நிரலாக்கத்தில் அதிமேதாவியாக இல்லாமல் திறவூற்றுக்கு பங்களிக்க 14 வழிகள்
திறவூற்றுக்கு பலர் தங்களது பங்களிப்பை அளிக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எங்கே ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. உங்களது தொழில்நுட்ப அறிவில் உங்களுக்கு நம்பிக்கை இல்லா விட்டாலும், எப்படியெல்லாம் திறவூற்றுக்கு உதவலாம் என்று நாம் இப்போது பார்ப்போம். கணிமையையும், உலகையும் திறவூற்று மென்பொருள்கள் மாற்றி இருக்கின்றன. உங்களில் பலரும் பங்களிக்க விரும்புகின்றீர்கள். ஆனால் ஒரு திட்டப்பணியில் நுழைய பல தடைகள் இருப்பதாக, நீங்கள் நினைத்துக் கொண்டு துரதிர்ஷடவசமாக உங்களது ஊக்கத்தை இழந்து விடுகின்றீர்கள். பெரும்பாலும் பங்களிக்க… Read More »