Author Archive: srikaleeswarar

உங்கள் UBUNTU  VERSION – ஐ எளிமையாக அறிந்து கொள்ளுங்கள்!

பலதரப்பட்ட செயலிகளை நிறுவுவதற்கும் , சில நுணுக்கமான செயல்பாடுகளை செய்வதற்கும் உங்களுடைய கணினியின் ubuntu version(வெளியீடு) ஐ அறிந்து கொள்வது அவசியமாகிறது. தொடக்க நிலை பயனாளர்களுக்கு Ubuntu version ஐ அறிந்து கொள்வதில் சிக்கல் நீடிப்பதை காண முடிகிறது. வாருங்கள்! வழிமுறைகள் ஒவ்வொன்றையும், ஒன்றும் பின் ஒன்றாக பார்க்கலாம். முதலாவதாக முனையத்தில்(terminal) கீழ்காணும் கட்டளையை அரங்கேற்றவும்….
Read more

மின்தடையும் அது குறித்த தகவல் துணுக்குகளும்| எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி-2

கடந்த கட்டுரையில் மின் தேக்கி குறித்து பார்த்திருந்தோம். அந்த கட்டுரையை தற்போது வரை நீங்கள் படிக்கவில்லை எனில், இந்த கட்டுரை படித்து முடித்துவிட்டு அதையும் பார்வையிடவும். சரி! இன்றைய தலைப்பிற்கு உள்ளாக வருவோம். மின்தடை என்றால் என்ன? பெயரிலேயே இருக்கிறதே! மின்சாரத்தை தடை செய்யக்கூடிய பொருள் என்று பதில் அளித்தால் அது சரிதான். சரி! எத்தகைய…
Read more

காஞ்சி லினக்ஸ் வாராந்திர கூட்டம்(04/08/2024)

காஞ்சி லினக்ஸ் கூட்டமைப்பின் வாராந்திர கூட்டம், இன்று (ஆகஸ்ட்4 2024 அன்று) நடைபெறவிருக்கிறது. இந்திய நேரப்படி, மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை இணையவழியில்  கூட்டம் நடைபெறும். நிகழ்வில், லினக்ஸ் தொடர்பான பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அது தொடர்பாகவும் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். மேற்படி…
Read more

“சத்திரத்தான்” அவர்களின்- எட்டாயிரம் கட்டுரைகள் தொடக்கம்

கட்டற்ற தரவுகளின் களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியாவில், எண்ணில் அடங்காத தமிழர்களுக்கும் தரவு தரும் அயராத பணியை செய்யும், பல தன்னலமில்லாத மாமனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் மிகவும் குறுகிய காலத்தில், விக்கிபீடியா தளத்தில் 8000 கட்டுரைகள் தொடக்கம் எனும் உயரிய நிலையை அடைந்திருக்கும் சாதனையாளர் தான் “திரு.சத்திரத்தான்“ மேலும், விக்கிப்பீடியா அமைப்பால் நடத்தப்பட்ட பெண்ணியமும்…
Read more

கூகுள் புகைப்படங்களுக்கு சிறந்த மாற்றாக அமையக்கூடிய, இரண்டு லினக்ஸ் செயலிகள்!

நாம் அனைவருமே புகைப்படங்களை சேமித்து வைக்க, google புகைப்படங்களை(Gphotos) பிரதானமாக பயன்படுத்துகிறோம். மாற்று செயலிகள் குறித்து நாம் யோசித்துக் கொண்டு பார்ப்பதில்லை. ஆனால், கூகுள் புகைப்படங்களோடு ஒப்பிடக்கூடிய, மேலும் அதைவிட சில சிறப்பம்சங்களை உடைய, இரண்டு புகைப்பட செயலிகள் பற்றி தான்  இந்தக் கட்டுரையில் விவாதிக்க இருக்கிறோம். இதற்கான தரவுகள் itsfoss இணையதளத்தில் திரு.அங்குஸ்தாஸ் அவர்களால்…
Read more

யாவருக்குமான! எளிய எலக்ட்ரானிக்ஸ் – பகுதி 1

மின்தேக்கி(ஒரு அறிமுகம்):- யாவருக்குமான எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதிக்கு, உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன். இந்த தொடரின் முதல் கட்டுரை இது. இன்றைய தலைப்பில் நாம் காண இருப்பது, மின்தேக்கி ( capacitor)! பொதுவாக, மின்விசிறிகளுக்கு மட்டும் கப்பாசிட்டர்களை வாங்கியிருப்போம். உண்மையில், இவை எவ்வாறு இயங்குகின்றன? அது தொடர்பாக தான் அறிந்து கொள்ளவிருக்கிறோம். இயற்பியலில், “மின் ஆற்றலை…
Read more

இலவச செயற்கை நுண்ணறிவு வகுப்புகள் தொகுதி 3

இது தொடர்பான இரண்டு தொகுதி கட்டுரைகள், ஏற்கனவே கணியம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றையும் வாசகர்கள் அணுகி, இலவச செயற்கை நுண்ணறிவு வகுப்புகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். 7. தரவு அறிவியல் : கருவி கற்றல் ஏற்கனவே ஹார்ட்வட் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இணைய வகுப்புகள் குறித்து பார்த்து இருந்தோம். அந்த வகையில், இந்த வகுப்பு ஹார்ட்வேர் பல்கலைக்கழகத்தின்…
Read more

யாவருக்குமான, எளிய   எலக்ட்ரானிக்ஸ் – அறிமுகம்

பொதுவாக, இயற்பியல் மற்றும் பொறியியல் படித்தவர்களுக்கு மட்டுமே, பரிச்சயமான ஒரு துறை தான் எலக்ட்ரானிக்ஸ். இதற்கு ஊடாகவே, பல நூற்றுக்கணக்கான பொறியியல் துறைகள் வலம் வருகின்றன. இன்றளவும் கூட பலருக்கும், எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான எளிய தகவல்களை கற்றுக்கொள்ள வேண்டும்! எனும் ஆர்வம் இருக்கும். பள்ளிப் பாட புத்தகங்களைக் கடந்து, எலக்ட்ரானிக்ஸ் தொடர்பாக படித்து தெரிந்து கொள்ள…
Read more

காஞ்சி லினக்ஸ் கூட்டமைப்பின் வாராந்திர கூட்டம் (28/07/2024)

காஞ்சி லினக்ஸ் கூட்டமைப்பின் வாராந்திர கூட்டம், வருகிற ஜூலை 28 2024 அன்று நடைபெறவிருக்கிறது. இந்திய நேரப்படி, மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை இணையவழியில்  கூட்டம் நடைபெறும். நிகழ்வில், லினக்ஸ் தொடர்பான பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அது தொடர்பாகவும் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்….
Read more

உங்கள் லினக்ஸ் அறிவை மேம்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு

லினக்ஸ் மீது ஆர்வம் கொண்டவரா நீங்கள்? அது தொடர்பாக உங்களது அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புகிறீர்களா? அதற்கான சிறந்த வாய்ப்பை humble bundle ஏற்படுத்தியிருக்கிறது. லினக்ஸ் தொடர்பான, ஐந்து இணைய புத்தகங்களை(e-books) வெறும் ஒரு அமெரிக்க டாலர் (1$) விலையில் உங்களால் வாங்க முடியும். டிஜிட்டல் காப்புரிமையற்ற, லினக்ஸ் மற்றும் devops குறித்து விரிவாக விளக்கும்…
Read more