Category Archives: கணியம்

எளிய தமிழில் VR/AR/MR 12. VR மற்ற சில பயன்பாடுகள்

உற்பத்தி (Manufacturing) வானூர்தியில் இருக்கும் இடத்தைத் திறம்படப் பயன்படுத்த வேண்டும். பயணிகளுக்கும் சௌகரியமாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் இடத்தையும் வீணாக்கக் கூடாது. ஆகவே இருக்கும் தளவமைப்பில் (layout) சிறு மாற்றங்கள் செய்வதும் மிகக் கடினம். இந்த வேலைக்கு VR காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பயணிகள் இருக்கை தளவமைப்பு தோற்ற மெய்ம்மை (VR) மாதிரியில் (model) தேவையான மாற்றங்களை செய்து பல கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து பார்க்கலாம். மூச்சுக்குழாய் முகவணி (oxygen mask) கீழே தொங்கினால் எட்டிப்… Read More »

விழுப்புரம் பகுதில் தகவல் தொழிற்நுட்ப பூங்கா அமைக்க அரசாணை

விழுப்புரம் பகுதில் தகவல் தொழிற்நுட்ப பூங்கா அமைக்க 26/02/2021-ம் தேதி அரசாணை( GO.(Ms) No. 109) வெளியிடபட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து VGLUG சார்பாக பல்வேறு மட்டங்களில் அரசின் பார்வைக்கு கொண்டு சேர்த்ததன் பலனாக தற்போது அரசாணை வெளியாகியுள்ளது. இது VGLUG மற்றும் விழுப்புரம் பகுதியை சார்ந்த மக்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக அமைந்துள்ளது. இது மக்கள் கோரிக்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி!விழுப்புரம் பகுதியை சார்ந்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு இந்த தகவல் தொழிற்நுட்ப பூங்கா அரசாணையின்… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 11. வீடு பார்க்கவும் உட்புற வடிவமைப்புக்கும் VR

உட்புற வடிவமைப்பைக் (interior design) கற்பனை செய்து பார்ப்பது மிகக் கடினம்  செயற்குறிப்பில் (proposal) கொடுத்துள்ள கட்டடத்தின் நீள அகல வரைபடம் (plan) மற்றும் முகப்புப் படம் (elevation) ஆகியவற்றை வைத்து அதன் அளவுகளை வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியியலாளர்களால் உருவகிக்க முடியும். ஆனால் சாதாரண வாடிக்கையாளர்களுக்குக் கட்டடத்தின் அளவுகளைக் கற்பனை செய்து பார்ப்பதே மிகக்கடினம். மேலும் அறைகலன்கள், திரைச்சீலைகள், சுவர் அலங்காரம் ஆகியவற்றையும் சேர்த்து உருவகிப்பது குழப்பமான வேலையாகிறது. ஆகவே வாக்குறுதி கொடுத்தபடி வேலையை செய்து முடிக்கவில்லை… Read More »

எளிய தமிழில் DevOps-13

Ansible Playbooks கட்டளைகளை தனித்தனியே இயக்குவதற்கு பதிலாக ஒரு கோப்பில் எழுதி, அக்கோப்பினை இயக்குவதன் மூலம் அனைத்து வேலைகளையும் செய்து கொள்ளலாம். இதற்கு Playbook என்று பெயர். இது yaml வடிவில் .yml என்ற extension கொண்டு சேமிக்கப்படுகிறது. இதில் குறிப்பிடப்படுகின்ற ஒவ்வொரு வேலையும் task என்று அழைக்கப்படுகின்றன. Ansible ஆனது இந்த Playbook-ல் உள்ளவற்றைப் படித்து, hosts-ல் உள்ள ஒவ்வொரு கணிணியாக login செய்து, தரப்பட்ட கட்டளைகளை இயக்கிவிடும். பின் நமது கணிணிக்குத் திரும்பிவிடும். This… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 10. கல்வி மற்றும் பயிற்சிக்கு VR

கற்றதைத் தக்கவைக்க (learning retention) மூழ்கவைக்கும் அனுபவங்கள் உதவுகின்றன நீங்கள் சிறுவர்களுக்கு பூகோளப் பாடம் எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உலகப்படம் (Atlas) காட்டிக் கற்பித்தல் ஓரளவுதான் புரியும். எனினும் கோளத்தை (Globe) வைத்து சுழற்றிக் காட்டினால் பூமியின் உருண்டை வடிவம் தெளிவாகப் புரியும் அல்லவா? இதைவிட மேலாக தோற்ற மெய்ம்மையின் (VR) மூழ்க வைக்கும் அனுபவங்கள் (immersive experiences) மூலம் கற்றல் ஆழமாகப் பதிகிறது. மேலும் பயில்வோர் ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துகின்றனர். உள் விவரங்களையும் வெட்டுத்… Read More »

எளிய தமிழில் DevOps-12

Ansible உங்களிடம் ஒரு லினக்ஸ் சர்வர் உள்ளது. இதில் இன்று நீங்கள் 8 மென்பொருட்களை நிறுவ வேண்டும். 15 மென்பொருட்களை மேம்படுத்த வேண்டும். 2 மென்பொருட்களை நீக்க வேண்டும். எப்படிச் செய்வீர்கள்? அவற்றுக்கான கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாகத்தான் தருவீர்கள். சரிதானே. இதே வேலையை 5 சர்வர்களில் செய்ய வேண்டும் என்றால்? ஒவ்வொரு சர்வராக login செய்து எல்லாக் கட்டளைகளையும் இயக்க வேண்டியதுதான். இதுவே 50 சர்வர், 100 சர்வர் என்றால்? ஒவ்வொன்றிலும் login செய்து அதே… Read More »

எளிய தமிழில் DevOps-11

Schedule using Airflow இனிவரும் பகுதியில் இதற்கு முன் பகுதியில் கண்ட அதே விஷயத்தை Airflow கொண்டு உருவாக்கித் திட்டமிடுவது பற்றிக் காணலாம். கீழ்கண்ட கட்டளைகள் Airflow இயங்குவதற்குத் தேவையான விஷயத்தை இன்ஸ்டால் செய்யும். $ sudo pip3 install apache-airflow $ sudo pip3 install flask $ sudo pip3 install flask_bcrypt $ sudo pip3 install kombu==4.5.0 இவை இயங்கி முடிந்தவுடன் நமது கணினியின் ஹோம் டைரக்டரியில் airflow எனும் டைரக்டரி… Read More »

ShotCut Video Editing – மென்பொருள் ஒரு அறிமுகம் – இன்று மாலை 4.30

Shotcut  : www.facebook.com/events/254144559405834/ (www.facebook.com/events/254144559405834/) மற்ற பயிற்சி வகுப்புகள் பற்றிய தகவலுக்கு : www.facebook.com/THINKRDRC (www.facebook.com/THINKRDRC) பதிவுப் படிவம் :  bit.ly/Register4CourseRDRC  Join link – meetingsapac5.webex.com/webappng/sites/meetingsapac5/meeting/info/2bf87cb470344ace9583cf241f1ba1b1?MTID=m62ec75845c3e510927cbdf843eaa679e Webex meeting Id =  158 088 7217Password = FOS2021FEB முன்னோட்டம் youtu.be/qZB_8AHW2Dg

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 28-02-2021 – மாலை 4 மணி – இன்று

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4-5 இணைய வழியில் சந்தித்து, கட்டற்றமென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் பங்கு பெறுவோர் அறிமுகம் Python நிரலாக்கத்தில் Dictionary ஓர் அறிமுகம் – திருமுருகன் பொதுவான கேள்வி பதில்கள் ஜிட்சி எனும் கட்டற்ற இணைய வழி உரையாடல் களத்தைப் பயன்படுத்துகிறோம்.பின் வரும் இணைப்பை Firefox / Chrome உலாவியில் திறந்து இணையலாம். JitSiகைபேசி செயலி மூலமும் இணையலாம்.… Read More »