Author Archives: srikaleeswarar

தொடுதிரைகள் எப்படி வேலை செய்கிறது?| எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 35

தற்காலத்தில் மொபைல் கருவிகள் லேப்டாப்கள் உள்ளிட்ட கணினி மற்றும் கணினியோடு தொடர்புடைய சாதனங்கள் பலவற்றிலும், மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமானது தொடு திரை வசதி.   2010 காலகட்டத்தில் ஆண்ட்ராய்டு மொபைல் கருவிகளின் வருகை தொடங்கியிருந்தது. இருந்த போதிலும், சிம்பியான் விண்டோஸ் லினக்ஸ் போன்ற இயங்குதளங்களைக் கொண்டு இயங்கிய ஸ்மார்ட் மொபைல் கருவிகளும் பெரும்பாலும் சந்தைகளில் காண கிடைத்தன. இத்தகைய மொபைல் கருவிகளில் தொடுதிரைவசதியானது(Touch screen)அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தொடக்க காலகட்டத்தில், தொடுதிரை மொபைல் போன் வைத்திருப்பவர் நிச்சயம் வசதி படைத்தவராக… Read More »

ஆபத்தில் உதவும் கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 9

இந்தப் பகுதியில், பல்வேறு விதமான கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாக பார்த்து வருகிறோம். பல்வேறு விதமான பாதுகாப்பு நோக்கில் தயாரிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் உங்களுக்கு காண கிடைக்கும். ஆனால், இவற்றில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், இது போன்ற செயலிகளின் மூலம் உங்களுடைய இருப்பிடம் மற்றும் சில முக்கியமான தகவல்கள் செயலியை தயாரித்தவர்களுக்கு தெரிந்து விடும். மேலும்,இத்தகைய செயலிகள் கட்டற்ற வகையில் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, பாதுகாப்பு நோக்கத்திற்காக ஒரு செயலியை நிறுவி விட்டு… Read More »

C மொழியில் சின்னதாக ஒரு கூட்டல் கணக்கு | எளிய தமிழில் C

எளிய தமிழில் C கட்டுரைகளை எழுதத் தொடங்கி கடந்த 15 நாட்களாக கட்டுரை எதுவும் வெளியாகவில்லை. சில தனிப்பட சரி இன்றைக்கு பெரியதாக ஒன்றும் பார்க்கப்போவதில்லை! C மொழியில் எளிமையாக ஒரு கூட்டல் கணக்கு போடுவது எப்படி ?என்றுதான் இன்றைய கட்டுரையில் பார்க்க வருகிறோம். இதற்கு உங்களுக்கு அடிப்படையான தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு முன்பு நான் எழுதியிருக்கக் கூடிய,C மொழியில் பொங்கல் வாழ்த்து என்னும் கட்டுரையை படித்து பாருங்கள். C மொழியில் எழுதுவதற்கு அடிப்படையான தகவல்கள்… Read More »

குவார்ட்ஸ்(QUARTZ) கடிகாரம் எப்படி வேலை செய்கிறது? எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 34

என்னதான் விதவிதமாக ஸ்மார்ட் கடிகாரங்கள், டிஜிட்டல் கைக்கடிகாரங்கள் என வந்தாலும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை ஜப்பான்காரன் அறிமுகப்படுத்திய குவார்ட்ஸ்(Quartz) கடிகாரங்களுக்கு மதிப்பு குறைவதில்லை. இந்த கடிகாரத்தில் இருந்து வரும் டிக்,டிக் சத்தத்திற்காகவே, இதை வாங்கி கைகளிலும் வீட்டின் சுவரிலும் மாட்டிக் கொள்ளும் அன்பு உள்ளங்கள் நாடெங்கும் நிறைந்து காணப்படுகிறார்கள். இந்த குவார்ட்ஸ் கடிகாரம் எப்படி தான் வேலை செய்கிறது? எளிமையாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இதற்கு முன்பாக என்னுடைய இன்னபிற எளிய எலக்ட்ரானிக்ஸ்… Read More »

வரும் ஆனா வராது | Not கதவு | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 33

கடந்த வாரம் லாஜிக் கதவுகள் தொடர்பான கட்டுரைக்கு விடுமுறை விட்டு விட்டேன். எங்கே இந்த தொடரை இப்படியே கைவிட்டு விடுவேனோ? என எனக்குள்ளேயே சந்தேகம் கிளம்பிவிட்டது. அதற்காகத்தான் வேகவேகமாக NOTகதவு குறித்து கட்டுரை எழுதுவதற்கு என்று வந்திருக்கிறேன். கடந்த இரண்டு லாஜிக் கதவுகள் தொடர்பான கட்டுரையில் AND மற்றும் OR கதவுகள் குறித்து பார்த்திருந்தோம். NOT கதவு என்றால் என்ன? அது தொடர்பாகத்தான் இன்றைக்கு பார்க்கவிருக்கிறோம். ஆங்கில வார்த்தையான NOTஎன்பதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? வேறு… Read More »

எல் இ டி பல்புக்குள் என்னதான் இருக்கிறது? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 32

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல்வேறு வகையிலான தலைப்புகள் குறித்து பார்த்திருக்கிறோம். கடந்த சில வாரங்களாக லாஜிக் கதவுகள் குறித்த தொடர் ஒன்றை தொடங்கியிருந்தேன். வாரந்தோறும் லாஜிக் கதவுகளையே எழுதி சற்றே சோர்ந்து போய் விட்டேன். இந்த முறை சற்று மாற்றாக இருக்கட்டும் என்று, led பல்புக்குள் எத்தகைய எலக்ட்ரானிக்ஸ் பொதிந்து இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். அதற்காக லாஜிக் கதவுகள் தொடர் இத்தோடு முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம் ! வரும் நாட்களில் லாஜிக் கதவுகள் தொடர்பாகவும்… Read More »

விக்கிபீடியா தினம்

இணைய உலகத்தின் ஆகச்சிறந்த தரவு களஞ்சியமாக திகழும், “விக்கிப்பீடியா”வின் சர்வதேச தினம் இன்றைக்கு உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. விக்கிபீடியாவின் வரலாறு அதன் செயல்பாடு முறைகள் குறித்து கணியம் அறக்கட்டளையின் இணையதளத்தில், ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அந்த கட்டுரையின் இணைப்பை கீழே வழங்குகிறேன். kaniyam.com/wikipedia-an-opensource-library/ சரி ! விக்கிபீடியா என்பது எவ்வாறு செயல்படுகிறது? என்னதான் நடக்கிறது? விக்கிபீடியாவிற்குள், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், எண்ணற்ற தரவுகள் குவியும் ஒரு ஆகச் சிறந்த தளமாக விக்கிபீடியா திகழ்வதற்கு காரணம் என்ன?… Read More »

நீ பாதி நான் மீதி|  OR கதவு | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 31 | லாஜிக் கதவுகள் குறுந்தொடர்

கடந்த வாரம் எழுதியிருந்த, லாஜிக் கதவுகள் தொடர்பான கட்டுரையில் AND லாஜிக் கதவு குறித்து விரிவாக பார்த்திருந்தோம். இன்றைய கட்டுரையில், OR லாஜிக் கதவு குறித்து விரிவாக பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்பாக, என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்க விரும்பினால், கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். kaniyam.com/category/basic-electronics/ அடிப்படையில் கூட்டல் செயல்முறைக்கு ஒத்த வகையிலான, லாஜிக் கதவாகவே OR கதவு அறியப்படுகிறது. பூலியன் இயற்கணிதத்தின் OR விதியின்படி, இந்த லாஜிக் கதவு ஆனது… Read More »

C மொழியில் பொங்கல் வாழ்த்து சொல்வோமா! | எளிய தமிழில் C பகுதி 2

பள்ளியில்,கணினி அறிவியல் படித்த மாணவர்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும்.முதன் முதலில் “புரோகிராமிங் “என்கிற பெயரில் ஹலோ வேர்ல்ட்(hello world) எனும் வார்த்தையை, கணினி திரையில் வெளியீடாக(display ) கொண்டு வர சொல்லுவார்கள். செய்முறை தேர்வுகளுக்கு கூட, இந்த கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பதாக, என்னுடைய நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் அதற்கு கூட, நண்பர்கள் பலமுறை திணறிக் கொண்டிருப்பதை நான் கவனிக்க தர வரவில்லை. எதற்காக include போடுகிறோம்? எதற்காக # போடுகிறோம்? Main() என்றால் என்ன? Return… Read More »

லாஜிக்கோடு AND கதவை அணுகுவோமா ? | AND கதவு | லாஜிக் கதவுகள் பகுதி: 3 | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 30

கடந்த கட்டுரையில் லாஜிக் கதவுகளின் வகைகள் குறித்து விரிவாக பார்த்திருந்தோம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதன்முதலாக கற்பிக்கப்படும் லாஜிக் கதவு எதுவென்று கேட்டால், AND கதவு தான். என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க, கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். பெருக்கலை அடிப்படையாகக் கொண்ட லாஜிக் கதவு தான், இந்த AND கதவு. பூலியன் இயற்கணிதத்தின் AND வகைப்பாட்டின் அடிப்படையில், இந்த கதவு வேலை செய்கிறது இந்த AND கதவின் விதியின்படி, இரண்டு உள்ளீடுகளும் ஒன்றாக… Read More »