Author Archives: srikaleeswarar

குழந்தைகள் விளையாட்டாக படிப்பதற்கு சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள்

கட்டற்ற ஆண்ட்ராய்டு செயல்கள் வரிசையில் பல்வேறு அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஆண்ட்ராய்டு செயல்கள் குறித்து மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நான் பார்த்ததிலேயே, என்னை மிகவும் கவர்ந்த மற்றும் ஆர்வத்தை தூண்டிய ஒரு கட்டற்ற செயலி தான் Gcompris. கால் நூற்றாண்டு காலமாக இந்த செயலி இயங்கி வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த செயலி பிரத்யேகமாக குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கும் எளிமையாக உலக நுட்ப அறிவை அறிந்து கொள்வதற்கும், ஆகச் சிறந்த செயலியாக கட்டற்ற முறையில்… Read More »

Chrome க்கு மாற்றான ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு உலாவி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள்

Google செயலிகளுக்கு மாற்றாக இருக்கக்கூடிய செயலிகள் குறித்து தொடர்கட்டுரைகள் எழுதுவதாக முன்பே தெரிவித்திருந்தேன். மேலும், கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாகவும் பல கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். இந்த இரண்டு தலைப்புகளின் இணைப்பாக, குரோம் உலாவிக்கு(Chrome browser)மாற்றாக உங்களுக்கு இருக்கக்கூடிய சிறந்த கட்டற்ற உலாவி குறித்து தான் இன்றைக்கு பார்க்க வருகிறோம். அடிப்படையில் குரோம், மைக்ரோசாப்ட் உலாவி, சபாரி போன்ற பல்வேறு விதமான உலாவிகள்(Browser)நம் கருவிகளில் உலாவிக் கொண்டிருக்கிறது. இதில் ஃபயர் ஃபாக்ஸ்(Firefox)போன்ற கட்டற்ற உலாவிகளும் அடக்கம். இருந்த… Read More »

OR கதவின் தலைகீழி NOR கதவு | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 39

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பல்வேறு விதமான லாஜிக்கல் கதவுகள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைக்கு நாம் பார்க்க இருக்கிற கதவு,NOR லாஜிக் கதவு. நாம் ஏற்கனவே பார்த்திருந்த, ஓர் கதவின் தலைகீழி வகையான லாஜிக் கதவு தான் இந்த NOR கதவாகும். மேலும், இந்த கதவில் எவ்வித உள்ளீடும் வழங்கப்படாத போது மட்டுமே உங்களுக்கு வெளியீடு கிடைக்கும்(If both the inputs are zero, then only you’ll get the output). நாம்… Read More »

விக்கிபீடியாவின் அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு செயலி

தற்காலத்தின் ஆகச்சிறந்த தரவு களஞ்சியமாக விக்கிபீடியா விளங்குகிறது. விக்கிப்பீடியாவின் சிறப்புகள் மற்றும் அதன் முக்கிய பங்களிப்பாளர்கள் குறித்து பல்வேறு கட்டுரைகள் கணியம் தளத்திலேயே காணக் கிடைக்கின்றன . ஆனால், பலருக்கும் விக்கிப்பீடியாவிற்கான அதிகாரப்பூர்வ செயலியானது இருப்பது தெரிந்திருப்பதில்லை. பெரும்பாலும், இணையத்தில் தேடியே விக்கிப்பீடியா கட்டுரைகளைப் படிக்கிறார்கள். விரும்பிய கட்டுரைகளை பதிவு செய்து வைப்பது, தேடும் நேரத்திலேயே எவ்வித தாமதமும் இன்றி கட்டுரைகளைப் படிப்பதற்கும் இந்த ஆண்ட்ராய்டு செயலி பயன்படுகிறது. மேலும், இந்த செயலியை பயன்படுத்தி உங்களால் சில… Read More »

ரிமோட் கருவிகள் எப்படி வேலை செய்கிறது? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 38

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பல்வேறு விதமான அன்றாட எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் குறித்து நாம் விவாதித்து வருகிறோம். அந்த வகையில், இன்றைக்கு நாம் பார்க்க இருக்கக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் கருவியானது, நம் அன்றாட வாழ்வில் மிக மிக முக்கியமானது. நாம் அடிக்கடி மறக்கக்கூடிய, பேட்டரி வாங்கி போட சோம்பேறித்தன படக்கூடிய அனைவர் கைகளிலும் அன்றாடம் புழங்கும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கருவி தான் ரிமோட்(Remote control). வீட்டில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என அறிந்து கொள்வதற்கு யார் கையில் அதிக நேரம்… Read More »

பைத்தான் கற்க ஒரு சிறந்த வாய்ப்பு

பைத்தான் கற்பதற்கு பல்வேறு மாணவர்களும் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருப்பீர்கள். பல்வேறு இணைய வாய்ப்புகளின் மூலமாகவும், பயிற்சி நிறுவனங்களின் மூலமாகவும் கற்றுக் கொள்ள முடிந்தாலும் தெளிவாக புரிந்து கொள்வதில் சிரமங்கள் நீடிக்கும். மேலும், பொருளாதார சூழல்களால் சரியாக வாய்ப்பு அமையாமல் கற்றுக்கொள்ள முடியாது போனவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தற்கால செயற்கை நுண்ணறிவு யுகத்தில் பைத்தான் போன்ற கணினி மொழிகளை கற்பது இன்றியமையாதது. நீங்கள் எந்த துறையில் இயங்கிக் கொண்டு இருந்தாலும், பைத்தான் போன்ற கணினி… Read More »

C மொழியின் சில முக்கியமான குறிச்சொற்கள் | எளிய தமிழில் சி

எளிய தமிழில் சி மொழி தொடர்பான கட்டுரைகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது சில முக்கியமான சீன் மொழியின் குறிச்சொற்கள் (keywords) குறித்துதான். இந்த குறி சொற்களை கவனமாக படித்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் அடுத்தடுத்து பார்க்கப் போகிற நிரல் ஆக்கங்களுக்கு இத்தகைய குறிச்சொற்கள் முக்கியமானது. மொத்தமாக சீ மொழியில் 32 குறிச்சொற்கள் இருக்கிறது. இந்த அனைத்து குறிச்சொற்களையும் முதலிலேயே கற்று வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை போகப் போக ஒவ்வொரு… Read More »

எலக்ட்ரானிக் செயல்பாடுகளில் உற்ற துணைவன் ” Bread Board” | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 37

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல்வேறு விதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறித்து பார்த்திருக்கிறோம். குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை தொடர்பாக ஆர்வம் கொண்டவர்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வைத்து ஏதாவது செயல்பாடுகள் செய்து பார்க்க ஆசைப்படுவீர்கள். குறிப்பாக, உள்ளார்ந்த மின்சுற்றுகளை(IC)ப் பயன்படுத்தி எளிமையான மற்றும் அருமையான பல செயல்பாடுகளை செய்து பார்க்க முடியும். உதாரணமாக,.இருட்டில் தானாகவே எரியும் சிறிய மின் விளக்கு, வெப்பம் பட்டவுடன் வேலை செய்யும் அலாரம் போன்ற இணையத்தில் கிடைக்க கூடிய பல்வேறு விதமான… Read More »

கூகுளுக்கு மாற்று | குறுந்தொடர் அறிமுகம்

கணியம் இணையதளத்தில் கட்டற்ற பல தகவல்கள் குறித்தும் நெடுந்தொடர்கள் எழுதப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், நான் முதன் முதலில் எழுத ஆரம்பித்த தொடர் தான்”எளிய தமிழில் எலக்ட்ரானிக்ஸ்”. நானே எதிர்பாராத வகையில், எலக்ட்ரானிக்ஸ் தொடரில் மட்டும் 35க்கும் அதிகமான வெற்றிகரமான கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். அதனோடு சேர்ந்து சில குறுந்தொடர்களை எழுதி இருக்கிறேன். தற்போதைக்கு எளிய தமிழில் சி, கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் உள்ளிட்ட தொடர் வரிசையிலும் கட்டுரைகள் எழுதி வருகிறேன். ஆனால், கணியத்தில் என்னுடைய எழுத்து… Read More »

AND கதவின் தலைகீழி NAND| எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 36

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் கடந்த சில வாரமாக லாஜிக் கதவுகள் குறித்து பார்த்தோம்.அந்த வகையில், நம்முடைய தொடக்க கட்டுரைகளிலேயே AND கதவு குறித்து விவாதித்து இருந்தோம். இந்த AND கதவின் தலைகீழி என அழைக்கப்படும் கதவு தான் NAND கதவு. நீங்கள் AND கதவில் இரண்டு உள்ளீடுகள் அல்லது மூன்று உள்ளீடுகளை கொடுத்து அதற்கு எத்தகைய வெளியீடுகளை பெறுகிறீர்களோ! அதற்கு தலைகீழான வெளியீடு இந்த NAND கதவில் உங்களுக்கு கிடைக்கும். உதாரணமாக, AND கதவில் அனைத்து உள்ளீடுகளும்… Read More »