Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

விக்கிப்பீடியா_மங்கைகள் – 5 – பூங்கோதை

#விக்கிப்பீடியா_மங்கைகள் – 5 விக்கிப்பீடியா பல இலட்சக்கணக்கான தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் ஓர் தகவல் களஞ்சியம்.. அதில் சிறப்பான செயல்கள் செய்து வரும் சில பெண் விக்கியர்களைப் பற்றிய அறிமுகம் இது. ஆர்வமும் திறமையும் இருந்தாலும் எனக்கு எங்கே நேரமிருக்கிறது? என வீட்டிற்குள்ளேயே ஒடுங்கிப்போய்விடும் பெண்கள் பலருக்கும் இது ஓர் ஊக்கமாக அமையலாம். பூங்கோதை கோயம்புத்தூரைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற கணித ஆசிரியர். ஓய்வு பெற்ற பின் என்ன செய்யலாம்? என யோசித்தவருக்கு தனது… Read More »

Machine learning – கற்குங்கருவியியல். எண்ணவோட்டங்கள்

கற்குங்கருவியியல் . இது குறித்த ஒரு ஆவணம்[0] சொல்லாய்வுக் குழுவில் இருக்கிறது. இக்கட்டுரை என்னுடைய சொல்லாக்கச் சிந்தனைகள் எப்படி ஓடுகிறது என்பதை ஆவணபடுத்திவைக்கும் ஒரு முயற்சி. machine learning – வெகுநாட்களாக இதற்கொரு சொல் புனைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆங்கில பொருளும் சற்று குழப்பமாக இருந்ததால் ஆங்கில புலமைவாய்தோர் புழங்கும் மன்றமொன்றிலும்[2] வினாவெழுப்பியிருந்தேன். அதில் அவர்கள் கொடுத்த விடைகளின் துணுக்குகள் சில கீழே. “…machines that learn…” “… it’s a type of… Read More »

விக்கிப்பீடியா_மங்கைகள் – 4 – கலையரசி குகராஜ்

விக்கிப்பீடியா பல இலட்சக்கணக்கான தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் ஓர் தகவல் களஞ்சியம்.. அதில் சிறப்பான செயல்கள் செய்து வரும் சில பெண் விக்கியர்களைப் பற்றிய அறிமுகம் இது. ஆர்வமும் திறமையும் இருந்தாலும் எனக்கு எங்கே நேரமிருக்கிறது? என வீட்டிற்குள்ளேயே ஒடுங்கிப்போய்விடும் பெண்கள் பலருக்கும் இது ஓர் ஊக்கமாக அமையலாம். கலையரசி குகராஜ் கலையரசி, நோர்வேயில் வாழும் ஈழத் தமிழர். பேர்கன் மருத்துவமனையில் நோயியல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றுகிறார். 2007 திசம்பர் மாதம் முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து… Read More »

விக்கிப்பீடியா_மங்கைகள் 3 – சு காந்திமதி

விக்கிப்பீடியா பல இலட்சக்கணக்கான தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் ஓர் தகவல் களஞ்சியம்.. அதில் சிறப்பான செயல்கள் செய்து வரும் சில பெண் விக்கியர்களைப் பற்றிய அறிமுகம் இது. ஆர்வமும் திறமையும் இருந்தும், எனக்கு எங்கே நேரமிருக்கிறது? என வீட்டிற்குள்ளேயே ஒடுங்கிப்போய்விடும் பெண்களுக்கு இது ஓர் ஊக்கமாக இருக்கலாம் சு காந்திமதி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஈவேரா நாகம்மை அரசு மகளிர் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் காந்திமதி 30 வருட ஆசிரியர் பணி அனுபவம்… Read More »

விக்கிப்பீடியா_மங்கைகள் 2 – திவ்யா குணசேகரன்

விக்கிப்பீடியா பல இலட்சக்கணக்கான தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் ஓர் தகவல் களஞ்சியம்.. அதில் சிறப்பான செயல்கள் செய்து வரும் சில பெண் விக்கியர்களைப் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகிறேன். எனக்கு எங்க நேரமிருக்கு? குடும்பத்தைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கு, என வீட்டிற்குள்ளேயே ஒடுங்கிப்போய்விடும் பெண்களுக்கு இது ஓர் ஊக்கமாக இருக்கலாம். 2. திவ்யா குணசேகரன். காஞ்சிபுரத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர். தமிழ்முதுகலைப்பட்டம் பெற்ற திவ்யா கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ் இளநிலை ஆய்வாளர் கல்வி… Read More »

விக்கிப்பீடியா மங்கைகள் 1

விக்கிப்பீடியா_மங்கைகள் 1 – பாத்திமா ரினோசா விக்கிப்பீடியா பல இலட்சக்கணக்கான தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் ஓர் தகவல் களஞ்சியம்.. அதில் சிறப்பான செயல்கள் செய்து வரும் சில பெண் விக்கியர்களைப் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகிறேன். எனக்கு எங்க நேரமிருக்கு? குடும்பத்தைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கு, என வீட்டிற்குள்ளேயே ஒடுங்கிப்போய்விடும் பெண்களுக்கு இது ஓர் ஊக்கமாக இருக்கலாம். 1. பாத்திமா ரினோசா பாத்திமா ஷைலா என்ற இயற்பெயர் கொண்ட இலங்கையின் நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த தமிழ்ப்பெண்.… Read More »

மதுரை மீனாட்சி கல்லூரியில் விக்கி தொடர் தொகுப்பு மார்ச் 7 2020

மகளிர் தினத்தையொட்டி மதுரை மீனாட்சி கல்லூரியில் நாளை மாவட்ட அளவிலான தமிழ் விக்கிப்பீடியா தொடர் தொகுப்பு நடைபெறுகிறது. அவரவர் கல்லூரிக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தகவல் அறியாத ஆனால் ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் தாங்களாகவே முன்பதிவு செய்துகொண்டும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம். forms.gle/LEmD97fgLHCi26J29

தமிழ் கையெழுத்து கொடைத் திட்டம்

தமிழ் கையெழுத்து கொடைத் திட்டம் கையெழுத்து உணரி உருவாக்க உதவுங்கள். வணக்கம். தமிழில் எழுத்துணரி (படங்களை எழுத்துகளாக மாற்றுதல்) ஒரு நீண்ட கால கனவு. Tesseract என்ற இலவச, கட்டற்ற மென்பொருள் (Free/Open Source Software) இதை சாத்தியமாக்கியுள்ளது. இதன் சமீபத்திய பதிப்பான Tesseract Version 4 தமிழுக்கு சிறந்த முறையில் எழுத்துணரி பணியைச் செய்கிறது. இந்த ஆய்வுகளின் அடுத்த கட்டமாக கையெழுத்தை உணர்ந்து யுனிகோடு எழுத்தாக மாற்றும் பெரும் கனவு உள்ளது. இது சாத்தியப்பட்டு விட்டால்,… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி, சென்னை – பிப் 24 2020

மூலம் – ta.wikisource.org/s/96iw இடம்: ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி, தி. நகர், சென்னை. நாள்: 24 பெப்ரவரி 2020 நேரம்: 10 மணி முதல் 4 மணி வரை. பயிற்சிப் பட்டறை குறிப்புகள்: etherpad.wikimedia.org/p/taws-ssss-2020 பயிற்சிப் பெற்றவர்கள்: கல்லூரியில் படிக்கும் இளங்கலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள். பயிற்றுநர்கள் : திவ்யா மற்றும் Balajijagadesh தொடர்பு மற்றும் ஏற்பாடு: tshrinivasan பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட காட்சிப்படங்களின் தொகுப்பு : விக்கிமூலம்… Read More »

கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை – ஆவணப்படம்

‘கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை’ என்ற இந்த ஆவணப் படத்தை அதன் இயக்குனர் வெ.பி. வினோத் குமார் அவர்கள் யாவரும் எங்கும் இலவசமாகப் பகிரும் வகையில் Creative Commons Attribution license உரிமையில் வெளியிட்டுள்ளார். அவருக்கும், இதற்கான முன்னெடுப்புகளைச் செய்த நண்பர் அன்வர் அவர்களுக்கும் பல்லாயிரம் நன்றிகள். காண்க – github.com/KaniyamFoundation/CreativeCommonsAnnouncements/issues/39