Category Archives: கணியம்

எளிய தமிழில் Car Electronics 1. உயர் நிலைக் கண்ணோட்டம்

தானுந்து மின்னணுவியல் (Automotive Electronics) இரு சக்கர ஊர்திகள், ஆட்டோ போன்ற மூன்று சக்கர ஊர்திகள் மற்றும் உழவு இயந்திரங்களின் (tractors) உற்பத்தி எண்ணிக்கையில் உலகச் சந்தையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பயணிகள் ஊர்திகளிலும், பேருந்து (bus), சரக்குந்து (truck/lorry) போன்ற வணிக ஊர்திகளிலும் நான்காம் இடத்தில் இருந்தபோதிலும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியால் இவையும் வேகமாக வளர்ந்து வருகின்றன. மேலும் ஊர்திகள் தயாரிப்பின் மொத்தச் செலவில் சுமார் 1 % இருந்த மின்னணு சாதனங்கள் சில ஊர்திகளில்… Read More »

பேராலயமும் சந்தையும் 14. முடிவுரை: சந்தை பாணியை நெட்ஸ்கேப் தழுவுகிறது

நெட்ஸ்கேப் (Netscape) நிறுவனம் அதன் கம்யூனிகேட்டர் (Communicator) உலாவியைத் திறந்த மூலமாக வெளியிடும் திட்டத்தை அறிவித்தது நீங்கள் வரலாறு படைக்க உதவுகிறீர்கள் என்பது ஒரு விசித்திரமான உணர்வு…. ஜனவரி 22, 1998 இல், நான் முதன்முதலில் பேராலயமும் சந்தையும் வெளியிட்ட சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு, நெட்ஸ்கேப் (Netscape) நிறுவனம் அதன் கம்யூனிகேட்டர் (Communicator) உலாவியின் மூடிய மூலமாக இருந்த நிரலைத் திறந்த மூலமாக வெளியிடும் திட்டத்தை அறிவித்தது. அறிவிப்பு வரும் நாளுக்கு முன்பு இது நடக்கப்… Read More »

பேராலயமும் சந்தையும் 13. மேலாண்மையும் மேகினாட் கோடும்

1997 ஆம் ஆண்டின் முதலாவதான பேராலயமும் சந்தையும் ஆய்வுக்கட்டுரை முன்னர் உள்ள பார்வையுடன் முடிவடைந்தது. அதாவது இணையம் மூலம் தொடர்புகொள்ளும் நிரலாளர்/புரட்சியாளர்களின் மகிழ்ச்சியான குழுக்கள் வழக்கமான மூடிய மென்பொருளின் கட்டளைமுறை உலகத்தைப் போட்டியில் வெல்லும் மற்றும் மூழ்கடிக்கும். பல அவநம்பிக்கை இயல்பு உள்ளவர்கள் இதை ஏற்கவில்லை. மேலும் அவர்கள் எழுப்பும் கேள்விகள் நியாயமான முறையில் ஈடுபடத் தகுதியானவை. சந்தை வாதத்திற்கான பெரும்பாலான ஆட்சேபனைகள், அதன் ஆதரவாளர்கள் வழக்கமான நிர்வாகத்தின் உற்பத்தித்திறன்-பெருக்க விளைவைக் (productivity-multiplying effect) குறைத்து மதிப்பிட்டுள்ளனர்… Read More »

துருவங்கள் – நுட்ப நாவல் – நக்கீரன்.ந

ஒரு காதல் கதையில் கணினியைச் சொல்லித் தர முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் நக்கீரன். மதன், கார்த்திகா ஆகிய இருவர் தாம் இந்தக் கதையின் தலைவனும் தலைவியும். இவர்கள் இருவரையும் லினக்ஸ் இணைக்கிறது. இது தான் கதையின் சுருக்கம். கதைச் சுருக்கத்தைக் கேட்டவுடன் ‘ஓ! அவ்வளவு தானா!’ என்று நினைத்து விடாதீர்கள். நீங்கள் இந்தக் கதையில் புரட்டப் போகும் ஒவ்வொரு பக்கத்திலும் எதிர்பாராத திருப்பங்களும் எதிர்பார்க்கும் விருப்பங்களும் நிரம்ப இருக்கின்றன. காதலிக்க விரும்பும் ஒவ்வோர் இளைஞருக்கும் இந்தப்… Read More »

பேராலயமும் சந்தையும் 12. திறந்த மூல மென்பொருளின் சமூக சூழல்

ஒரு முக்கியமான பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் உங்களுக்கு சுவாரசியமான ஒரு பிரச்சினையில் தொடங்கவும் இது என்றுமே பொய்யாகாது: சிறந்த நிரல்கள் படைப்பாளரின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தனிப்பட்ட தீர்வுகளாகத் தொடங்குகின்றன. பின்னர் இந்தப் பிரச்சினை ஒரு பெரிய வகுப்பினருக்குப் பொதுவானதாக இருப்பதால் பரவுகிறது. இது விதி 1 இன் கருத்துக்கு நம்மை மீண்டும் அழைத்துச் செல்கிறது, மிகவும் பயனுள்ள வகையில் இவ்வாறு மாற்றியும் கூறலாம்: மணிமொழி 18. ஒரு முக்கியமான பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமானால், உங்களுக்கு… Read More »

40 ஆவது ஆண்டில் GNU திட்டம்

நாம் எடுக்கும் முடிவுகள் நமது வருங்காலத்தையே மாற்ற வல்லவை. சில நேரங்களில் நமது நற்செயல்கள் நமது வாழ்வை மட்டுமல்ல, பிறருக்கும் நல்வாழ்வை அளிக்க வல்லவை. சில செயல்கள் உலகோர் அனைவருக்கும் நல்வாழ்வு தர வல்லவை.உலக வரலாற்றில் அச்செயல்களே அச்சாணியாக நின்று, வரலாற்றை நகர்த்திச் செல்கின்றன. 40 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், செப்டம்பர் 27 1983 ல் ரிச்சர்ட் ஸ்டால்மன் (Richard Stallman) வெளியிட்ட குனு திட்டம் ( GNU ) , கணினி வரலாற்றை புரட்டிப்போடும்… Read More »

பேராலயமும் சந்தையும் 11. சந்தை பாணிக்கு அவசியமான முன்தேவைகள்

நிரலாளர்கள் ஓட்டிப்பார்த்து சோதிக்கக்கூடிய நிரல் தொடக்கத்திலேயே இருக்க வேண்டும் இந்தக் கட்டுரைக்கான ஆரம்பகால மதிப்பாய்வாளர்கள் மற்றும் சோதனை பார்வையாளர்கள் வெற்றிகரமான சந்தை-பாணி வளர்ச்சிக்கான முன்தேவைகள் குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர். இதில் திட்டத் தலைவரின் தகுதிகள் மற்றும் திட்டத்தை வெளியீடு செய்து இணை-நிரலாளர்கள் சமூகத்தை உருவாக்கத் தொடங்கும் போது உள்ள நிரலின் நிலை ஆகியவை அடங்கும். சந்தை பாணியில் அடிப்படையிலிருந்து ஒருவரால் நிரல் எழுத முடியாது என்பது மிகவும் தெளிவாக உள்ளது. சந்தை பாணியில் ஒருவர் சோதனை… Read More »

விழுப்புரத்தில் கணினி மென்பொருள் கண்காட்சி (Free Software Exhibition) – 24/09/2023

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்…! 10வது ஆண்டாக விழுப்புரத்தில் அறிவியல் கண்காட்சியைப் போல, கணினி மென்பொருள் கண்காட்சி (Free Software Exhibition). வருடாந்திர மென்பொருள் சுதந்திர தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (24/09/2023) அன்று நடைபெறுகிறது. இதில் ஏராளமான கட்டற்ற(சுதந்திர) மென்பொருள் தொழில்நுட்பங்களை பற்றிய தலைப்புகள் இடம்பெறுகின்றன. அனைவரும் வருக…! அனுமதி இலவசம்…! இந்த கண்காட்சியின் தலைப்புகள் பின்வருமாறு: தேதி: செப்டம்பர் 24, 2023 – ஞாயிறு நேரம்: 9 AM – 1 PM இடம்: பத்மநாபன் அரங்கம், அலமேலுபுரம்,… Read More »

பேராலயமும் சந்தையும் 10. ஃபெட்ச்மெயில் கற்பித்த மேலும் சில பாடங்கள்

பொதுவான மென்பொருள்-பொறியியல் சிக்கல்களுக்குச் செல்வதற்கு முன், ஃபெட்ச்மெயில் அனுபவத்திலிருந்து இன்னும் சில குறிப்பிட்ட பாடங்கள் உள்ளன. தொழில்நுட்பத்தில் நாட்டமற்ற வாசகர்கள் இப்பகுதியைத் தவிர்க்கலாம். rc (கட்டுப்பாடு) கோப்பின் தொடரியல் (syntax) விருப்பமைவு செய்யக்கூடிய ‘இரைச்சல்’ குறிச்சொற்களை உள்ளடக்கியது. இவை பாகுபடுத்தியால் (parser) முற்றிலும் புறக்கணிக்கப்படும். இவை அனுமதிக்கும் ஆங்கிலம் போன்ற தொடரியல், பாரம்பரிய சுருக்கமான குறிச்சொல்-மதிப்பு இணைகளை (terse keyword-value pairs) விட, பெரும்பாலும் படிக்கக்கூடியதாக உள்ளது. rc கோப்பு அறிவிப்புகள் எந்த அளவு ஒரு குறுமொழியை… Read More »

பேராலயமும் சந்தையும் 9. ஃபெட்ச்மெயில் முதிர்ச்சி அடைகிறது

இப்படியாக ஃபெட்ச்மெயில் நேர்த்தியான மற்றும் புதுமையான வடிவமைப்புடன் மேம்பட்டு வந்தது. நான் தினமும் பயன்படுத்தியதால் எனக்குத் தெரிந்து நிரல் நன்றாக வேலை செய்தது. மேலும் பீட்டா பட்டியல் வளர்ந்து வந்தது. வேறு ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படக்கூடிய அற்பமான தனிப்பட்ட நிரல் திட்டத்தில் நான் ஈடுபடவில்லை என்பது படிப்படியாக எனக்குப் புரிந்தது. யூனிக்ஸ் கணினி மற்றும் SLIP/PPP அஞ்சல் இணைப்பு கொண்ட ஒவ்வொரு கொந்தருக்கும் உண்மையில் தேவைப்படும் ஒரு நிரலைத்தான் நான் கையில் எடுத்துள்ளேன். SMTP மேலனுப்புதல்… Read More »