு மிக அதிகமாகிவிடும். ஏனெனில் தயாரிப்பு நிறுவனம் அந்தப் பதிலி பாகத்தை மட்டும் தனியாக விற்பதில்லை,… Read More »

எளிய தமிழில் 3D Printing 20. கட்டுமானத் துறைப் பயன்பாடுகள்

3D அச்சிடல் கட்டடக்கலையில் சிறிய அளவு மாதிரிகளை உருவாக்கப் பயன்படுகிறது கட்டட உரிமையாளர்களுக்கு கட்டடக்கலை நிபுணர்கள் சிக்கலான வடிவமைப்புகளைக் காட்டி ஒப்புதல் பெறுவதற்கு சிறிய அளவு மாதிரிகள் மிகவும் பயனுள்ளவை. இது காணொளியைப் பார்ப்பதைவிட தத்ரூபமாக யாவருக்கும் புரியும். இத்தகைய சிறிய அளவு மாதிரிகளைக் குறைந்த செலவிலும் துரிதமாகவும் 3D அச்சிடல் மூலம் உருவாக்க இயலும். கட்டுமானத் துறையில் கற்காரை (concrete) பிதுக்கல்   இது கட்டடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்கான வேகமான மற்றும் குறைந்த… Read More »