Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

தமிழ் IRC – மே 2, 2020 சந்திப்பு – 8-9 PM IST – #tamilirc – irc.freenode.net

தமிழ் IRC – மே 2, 2020 அன்று இந்திய நேரம் மாலை 8 – 9  (8 PM IST) நடைபெறும். கணிணித் தமிழ் தொடர்பான உங்கள் பங்களிப்பு விவரங்கள், புது முயற்சிகள், திட்டங்கள், புது திட்ட வேண்டுகோள்கள் ஆகியன பற்றி உரையாடலாம். அனைவரும் வாருங்கள். webchat.freenode.net/ க்கு இணைய உலாவியில் செல்லுங்கள். Nickname என்பதில் உங்கள் உண்மையான பெயர் அல்லது வலையில் நீங்கள் பயன்படுத்தி வரும் பெயரைத் தாருங்கள். Channels என்பதில் #tamilirc என்று… Read More »

Category: irc

விக்கிமூலம் : பழைய தமிழ் புத்தகங்களுக்கு புது வடிவம் – தமிழ் ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

  தற்போது ஊரடங்கு நீடித்துள்ள நிலையில், இந்த ஊரடங்கு காலத்தை எப்படி கழிக்கப் போகிறோம் என்பதே பெரும்பாலானோருக்கு கவலையாக உள்ளது. இந்த ஊரடங்கில் சமூக வலைதளங்கள்/தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அதுவும் எரிச்சலாகிவிடுகிறது. ஒரு சிலர் இந்த ஊரடங்கை பயனுள்ள வகையில் செலவிட்டாலும், பலருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சரி. என்ன செய்யலாம் ? தங்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளதா ? அப்படி இல்லையென்றாலும் இக்காலகட்டத்தில் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.… Read More »

FOSSWeeks’20 – வாரம் 2: தமிழ் விக்கிப்பீடியா வெபினார்

இந்த வாரம் #FOSSWeeks வெபினார் தொடரில், தமிழ் விக்கிப்பீடியா  திட்டத்திற்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.   #FOSSWeeks என்றால் என்ன ?   #FOSSWeeks என்பது மொசில்லா தமிழ்நாடு அமைப்பினால் தொடங்கப்பட்ட வெபினார் தொடர் ஆகும். இது FOSS (கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் ) பங்களிப்பை  அதிகரிக்கும் முயற்சியாகும். இந்த வெபினார் தொடரில் நாங்கள் அனுபவம் மிக்க மொசில்லா பங்களிப்பாளர்கள் மற்றும் FOSS பங்களிப்பாளர்களை கொண்டு உங்களுக்கு பல்வேறு திறந்த… Read More »

பல Git கணக்குளை ஒரே கணினியிலிருந்து இயக்குதல் ! 

அன்புடையீர் வணக்கம் இந்த பதிவில் நாம் நிரலாக்கர்களின் இரண்டு பொதுவான செயல்பாடுகளை தானியங்க வைப்போம். நம்மிடம் பல Git கணக்குகள் இருக்கும் நிலையில் ஒரே கணினியில் இருந்து, 1. பயனர்பெயர், கடவுச்சொல் உள்ளீடு தானகவே நடத்தும்படி இயக்குவது. 2. பயனர் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி repository கு ஏற்றவாறு அமைத்தல் நிரலாக்கர்கள் தன்னுடைய தினம்தோறும் கடமையில் Version Control System யில், அன்றைய தினத்தின் நிரல் புதுப்பிப்புகளை புதுப்பிப்பார்கள். Github , Gitlab , Bitbucket… Read More »

எளிய தமிழில் Deep Learning – தொழில்நுட்பம் – து. நித்யா

நூல் : எளிய தமிழில் Deep Learning ஆசிரியர் : து. நித்யா மின்னஞ்சல் : nithyadurai87@gmail.com அட்டைப்படம் : லெனின் குருசாமி guruleninn@gmail.com மின்னூலாக்கம் : த.சீனிவாசன் மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : CC-BY-SA உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   [wpfilebase tag=file id=62/]

வீட்டில் இருந்து வேலை செய்தல் – சில குறிப்புகள்

தற்போது உள்ள கொரோனா காலத்தில், உலகெங்கும் உள்ள பல்வேறு நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யக் கோருகின்றன. இது மிகவும் நல்ல செய்தி தான். அலுவலகத்துக்குப் போய் மட்டுமே வேலை செய்தோருக்கு இது மிகவும் புதிதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். இந்த மகிழ்ச்சி நிலைக்க, கீழே உள்ளவற்றை பின்பற்றுக. எல்லா வேலைகளுமே வீட்டில் இருந்து செய்ய உகந்தவை அல்ல. நிரலாக்கம் தொடர்பான பணிகள், இணையம் வழியே தொடர்பு கொள்ளக்கூடிய பணிகள் என வெகு சில பணிகளே… Read More »

விக்கிப்பீடியா_மங்கைகள் – 5 – பூங்கோதை

#விக்கிப்பீடியா_மங்கைகள் – 5 விக்கிப்பீடியா பல இலட்சக்கணக்கான தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் ஓர் தகவல் களஞ்சியம்.. அதில் சிறப்பான செயல்கள் செய்து வரும் சில பெண் விக்கியர்களைப் பற்றிய அறிமுகம் இது. ஆர்வமும் திறமையும் இருந்தாலும் எனக்கு எங்கே நேரமிருக்கிறது? என வீட்டிற்குள்ளேயே ஒடுங்கிப்போய்விடும் பெண்கள் பலருக்கும் இது ஓர் ஊக்கமாக அமையலாம். பூங்கோதை கோயம்புத்தூரைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற கணித ஆசிரியர். ஓய்வு பெற்ற பின் என்ன செய்யலாம்? என யோசித்தவருக்கு தனது… Read More »

Machine learning – கற்குங்கருவியியல். எண்ணவோட்டங்கள்

கற்குங்கருவியியல் . இது குறித்த ஒரு ஆவணம்[0] சொல்லாய்வுக் குழுவில் இருக்கிறது. இக்கட்டுரை என்னுடைய சொல்லாக்கச் சிந்தனைகள் எப்படி ஓடுகிறது என்பதை ஆவணபடுத்திவைக்கும் ஒரு முயற்சி. machine learning – வெகுநாட்களாக இதற்கொரு சொல் புனைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆங்கில பொருளும் சற்று குழப்பமாக இருந்ததால் ஆங்கில புலமைவாய்தோர் புழங்கும் மன்றமொன்றிலும்[2] வினாவெழுப்பியிருந்தேன். அதில் அவர்கள் கொடுத்த விடைகளின் துணுக்குகள் சில கீழே. “…machines that learn…” “… it’s a type of… Read More »

விக்கிப்பீடியா_மங்கைகள் – 4 – கலையரசி குகராஜ்

விக்கிப்பீடியா பல இலட்சக்கணக்கான தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் ஓர் தகவல் களஞ்சியம்.. அதில் சிறப்பான செயல்கள் செய்து வரும் சில பெண் விக்கியர்களைப் பற்றிய அறிமுகம் இது. ஆர்வமும் திறமையும் இருந்தாலும் எனக்கு எங்கே நேரமிருக்கிறது? என வீட்டிற்குள்ளேயே ஒடுங்கிப்போய்விடும் பெண்கள் பலருக்கும் இது ஓர் ஊக்கமாக அமையலாம். கலையரசி குகராஜ் கலையரசி, நோர்வேயில் வாழும் ஈழத் தமிழர். பேர்கன் மருத்துவமனையில் நோயியல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றுகிறார். 2007 திசம்பர் மாதம் முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து… Read More »

விக்கிப்பீடியா_மங்கைகள் 3 – சு காந்திமதி

விக்கிப்பீடியா பல இலட்சக்கணக்கான தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் ஓர் தகவல் களஞ்சியம்.. அதில் சிறப்பான செயல்கள் செய்து வரும் சில பெண் விக்கியர்களைப் பற்றிய அறிமுகம் இது. ஆர்வமும் திறமையும் இருந்தும், எனக்கு எங்கே நேரமிருக்கிறது? என வீட்டிற்குள்ளேயே ஒடுங்கிப்போய்விடும் பெண்களுக்கு இது ஓர் ஊக்கமாக இருக்கலாம் சு காந்திமதி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஈவேரா நாகம்மை அரசு மகளிர் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் காந்திமதி 30 வருட ஆசிரியர் பணி அனுபவம்… Read More »