Author Archives: கலாராணி

அமேசான் இணையச்சேவைகள் – அணுக்கக் கட்டுப்பாட்டுப் பட்டியல்கள்

பாதுகாப்புக்குழுக்கள் என்பவை மேகக்கணினிகளின் தீச்சுவர்களாகச் (Firewalls) செயல்படுகின்றன என முந்தைய பதிவில் அறிந்தோம். அதைப்போலவே, ஒரு துணைஇணையத்தின் தீச்சுவராக, அணுக்கக் கட்டுப்பாட்டுப் பட்டியல்கள் (Access Control Lists) செயல்படுகின்றன. மேகக்கணினிகளைப் பொருத்தவரையில், பாதுகாப்புக்குழுக்களும், அணுக்கக் கட்டுப்பாட்டுப் பட்டியல்களும் இணைந்து இரண்டடுக்கு பாதுகாப்பினை வழங்குகிறது. தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில், அணுக்கக் கட்டுப்பாட்டுப் பட்டியல்கள், துணைஇணையத்தின் உள்வருகிற மற்றும் வெளிச்செல்கிற இணையப் போக்குவரத்தினைக் கட்டுப்படுத்துகிறது. இவ்விதிகளை அதிநுணுக்கமாகக் கட்டமைக்கமுடியும். அதாவது, குறிப்பிட்ட நெறிமுறையைப் (Protocol) பயன்படுத்தி, குறிப்பிட்டத் துறை… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – மெய்நிகர் தனிப்பயன் மேகக்குழுமம் – பகுதி 2

நுழைவாயில்கள் பெரும்பாலான சமயங்களில், நமது மேகக்கணினிகளுக்கு இணையத்தொடர்பு தேவைப்படுகிறது. இது உலகளாவிய இணைய இணைப்பாகவோ (Internet), பயனரின் மெய்நிகர் தனிப்பயன் இணைய இணைப்பாகவோ (Virtual Private Network – VPN) இருக்கலாம். இவற்றில் எந்தவகை இணையத்தொடர்பாக இருந்தாலும், அவை, நுழைவாயில்கள் வழியாகவே நடைபெற முடியும். தன்வழியே நிகழும் இணையப்பரிமாற்றங்களுக்கான, இணையமுகவரிகளைப் கண்டறிவது (Network Address Translation – NAT) இவற்றின் முக்கிய வேலையாகும். துணைஇணையத்திற்கும் நுழைவாயிலுக்குமான தொடர்பைப் பொருத்து, துணைஇணையங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். பொதுத் துணைஇணையம்… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – மெய்நிகர் தனிப்பயன் மேகக்குழுமம் – VPC

EC2, S3 ஆகியவற்றிலிருந்தே, பலர் அமேசான் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். இணையச்சேவையகங்கள் (Web servers), பொருள் சேமிப்பகம் (Object Storage) குறித்த அடிப்படைகள் தெரிந்திருந்தாலே, இவற்றைப் புரிந்துகொள்வது எளிதாகிறது. இதற்கடுத்த படியாக, நமது மேகக்கணினிகளின் பாதுகாப்பு பற்றி பார்க்கும்போது, அடையாள அணுக்க மேலாண்மை (IAM), பாதுகாப்புக்குழுக்கள் (Security Groups), மெய்நிகர் தனிப்பயன் குழுமங்கள் (Virtual Private Cloud – VPC) ஆகியன தென்படுகின்றன. இவற்றில் அடையாள அணுக்க மேலாண்மையையும் (IAM), பாதுகாப்புக்குழுக்களையும் (Security Groups) முந்தைய பதிவுகளில்… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – நிரல்வழிச் செயல்முறை – பகுதி 3

கோப்பினை அழித்தல் கடந்த பதிவுகளில் ஒரு கொள்கலனை உருவாக்கி, அதில் கோப்பினைப் பதிவேற்றி, சரிபார்த்தோம். இப்பதிவில், கொள்கலனிலிருந்து பொருள்களை நீக்குவதற்கு DeleteObjectRequest என்ற கோரிக்கையைப் பயன்படுத்தலாம். [code lang=”csharp”] public async Task<bool> DeleteKey(string bucketName, string key) { using (var client = ClientFactory.CreateS3Client()) { var request = new DeleteObjectRequest { BucketName = bucketName, Key = key }; try { var result = await client.DeleteObjectAsync(request);… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – நிரல்வழிச் செயல்முறை – பகுதி 2

கோப்பினைப் பதிவேற்றுதல் சென்ற பதிவில், நிரல்வழியாக ஒரு கொள்கலனை உருவாக்கினோம். ஆனால் அக்கொள்கலன் இப்போது காலியாக இருக்கிறது. அதில் ஒரு கோப்பினைப் பதிவேற்றலாம். இதற்காக, PutObjectRequest என்ற கோரிக்கையைத் தயாரிக்கவேண்டும். இக்கோரிக்கைக்குத் தேவையான அடிப்படை விசயங்கள் கீழே: BucketName – கொள்கலனின் பெயர். Key – நாம் பதிவேற்றும் பொருளின் அணுக்கத்திறப்பு InputStream – பதிவேற்றுகிற கோப்பு ContentType – உள்ளடக்க வகை CannedACL – இப்பொருளின் அணுக்கக்கட்டுப்பாட்டுப் பட்டியல் S3க்கான கிளையன்ட்டை உருவாக்குவதற்கான நிரல், நம்மிடம்… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – நிரல்வழிச் செயல்முறை

இதுவரையில் நாம் அடையாள அணுக்க மேலாண்மை பற்றியும், எளிய சேமிப்பகச்சேவை பற்றியும் அறிந்திருக்கிறோம். முந்தைய பதிவுகளில் உருவாக்கிய பயனர்களின் அணுக்கத்திறப்புகளைக் கொண்டு, S3இல் பின்வருவனவற்றைச் செய்துபார்க்கலாம். ஒரு கொள்கலனை உருவாக்குதல் அக்கொள்கலனில் ஒரு கோப்பினைப் பதிவேற்றுதல் நாம் பதிவேற்றிய கோப்பு, சரியான கொள்கலனில் உள்ளதா என சரிபார்த்தல் பதிவேற்றிய கோப்பினை அழித்தல் முதற்படியில் உருவாக்கிய கொள்கலனை அழித்தல் அடிப்படை கட்டமைப்பு இச்செயல்முறைக்காக, நாம் C# மொழியைப் பயன்படுத்தவிருக்கிறோம். இணையச்சேவைகளை நிரல்வழியே இயக்குவதற்கு ஏதுவாக, பலமொழிகளுக்கான மென்பொருளாக்கக் கொட்டான்களை… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – S3 – எளிய சேமிப்பகச்சேவை

நிரல்வழிச் செயல்முறைக்கு முன்னதாக, எளிய சேமிப்பகச்சேவையின் (S3) அடிப்படையை தெரிந்துகொள்வது அவசியம். எனவே இப்பதிவில் S3 பற்றி தெரிந்துகொண்டு, அடுத்தபதிவில் செயல்முறையைப் பார்க்கலாம். அமேசானில் பெருமளவு பயன்படுத்தப்படும் சேவைகளில் எளிய சேமிப்பகச்சேவையும் ஒன்று. இதன் அடிப்படைப் பயன்பாடு கோப்புகளைச் சேமித்துவைப்பதாக்கும். S3இல் நமக்கென கொள்கலன்களை (Buckets) உருவாக்கிக்கொண்டபிறகு, அவற்றில், கோப்புகளைச் சேமித்துவைக்கலாம். இவற்றை கோப்பகங்களில் ஒருங்கிணைத்து வைக்கவும் முடியும். மேலும், ஒவ்வொரு கோப்பைப் பற்றியும், கோப்பகத்தைப் பற்றியும், சில தகவல்களையும் அவற்றோடு சேர்த்து சேமிக்கலாம். ஒரு வலைத்தளத்தில்,… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – அடையாள அணுக்க மேலாண்மை – பொறுப்புகள்

பொறுப்புகள்: அமேசானின் இணையச்சேவைகள் ஒன்றோடொன்று பேசிக்கொள்வதற்கென நிரல்வழி இடைமுகங்கள் (AWS API) உள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு மேகக்கணினியிலிருந்து S3யில் ஒரு கோப்பினைச் சேமிப்பதற்கும், எளிய அறிவுப்புச்சேவையின் (Simple Notification Service – SNS) மூலம் ஒரு அறிவிப்பை வெளியிடுவதற்கும், எளிய வரிசைச்சேவையின் (Simple Queue Service – SQS) மூலம் அதைப் பெற்றுக்கொள்வதற்கும் இவ்விடைமுகங்கள் பயன்படுகின்றன. இவ்வாறாக அமேசானின் இணையச்சேவைகளுக்குள்ளே நிகழும் தரவுப் பரிமாற்றங்கள், சரியான பொறுப்புடைய சேவையிலிருந்துதான் தொடங்குகிறதா என்பதை IAM பொறுப்புகள் (roles) மூலம்… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – அடையாள அணுக்க மேலாண்மை – பகுதி 2

குழுக்களை உருவாக்கல்: பயனர்களை உருவாக்கும்போதே, அவர்களை குழுக்களில் சேர்ப்பதற்கான திரையும் காட்டப்படுகிறது. இதன்மூலமாக ஏற்கனவேயுள்ள குழுக்களிலோ, அல்லது புதிய குழுவை உருவாக்கியோ, பயனர்களைச் சேர்க்கமுடியும். தற்சமயம் நம்மிடம் எந்தவொரு குழுவும் இல்லை. எனவே புதியதொரு குழுவை உருவாக்கலாம். குழுவின் பெயரையும், அதற்கான அணுக்கக்கொள்கைகளையும் தீர்மானித்தபின், குழுவை உருவாக்குவது மிகஎளிதான காரியம். குழுவிற்கான பெயரும், அதன் உறுப்பினர்களுக்கான எல்லைகளை வர்ணிக்கும் கொள்கை ஆவணங்களும் இருந்தால் ஒரு குழுவினை உருவாக்கிடலாம். ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைக்கேற்ப குழுக்களை உருவாக்கிக்கொள்ளலாம். எடுத்துகாட்டாக, நிரல்… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – அடையாள அணுக்க மேலாண்மை

ஓர் அடுக்குமாடிக்குடியிருப்பின் பராமரிப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது என சற்று சிந்தித்துப்பார்க்கலாம். அநேகமாக எல்லா அடுக்குமாடிக்குடியிருப்புகளிலும் பாதுகாப்புப் பணியாளர்கள் இருப்பர். அக்குடியிருப்புக்குள் வந்துபோகிற நபர்களையும், வாகனங்களையும் கண்காணித்து, பதிவுசெய்துகொள்வது அவர்கள் வேலை. மேலும், தோட்டப்பராமரிப்புக்கும், துப்புரவுக்கும், மின்சார உபகரணங்கள் பராமரிப்புக்கும், நீர் மேலாண்மைக்கும் என பல்வேறு பணியாளர்கள் அக்குடியிருப்புக்குள் வந்து அவர்கள் வேலைகளைச் செவ்வனே செய்யவேண்டியுள்ளது. இவர்களனைவரும் தங்களுக்குரிய வேலையைத் தவிர்த்து வேறொரு வேலையில் ஈடுபடமுடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கவேண்டும். இதேபோன்றதொரு தேவை, அமேசான் இணையச்சேவைகளுக்கும் உண்டு. பெருநிறுவனங்களில்… Read More »