Category Archives: கணியம்

பேராலயமும் சந்தையும் 8. பாப்கிளையன்ட் ஃபெட்ச்மெயில் ஆகிறது

SMTP போர்ட்டுக்கு அஞ்சலை அனுப்பும் அம்சம் – ஒரு பயனர் கொடுத்த அற்புதமான யோசனை பயனர் கணினியின் SMTP போர்ட்டுக்கு அஞ்சலை அனுப்புவதற்காக ஹாரி ஹோச்ஹெய்சர் (Harry Hochheiser) தனது துண்டு நிரலை எனக்கு அனுப்பியதுதான் திட்டத்தில் உண்மையான திருப்புமுனையாக அமைந்தது. இந்த அம்சத்தை நம்பகமான முறையில் செயல்படுத்தினால், மற்ற எல்லா அஞ்சல்  கொண்டு சேர்க்கும் முறைகளும் வழக்கற்றுப் போய்விடும் என்பதை நான் உடனடியாக உணர்ந்தேன். பல வாரங்களாக நான் ஃபெட்ச்மெயிலை கொஞ்சம் கொஞ்சமாக மேம்பாடு செய்து… Read More »

பேராலயமும் சந்தையும் 7. ரோஜா எப்போது ரோஜா அல்ல?

லினஸின் செயல்முறையை நுட்பமாக ஆய்வு செய்து, அது ஏன் வெற்றிகரமாக இருந்தது என்பது பற்றிய ஒரு கோட்பாட்டை உருவாக்கினேன். பிறகு, எனது புதிய திட்டத்தில் (லினக்ஸ் அளவுக்குச் சிக்கலானதோ அல்லது பெரிய அளவிலானதோ இல்லை என்றாலும் கூட) இக்கோட்பாட்டைச் சோதிக்கத் தெரிந்தே ஒரு முடிவை எடுத்தேன். நிரலை மையமாகவும், தரவுக் கட்டமைப்புகளை நிரலுக்கு ஆதரவாகவும் கருதினார் ஆனால் நான் செய்த முதல் வேலை, பாப்கிளையன்டை மறுசீரமைத்து எளிமைப்படுத்துவதுதான். கார்ல் ஹாரிஸின் செயலாக்கம் மிகவும் நன்றாக இருந்தது, ஆனால்… Read More »

பேராலயமும் சந்தையும் 6. எத்தனை பேர் கவனம் வைத்தால் சிக்கலை அடக்கியாள முடியும்

வழுத்திருத்தம் மற்றும் நிரல் வளர்ச்சியை சந்தை பாணி பெரிதும் துரிதப்படுத்துகிறது என்பதை மேம்போக்காக கவனிப்பது ஒன்று. தினசரி நிரலாளர் மற்றும் சோதனையாளர் நடத்தையின் நுண்மட்டத்தில் அது எப்படி, ஏன் வேலை செய்கிறது என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்வது மற்றொரு சங்கதி. இக்கட்டுரையில் (முதல் ஆய்வுக் கட்டுரைக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது. அதைப் படித்து, தங்களின் சொந்த நடத்தையை மறுபரிசீலனை செய்த நிரலாளர்களின் நுண்ணறிவைப் பயன்படுத்தி) உண்மையான இயங்குமுறைகளை நாம் மிகக்கவனமாக ஆராய்வோம். தொழில்நுட்பத்தில் நாட்டமற்ற வாசகர்கள் இதை… Read More »

பேராலயமும் சந்தையும் 5. முன்னதாக வெளியிடுக, அடிக்கடி வெளியிடுக

முன்னதாக வெளியிடுதல் மற்றும் அடிக்கடி வெளியிடுதல் லினக்ஸ் மேம்பாட்டு மாதிரியின் முக்கியமான அங்கமாகும். பெரும்பாலான நிரலாளர்கள் (நானும்தான்) மிகச்சிறியது தவிர மற்ற திட்டங்களுக்கு இது மோசமான கொள்கை என்று நம்பினர். ஏனெனில் தொடக்கப் பதிப்புகளில் வழு நிறைந்திருக்கும். உங்கள் பயனர்களின் பொறுமையை சோதிக்க விரும்ப மாட்டீர்கள். இக்கருத்துதான் பேராலயம்-பாணி வளர்ச்சிக்கான பொதுவான நம்பிக்கையை வலுப்படுத்தியது. பயனர்கள் முடிந்தவரை குறைந்த அளவு வழுக்களைப் பார்ப்பதே முக்கிய நோக்கமாக இருந்தால், நீங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது அதைவிடக்… Read More »

FreeTamilEbooks.com பங்களிப்பாளர் இணையவழி நேர்காணல் – தேசிகன் நாராயணன் (சுஜாதா தேசிகன்)

FreeTamilEbooks.com இணையதளம் தமிழில் எண்ணற்ற புத்தகங்களை கட்டற்ற உரிமையில் (Creative Commons License) வெளியிடும் இணையதளம் அகும். இத்தளம் கணியம் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டு நடத்தி வரப்படுகிறது. இத்தளத்தில் தன் புத்தகத்தை கட்டற்ற உரிமையில் வெளியிட்ட ஆசிரியர் தேசிகன் நாராயணன் (சுஜாதா தேசிகன்) அவர்களுடன் இணையவழி நேர்காணல் நடைபெற உள்ளது. அவருடன் உரையாட விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் இணையவும். நேர்காணல் நிகழ்படப் பதிவு www.youtube.com/@TamilLinuxCommunity தளத்தில் வெளியிடப்படும். நாள்: சனி, 2023-08-12 நேரம்:… Read More »

பேராலயமும் சந்தையும் 4. பயனர்கள் இருப்பதன் முக்கியத்துவம்

பயனர்களைச் சரியாகப் பண்படுத்தினால் அவர்கள் இணை உருவாக்குநர்களாகவும் ஆகலாம் இப்படியாக நான் பாப்கிளையன்ட்டைப் பெற்றேன். அதைவிட முக்கியமாக, நான் பாப்கிளையன்ட்டின் பயனர் அடித்தளத்தைப் பெற்றேன். பயனர்கள் நமக்குத் தேவையான அற்புதமான நபர்கள். நாம் ஓர் உண்மையான தேவைக்குச் சேவை செய்கிறோம், எதையோ சரியாகச் செய்துள்ளோம் என்பதை அவர்கள் நிரூபிப்பதால் மட்டுமல்ல. சரியாகப் பண்படுத்தினால், அவர்கள் இணை உருவாக்குநர்களாகவும் ஆகலாம். யூனிக்ஸ் பாரம்பரியத்தின் மற்றொரு பலம், பல பயனர்கள் கொந்தர்களாகவும் (hackers) உள்ளனர். இதையே லினக்ஸ் நல்ல உச்சநிலைக்குக்… Read More »

FreeTamilEbooks.com பங்களிப்பாளர் இணையவழி நேர்காணல் – நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் (என்.சொக்கன்)

FreeTamilEbooks.com இணையதளம் தமிழில் எண்ணற்ற புத்தகங்களை கட்டற்ற உரிமையில் (Creative Commons License) வெளியிடும் இணையதளம் அகும். இத்தளம் கணியம் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டு நடத்தி வரப்படுகிறது. இத்தளத்தில் தன் புத்தகங்களை கட்டற்ற உரிமையில் வெளியிட்ட ஆசிரியர் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் (என்.சொக்கன்) அவர்களுடன் இணையவழி நேர்காணல் நடைபெற உள்ளது. அவருடன் உரையாட விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் இணையவும். நேர்காணல் நிகழ்படப் பதிவு www.youtube.com/@TamilLinuxCommunity தளத்தில் வெளியிடப்படும். நாள்: சனிக்கிழமை, 2023-08-05 நேரம்: காலை… Read More »

பேராலயமும் சந்தையும் 3. அஞ்சல் போய்ச் சேர்ந்தாக வேண்டும்

1993 ஆம் ஆண்டு முதல் பென்சில்வேனியாவின் வெஸ்ட் செஸ்டரில் செஸ்டர் கவுண்டி இண்டர்லிங்க் (CCIL) என்ற சிறிய இலவச இணைய சேவையகத்தின் தொழில்நுட்ப வேலையைச் செய்து வருகிறேன். நான் CCIL இன் நிறுவனர்களில் ஒருவன். எங்களின் தனித்துவமான பல பயனர் அறிக்கைப் பலகை (multiuser bulletin-board) மென்பொருளையும் நானே எழுதினேன். நீங்கள் அதை locke.ccil.org க்கு டெல்நெட் (telnet) செய்து பார்க்கலாம். இன்று இது முப்பது இணைப்புகளில் சுமார் மூவாயிரம் பயனர்களை ஆதரிக்கிறது. இந்த வேலை CCIL… Read More »

பேராலயமும் சந்தையும் 2. பேராலயமும் சந்தையும்

நூல் சுருக்கம்  மென்பொருள் பொறியியல் பற்றிய சில ஆச்சரியமான கோட்பாடுகளை லினக்ஸின் ( Linux) வரலாறு அறிவுறுத்தியது. இவற்றை சோதனை செய்வதற்காகவே நான் நடத்திய வெற்றிகரமான திறந்த மூல திட்டமான ஃபெட்ச்மெயிலைக் (fetchmail) கூறுபடுத்தி ஆய்வு செய்கிறேன். வணிக உலகில் பெரும்பாலும் “பேராலயம்” பாணியில்தான் மென்பொருள் உருவாக்கப்படுகிறது. லினக்ஸ் உலகின் “சந்தை” பாணி இதற்கு அடிப்படையிலேயே முற்றிலும் மாறுபட்டது. இந்த வேறுபட்ட வளர்ச்சிப் பாணிகளின் கோட்பாடுகளை நான் விவாதிக்கிறேன். இந்தப் பாணிகள் மென்பொருள் வழுநீக்கல் (debugging) பணியின்… Read More »

FreeTamilEbooks பங்களிப்பாளர் இணையவழி நேர்காணல் – நிர்மலா ராகவன்

FreeTamilEbooks.com இணையதளம் தமிழில் எண்ணற்ற புத்தகங்களை கட்டற்ற உரிமையில் (Creative Commons License) வெளியிடும் இணையதளம் அகும். இத்தளம் கணியம் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டு நடத்தி வரப்படுகிறது. இத்தளத்தில் தன் புத்தகங்களை கட்டற்ற உரிமையில் வெளியிட்ட ஆசிரியர் நிர்மலா ராகவன் அவர்களுடன் இணையவழி நேர்காணல் நடைபெற உள்ளது. அவருடன் உரையாட விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் இணையவும். நேர்காணல் நிகழ்படப் பதிவு www.youtube.com/@TamilLinuxCommunity தளத்தில் வெளியிடப்படும். நாள்: ஞாயிறு, 2023-07-23 நேரம்: காலை 11.30… Read More »